Google+ Followers

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

பெயரில் என்ன இருக்கிறது?


ஒரு ஊர்ல, அதாவது கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டத்தில் உள்ள குனள்ளி (Gunalli) என்னும் ஊரில் இருக்கும் அத்தனை பேருக்கும் ஒரே பெயர் தான். சாதி,மதம்,தொழில் என பெயரில் எந்த வித்தியாசமும் இல்லை. செல்லப்பெயர், பட்டப்பெயர், குடும்பப்பெயர் என எதுவுமே கிடையாது. ஆண்கள் எல்லோரும் க்யானப்பா (Gyanappa) பெண்கள் எல்லோரும் க்யானவ்வா (Gyanavva) அவ்வளவுதான் வேறு பெயரே கிடையாது. குடும்பத்தில் குழப்பம் வராமலிருக்க பெரியவர்களை தோடா க்யானப்பா & தோடா க்யானவ்வா என்றும் சிறியவர்களை சிக்க க்யானப்பா & சிக்க க்யானவ்வா என்றும் அழைக்கிறார்கள்.

சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் பெயரினால் என்னென்ன குழப்பங்கள் வரும் என்று ஒரு கற்பனை (இது நிஜத்திலும் நடக்கலாம்)
  1. யாரைவது நீங்க பார்க்கப்போனால் எப்படித் தேடுவீர்கள்? இங்க க்யானப்பா வீடு எங்க இருக்குன்னு கேப்பிங்களா? அப்படிக் கேட்டால் உங்களை பார்வையிலேயே எரிக்கலாம் வழிசொல்லும் க்யானப்பா.
  2. இந்த ஊர் பள்ளிக்கூடத்தில் அட்டனன்ஸ் எப்படி எடுப்பாங்க?
  3. இந்த ஊரில் போஸ்ட்மேனாக வேலை கிடைத்தால் சந்தோசப்படுவீர்களா?
  4. இங்கு போட்டிகள் நடத்தத் தேவையே இருக்காது. ஏன்னா எப்போதும் எல்லா பரிசுகளும் க்யானப்பா & க்யானம்மாவிற்கே கிடைக்கும்.
  5. வீட்டில் மகளைத் திட்டுவது போல மாமியாரைத் திட்டலாம் மருமகள்.
  6. மூத்தவர் தோடா சின்னவர் சிக்கா. அப்ப நடுவில் இருப்பவர்களை எப்படி வேறுபடுத்துவது?
  7. இந்த ஊரில் கல்யாணப் பத்திரிக்கை எப்படி இருக்கும்?
நிகழும் மங்களகரமான விக்ருதி வருடம் கார்த்திகைத் திங்கள் ஐந்தாம் நாள் சுபயோகம் கூடிய சுபதினத்தில் க்யானப்பாவின் பேரன் க்யானப்பாவின் மகன் திருநிறைச்செல்வன் க்யானப்பாவிற்கு க்யானப்பாவின் (லேட்) பேத்தி க்யானப்பாவின் மகள்  திருநிறைச்செல்வி க்யானம்மாவை இல்வாழ்க்கைத்  துணைவியாக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு....

அடபோங்கப்பா. சரி இந்த பெயர் எப்படி வந்தது?
பலநூறு ஆண்டுகளுக்கு முன் க்யானேஷ்வர் என்னும் சாமியார் வாழ்ந்தாராம். அவர் இக்கிராமத்தை ஒரு பேரழிவில் இருந்து காப்பாற்றியதற்கு நன்றிசொல்லவே இப்படி பெயர் வைக்கிறார்களாம். வேறு பெயர் வைத்தால் இந்த கிராமத்திற்கு கெட்ட சக்திகளால் தீங்கு வருமென்று இன்னும் நம்புகிறார்கள் இக்கிராம மக்கள்.

இப்படி ஒரு விசயத்தில் கிராமமே ஒற்றுமையாய் இருக்கிறதே! இதே போல மரம் வளர்ப்பு, மழைநீர் சேமிப்பு, மனிதநேயம், மருத்துவ விழிப்புணர்வு போன்ற விசயங்களில் நம்மக்கள் ஒற்றுமை காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

22 comments:

சேலம் தேவா சொன்னது…

திருப்பதியிலும் பழனியிலும் போய் ஏ.. மொட்டைன்னு கூப்பிட்டா எப்டி இருக்கும்..?! அந்த மாதிரி காமெடியா இருக்குண்ணே..!!

எல் கே சொன்னது…

ஹஹாஹ் நல்ல காமெடியா இருக்கே.. உண்மையில் பல குழப்பங்கள் இருக்கும்

ரஹீம் கஸாலி சொன்னது…

புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி....பாவம் அங்கு வேலை செய்யும் போஸ்ட் மேன்

chandramohan சொன்னது…

சுவையான தகவல் கலாநேசன்..!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சுவையான பகிர்வு. பல குழப்பங்களும் நேருமே. கடைசி பத்தியில் சொன்ன விஷயம் அருமை.

G.M Balasubramaniam சொன்னது…

தெரியாத, ஆனால் சுவையான தகவல். எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ் பை வாட்டெவர் நேம் யூ கால் இட், என்பதுபோல் இருக்கிறது. உங்கள் அநுபவம் ஏதாவது உண்டா.,கலாநேசன்.?

G.M Balasubramaniam சொன்னது…

I have managed to get your postings in my dashboard. you may ignore my email to you
Best wishes. for a happy new year.

கே. பி. ஜனா... சொன்னது…

சுவையான பகிர்வு.

எம் அப்துல் காதர் சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

இளம் தூயவன் சொன்னது…

புதிய தகவல்.

கலாநேசன் சொன்னது…

@ சேலம் தேவா : அப்படித்தான்.
@ எல் கே : நிச்சயமா.
@ ரஹீம் கஸாலி : ஆமாங்க.
@ chandramohan : நன்றி.
@ வெங்கட் நாகராஜ் : நன்றி.

கலாநேசன் சொன்னது…

@ G.M Balasubramaniam : சொந்த அனுபவம் இல்லைங்க.

@ G.M Balasubramaniam : Thanks & same to you sir.

@ கே. பி. ஜனா : நன்றி.

@ எம் அப்துல் காதர் : பெற்றுக்கொண்டேன்..மிக்க நன்றி.

@ இளம் தூயவன் : நன்றி.

yohannayalini சொன்னது…

ஹஹாஹா ஒரே பெயர்.... அதுவும் வித்தியாசம்தான் இருக்கும்..சுவையான பகிர்வு.

விக்னேஷ்வரி சொன்னது…

ஹாஹாஹா... சுவாரசியமான பகிர்வு.

கோவை2தில்லி சொன்னது…

வித்தியாசமான பகிர்வு. நகைச்சுவையாகவும், அதே சமயம் கடைசி வரிகள் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.

ஹேமா சொன்னது…

சரிதான்....!

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

வித்தியாசமாய் இருப்பதில் தப்பில்லை ஆனால் ......

vanathy சொன்னது…

very funny!!!

கோமாளி செல்வா சொன்னது…

அட பாவமே , சிரிப்பாவும் இருக்கு .
அவுங்க நிலமைய நினைச்சு கஷ்டமாவும் இருக்கு .!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ஞானம் பிறந்திருக்குப்பா..:))

ஜிஜி சொன்னது…

புதிய தகவல். வித்தியாசமான பகிர்வுக்கு நன்றி

மங்குனி அமைச்சர் சொன்னது…

அட சூப்பருங்க........... எங்க ஆபிசுக்கு பாஸ்போர்ட் வந்தது அதுல பேரு என்னன்னா "பாவாடை பாவாடை "
அப்பா பேரும் பாவாடை பையன் பேரும் பாவாடை ............. என்னன்னு கேட்டா .... பாவாடை அவுங்க குலசாமியாம் . அவுங்க குடும்பத்துல பிறக்குற முதல் குழந்தைக்கு அது ஆணாக இருந்தாலும் சரி பென்னானாக இருந்தாலும் சரி பாவாடைன்னு தான் பேர் வப்பான்கலாம்

Quote

Followers