சனி, 11 டிசம்பர், 2010

மீட்டாத வீணைகள்

மன-பாடம் கற்றுத்தரும்
கல்வியின்று வெறும்
மனப்பாடம் மட்டுமே
சொல்லிக் கொடுக்கிறது.

இன்றைய ராமன்களுக்கு
திரையரங்கில் மட்டுமே
தெரிகிறது ஒளிக்கற்றை.
ராமானுஜம் படிப்பதோ
பணக்கணக்கு மட்டுமே.

படிப்புத் திட்டத்தால்
பயம் வளருமளவு
சுயம் வளர்வதில்லை.

பயன்படுத்தப் படாமலேயே
பழையதாகிப் போகின்றன
இளம்ஞான வீணைகள்.

அறிவின் துணையின்றி - வெறும்
அகவையின் துணைகொண்டே
"பெரியவர்" ஆகிறோம் நாம்.

நடைமுறைக் கல்வியை
நவிலாத படிப்பே
நடைமுறையில் உள்ளது.

பாடத்திட்டங்கள் 
புத்தகச்சுமை கூட்டினவேயன்றி
புத்திக்கு சுவை காட்டவில்லை.

முக்கால் கிணறு தாண்டவே
சொல்லிக் கொடுக்கிறது
மெக்கல்லோ.

இன்று
வியாபாரிகள் மட்டுமே
கல்வித் தந்தைகளாகி
விற்பனை செய்வதால்
விறகுக் கட்டையாகிறது
வெண்கமலக்காரியின்
வீணை.

22 comments:

Kousalya Raj சொன்னது…

//வியாபாரிகள் மட்டுமே
கல்வித் தந்தைகளாகி
விற்பனை செய்வதால்
விறகுக் கட்டையாகிறது
வெண்கமலக்காரியின்
வீணை//

ம்...அருமை...

ஆதங்கம் !!

Chitra சொன்னது…

அறிவின் துணையின்றி - வெறும்
அகவையின் துணைகொண்டே
"பெரியவர்" ஆகிறோம் நாம்.


.....அப்படி ஒரு நிலைமையில் இருந்து வேறுபட்டு நிற்க எச்சரிக்கும் கவிதைங்க. நல்லா எழுதி இருக்கீங்க.

ADHI VENKAT சொன்னது…

யதார்த்தமாக இருந்தது.

sakthi சொன்னது…

பயம் வளருமளவு
சுயம் வளர்வதில்லை.

பயன்படுத்தப் படாமலேயே
பழையதாகிப் போகின்றன
இளம்ஞான வீணைகள்.

நிஜம் தான் கலா நேசன்

தினேஷ்குமார் சொன்னது…

//வியாபாரிகள் மட்டுமே
கல்வித் தந்தைகளாகி
விற்பனை செய்வதால்
விறகுக் கட்டையாகிறது
வெண்கமலக்காரியின்
வீணை//

ஆழமான வரிகள்

சிவராம்குமார் சொன்னது…

அருமையான கவிதை!

Prabu M சொன்னது…

இந்த மாதிரி நடையில் கருத்தில் கவிதைகள் படித்து நாளாகிவிட்டதோ என்று தோன்றியது....
ரசித்தேன்... வாழ்த்துக்கள்....
உங்களைத் தொடர்கிறேன்.... மகிழ்ச்சி :)

செல்வா சொன்னது…

//இன்றைய ராமன்களுக்கு
திரையரங்கில் மட்டுமே
தெரிகிறது ஒளிக்கற்றை.
ராமானுஜம் படிப்பதோ
பணக்கணக்கு மட்டுமே.///

இன்றைய கல்வியைப் பத்தி ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க அண்ணா .!!

பத்மநாபன் சொன்னது…

கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறது .

உறைக்க வேண்டியவர்களுக்கு உறைக்க செய்யும் விதத்தில் அருமையாக வடித்த கவிதை..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கடைசி வரிகள் மனதைத் தொட்டுச் செல்கின்றன. கல்வி பயிற்றுதல் ஒரு வியாபாரமாகி விட்டதை அழகாய்ச் சொல்லிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்பரசன் சொன்னது…

வீணை அருமை...

ஸாதிகா சொன்னது…

வீணையின் நாதம் அருமை.

சிவகுமாரன் சொன்னது…

உண்மை உண்மை உண்மை.
பீஸ் கட்ட முழி பிதுங்கும்போது தானே தெரியுது.

ஹேமா சொன்னது…

வரிகள் முழுதும் மனதின் ஆதங்கம்.
வீணை அதிர்கிறது !

settaikkaran சொன்னது…

//படிப்புத் திட்டத்தால்
பயம் வளருமளவு
சுயம் வளர்வதில்லை.//

"நச்"சுனு இருக்கு இந்த வரிகள்! பிரமாதம்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை...

Unknown சொன்னது…

அருமை...

உயிரோடை சொன்னது…

மிக சரியாக சொல்லி இருக்கீங்க

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

ஆழமான வரிகள். அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்

vasan சொன்னது…

/இன்று
வியாபாரிகள் மட்டுமே
கல்வித் தந்தைகளாகி
விற்பனை செய்வதால்
விறகுக் கட்டையாகிறது
வெண்கமலக்காரியின்
வீணை./ Aha.

Unknown சொன்னது…

தலயெழுத்து ...

Meena சொன்னது…

//பயன்படுத்தப் படாமலேயே
பழையதாகிப் போகின்றன
இளம்ஞான வீணைகள்.//
உண்மை தான்
கவிதை அருமை

Quote

Followers