1-1-11 எனத்துவங்கும் இவ்வருடம் அனைவருக்கும் முதல் தரமாய் அமைய வாழ்த்துக்கள். வெறுங்கையில் வாழ்த்து சொன்னா எப்படி? இந்தாங்க... பிடிங்க பூங்கொத்து.
ஒரு சாமியார் செத்து சொர்கத்துக்குப் போனாராம். சொர்க்க வாசல் வரிசையில் (அங்கயுமா?) அவருக்கு முன்னாடி நம்ம ஆட்டோ ஓட்டுனர் மாணிக்கம் நின்று இருந்தாராம். நம்ம மாணிக்கத்தை பட்டு வேட்டி, வைரமாலை தந்து சொர்கத்தில் வரவேற்றார்கள். ஆனால் சாமியாரை நூல் வேட்டி மட்டும் கொடுத்து உள்ளே போகச் சொன்னாங்களாம். கடுப்பான சாமியார், "சாதாரண ஆட்டோ ஓட்டுனருக்கு ராஜமரியாதை. அனுதினமும் கடவுளையே நினைத்துப் பாடிக்கொண்டிருந்த எனக்கு இது தானா?" என்று சித்திரகுப்தன்கிட்ட கோவமாக் கேட்டாராம்.
நீ பாட்டுப் பாடி மக்களை தூங்க வச்ச, ஆனா இவர் வேகமா ஆட்டோ ஓட்டி கடவுளை அடிக்கடி நினைக்க வச்சார்னு சொன்னாங்களாம். இதன் மூலம் நாம தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா, யார் என்ன நிலையில் (Position) இருகிறாங்க அப்படிங்கறது முக்கியம் இல்லை என்ன பண்றாங்க (Performance) தான் முக்கியம்.
உங்கள் இலக்கைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்.
21 வருடங்களுக்கு முன்னர் பாட்டி வீட்ல இப்படி உட்கார்ந்து இருந்தவர்தான்....
இன்று உலகின் அதிகாரம் மிக்க நாற்காலியில் உட்கார்ந்து இருக்கார்.
இனிய நினைவுகளை
இதயத்தில் விதைத்து
இனிதே விடைபெறுகிறது
இரண்டாயிரத்துப் பத்து.
பதிவுல நட்புகளுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வெள்ளி, 31 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
12 comments:
THANK YOU
புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்ண்ணே..!! :-))
கலாநேசன் [சரவணன்] உங்களுக்கும், உங்கள் துணைவி மற்றும் த்யானாவிற்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். வாழ்க வளமுடன், அன்பு ஜிஎம்பி.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
:) வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!!
தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
Dear Sir happy new year!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!
கருத்துரையிடுக