இதுவரை டையலசிஸ் செய்யும் இயந்திரத்தைத் தான் நாம் செயற்கைச் சிறுநீரகம் என்று அழைத்துக் கொண்டிருந்தோம். உண்மையிலேயே உடலில் பொருத்தக் கூடிய செயற்கைச் சிறுநீரகத்தை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த (!) அமெரிக்கவாழ் ஆராய்ச்சியாளர் சுவோ ராய் (Shuvo Roy ) கண்டுபிடித்துள்ளார். முதல் கட்ட சோதனையில் வெற்றிபெற்றுள்ள இச்சாதனம் மனித உடல் ஆராய்சிகள் (Clinical Trials ) முடிந்து இன்னும் ஐந்து ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கக்கூடும்.
ஒரு காப்பிக் கோப்பை அளவுள்ள இச்சாதனம் ரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை சீராக்கவும் வைட்டமின் டி உற்பத்தி செய்யவும் கூட பயன்படுமாம்.
இந்த சாதனம் இரு பகுதிகள் கொண்டது. சிறுசிறு துளைகளுள்ள சிலிக்கான் வடிகட்டிகளால் ஆன முதல் பகுதி நச்சுப் பொருட்களை ரத்தத்திலிருந்து பிரிக்க உதவும். மனித செல்களால் ஆன இரண்டாம் பகுதி ரத்தத்தில் உள்ள உப்பு, சர்க்கரை மற்றும் நீரின் அளவை சீராக்கும்.
இந்தியாவில் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் பேர் சிறுநீரகக் கோளாறால் அவதியுறுகிறார்கள். அதி சுமார் 3500 பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. 6000 - 10000 பேர் டயலசிஸ் செய்து கொள்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. இந்த சாதனம் நடைமுறைக்கு வந்தால் மிகப் பயனுள்ளதாய் இருக்கும். தமிழ் சினிமாக்களில் சொல்வது போல நிச்சயம் இது ஒரு மெடிகல் miracle.
ஞாயிறு, 5 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
14 comments:
டையலசிஸ் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்.இது ஒரு வரப்பிரசாதம்தான்.பயனுள்ள தகவல். :)
நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி...
நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி. சிறுநீரக நோயாளிகளுக்கு கண்டிப்பா உபயோகம் ஆகும்
It will be really useful. :-)
வரவேற்க்க வேண்டிய விஷயம் சார்
பகிர்வுக்கு நன்றி .............
நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி.
புதிய தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
நல்ல விசயம் தான். பகிர்வுக்கு நன்றி
மகிழ்ச்சியான செய்திதான்..
நல்ல பயனுள்ள பகிர்வு.
இது ஒரு வரப்பிரசாதம்தான்...
பயனுள்ள தகவல்! //உடலில் பொருத்தக் கூடிய செயற்கைச் சிறுநீரகத்தை... ஒரு காப்பிக் கோப்பை அளவுள்ள இச்சாதனம்..// காபி கோப்பையளவு என்றால் அதை உடலுக்கு வெளியில்தானே பொருத்துவார்கள்?
புதிய தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி கலாநேசன் !
மிகப்பயனுள்ள தகவல் கலாநேசன். இது பற்றி மேலும் விவரம் தெரிந்தால் பதிவிடவும்
கருத்துரையிடுக