வெள்ளி, 17 டிசம்பர், 2010

கானம் மறந்த குயில்


சிட்டுக் குருவிகள் பல
வட்டமிட்ட இடத்தில்
கட்டிடங்கள் மட்டும்
கூட்டம் கூட்டமாய்...

இலக்கியங்கள் யாவையும்
இலைகளில் இயற்றிய இனமின்று
கிறுக்கிப் பார்க்கும் தாள்களுக்காய்
கிளைகள் பல ஒடிக்கின்றோம்.

கதவு மேசை நாற்காலி
கைத்தடி காகிதம் கட்டிலென
வெட்டும் தேவையோ தீராது
வேறென்ன செய்வது சிந்திப்போம்.

இப்படியோர் சட்டம்
இயற்றினால் என்ன ?
"இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!"

கணிணியில் கவியெழுதிக்
கதவைத் திறந்தால்
இணையக் கம்பியில்
இருகுயில் கண்டேன்.

வனமெல்லாம் பொலிவிழந்து
பணமாகிப் போனதனால்
கட்டிடத்தில் வசிக்கிறதோ
கானம் மறந்த குயிலின்று....

28 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மிகவும் தேவையான விஷயம். இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டிவிட்டால் பறவைகள் கூடு கட்ட எங்கே போகும்? நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி நண்பரே.

பெயரில்லா சொன்னது…

//கானம் மறந்த குயில்//
:(

//இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!//

இதையாவது செய்வோம் நாம்..

எல் கே சொன்னது…

//இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!"//

இருமரம் நட்டதாய் கணக்கு காமித்து இருக்கும் மரத்தை அளிப்பார் ..

நல்ல விஷயத்தை கவியாய் சொல்லி இருக்கிறீர்கள்

Chitra சொன்னது…

வனமெல்லாம் பொலிவிழந்து
தனமாகிப் போனதனால்
கட்டிடத்தில் வசிக்கிறதோ
கானம் மறந்த குயிலின்று....


...... சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

செல்வா சொன்னது…

//இப்படியோர் சட்டம்
இயற்றினால் என்ன ?
"இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!"/

ஆஹா , ரொம்ப அருமையான சிந்திக்க வேண்டிய கவிதை அண்ணா ..!

ADHI VENKAT சொன்னது…

சிந்திக்க வைக்கும் கவிதையாய் இருந்தது. நன்றி.

ஹேமா சொன்னது…

இயற்கை அழிந்துகொண்டிருப்பது மிகவும் மிகவும் வேதனையான விஷயம்.ஆனால் திருத்த வழி !

Paul சொன்னது…

//இப்படியோர் சட்டம்
இயற்றினால் என்ன ?
"இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!"//

இந்த சட்டம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது..!!

ரொம்ப நல்லா இருக்கு.. கவிதையை மிகவும் ரசித்தேன்..!!

VELU.G சொன்னது…

//வனமெல்லாம் பொலிவிழந்து
தனமாகிப் போனதனால்
கட்டிடத்தில் வசிக்கிறதோ
கானம் மறந்த குயிலின்று....
//

அருமை

ஜெய்லானி சொன்னது…

யோசிக்க வைத்த கவிதை

மரா சொன்னது…

அருமையான கவிதை. படிச்சவுடன் சுருக்குன்னு இருந்துச்சி. செல்போன் டவர் வந்ததுலேர்ந்து குருவி இனமே அழிஞ்சிருச்சி. போன வாரம் வண்டலூர் ஜூ போயிருந்தேன்...ரொம்ப சங்கடமாப் போச்சி. இனி அடுத்த தலைமுறைக்கு எல்லாத்தயும் புகைப்படமாத்தேன் காமிக்கனும் போல.நன்றி.

Unknown சொன்னது…

@ வெங்கட் நாகராஜ் : ஆமாங்க...காடுகளை அழித்துவிட்டு காஞ்சு கெடுக்குதே....மழை பேஞ்சும் கெடுக்குதேனா எப்படி?

@ Balaji saravana : -):, செய்வோம்.

Unknown சொன்னது…

@ LK : ஆமாங்க....வெட்டிய கெணத்த காணோம்னு வடிவேல் புகார் கொடுத்த மாதிரி நட்ட மரத்த காணோம்னு சொன்னாலும் சொல்வாங்க....

@ Chitra :நன்றி.

@ கோமாளி செல்வா :நன்றி.

@ கோவை2தில்லி :நன்றி.

Unknown சொன்னது…

@ ஹேமா : அதான் தெரியலைங்க...

@ பால் [Paul] : நன்றி

@ VELU.G : நன்றி

@ ஜெய்லானி & மரா :ரொம்ப நாளைக்கப்புறமா வந்திருக்கீங்க...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜோதிஜி சொன்னது…

மனதை கணக்கச் செய்து விட்ட வரிகள்.

உயிரோடை சொன்னது…

நல்ல கருத்து. யோசிக்க வேண்டிய விசயம்

சேலம் தேவா சொன்னது…

இப்படியோர் சட்டம்
இயற்றினால் என்ன ?
"இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!"

அருமையான யோசனைதான்.ஆனா,யாருங்கண்ணே சட்டத்த மதிக்கறாங்க..?!

Unknown சொன்னது…

//இப்படியோர் சட்டம்
இயற்றினால் என்ன ?
"இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!"
//

நல்ல யோசனை. ஆனால் இப்போதெல்லாம் சட்டத்தைத் தான் முதலில் வெட்டுகிறார்களே...

Unknown சொன்னது…

கவிதை அருமை.

தேவன் மாயம் சொன்னது…

சமூக சிந்தனையுடன் கவிதை - நன்று!

பெயரில்லா சொன்னது…

தனமாகிப் போனதனால் -

என்ற இடம் தப்பு. தனம் என்பது நல்லபடியான செல்வங்களைக் குறிப்பது என்று நினைக்கின்றேன்.

மற்றுமொருமுறை சரி பாருங்கள்

கருப்பசாமி

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமை கலாநேசன்..

Tamil cinema சொன்னது…

இப்படியோர் சட்டம்
இயற்றினால் என்ன ?
"இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!"

very nice lines...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

சிந்திக்க வைக்கும் கவிதை.. அருமை..

Unknown சொன்னது…

ஜோதிஜி : நன்றி
உயிரோடை : ஆமாங்க...
சேலம் தேவா : நாம மதிக்கலாமே...
பாரத்... பாரதி...: நன்றி
தேவன் மாயம் : நன்றி

Unknown சொன்னது…

@ கருப்பசாமி : தனந்தரும் கல்விதரும்...ன்னு அபிராமி பட்டர் பாடினதும் எனக்குத் தெரிந்த தனலட்சுமியையும் பார்க்கும் போது நீங்கள் சொல்வது சரியென்றே படுகிறது. அதனால்

"தனமாகிப் போனதனால்" என்பதை "பணமாகிப் போனதனால்"என்று மாற்றுகிறேன்.

Unknown சொன்னது…

@ தேனம்மை லெக்ஷ்மணன் : நன்றி
@ Tamil cinema : நன்றி
@ பிரஷா : நன்றி

Meena சொன்னது…

பணமும் பணத்தின் அருமையும்
மரமும் மரத்தின் கிளையில் அமர்ந்த மைனாவும்
எது பிடிக்கின்றது இந்நாளில்
மரம் தான்

Quote

Followers