செவ்வாய், 7 டிசம்பர், 2010

கவிதைப் போட்டி

வணக்கம். இது கவிதைப் போட்டி தாங்க...ஆனா கவிதைகளுக்கு இடையேயான போட்டி. நீங்க இதுல கலந்துக்க முடியாது ஏன்னா...நீங்க தான் இதுல நடுவர்.

நேற்று என் தோழி "நான்... ஏன்...பிறந்தேன்." என்று தொடங்கும் வரிகளில் மூன்று வரி கவிதை எழுதச் சொன்னாள்.

நான் ஏன் பிறந்தேன்
பதில் தெரியவில்லை -உன்னைப்
பார்க்கும் வரை.
என்று சொன்னதற்கு, "நான்" என்று முதல் வரியும் "ஏன்" என்று இரண்டாம் வரியும் "பிறந்தேன்" என்று மூன்றாம் வரியும் தொடங்க வேண்டும் எனச் சொன்னாள்.

சரி. இப்போ போட்டி என்னவென்றால் நானும் என் நண்பர்கள் மூவரும் மேற்சொன்ன விதிகளில் கவிதை எழுதியுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த கவிதைகளை 1 , 2 , 3 , 4 என வரிசைப் படுத்தி பின்னூட்டமிடுங்கள். (உதாரணத்திற்கு 2 , 1 , 3 , 4)

நான் கருவறைத்தாண்டி வெளிவந்த தருணம்
ஏன் கைகளில் தந்தாய் கள்ளிப்பால் மரணம்
பிறந்தேன் பெண்ணாக - பிழையென்றால் யாரிங்கே காரணம்??


நானென்றால் நானில்லை நீ
ஏனென்றால் வேறில்லை காதல்
பிறந்தேன் உனக்கென இறக்க.


நான் எரிந்து கொண்டிருப்பது தெரிந்தும்
ஏன் அணைக்க மறுக்கிறாய் (நீரே)
பிறந்தேன் உனக்காக (நெருப்பாய்) என்பதாலா?

4
நான் மரித்தேனுன் பார்வையில்
ஏன் பார்த்தாய் மீண்டும்
பிறந்தேன் மறுமுறை.

நீங்க இதில் நடுவர்தான். ஆனாலும் போட்டி விதிகளுக்குட்பட்டு நீங்களும் எழுதலாமே....

பின்னூட்டக்கவிதைகள்  

நான் வாழ்ந்ததும்
ஏன் வீழ்ந்ததும் கூட
பிறந்தேன் உனக்காக என்பதாலே! (பாலா)

நான் விடியல் எனத்தெரிந்தும்
ஏன் விழிமூடிக் கிடக்கிறாய்
பிறந்தேன் மீண்டும் இறப்பேன் என்பதாலா?  (பாலா)

நான் நீயானேன்
ஏனென்றால்
பிறந்தேன் அதுக்காகத்தானே! (அன்புடன் மல்லிகா)

நான் உனக்குள் உறைந்தேன்
ஏன் எனக்குள் கலந்தாய்
பிறந்தேன் உனக்காவென்றா! (அன்புடன் மல்லிகா)

நான் நானாக இருக்க,
ஏன் நீ மட்டும் வேறாகப்
பிறந்தேன் (பிறந்து ஏன்) பழி தீர்க்கிறாய்.? (G M பாலசுப்ரமணியம்)

நான் தமிழனென்றேன்
ஏன் திருப்பிக்கொண்டாய்
பிறந்தேன் ஈழத்தில் என்றா ? (சிவகுமாரன்)

நான் நலமில்லை
ஏனென்று நீ கேட்காததால்..
பிறந்தேனோ நீ புறக்கணிக்கவே...(தேனம்மை லெக்ஷ்மணன்)

நான் ஏங்குகிறேன்
ஏன் தாமரையாய்
பிறந்தேன் நீரின்றி,(என நினைந்து). (காளிதாஸ்)

நான்,நான் என்ற மனம்
ஏன்,ஏன்,எனக் கேட்க
பிறந்தேன் ஞானியாய்,பிறக்கும் போதே. (காளிதாஸ்)\

நான் என்ற கர்வம் ஒழித்து
ஏன் என்று சிந்திக்க
பிறந்தேன் இவ்வுலகிலே...(ராஜி)

32 comments:

மாணவன் சொன்னது…

அருமை சார்,

இதில் எல்லாமே மிகவும் பிடித்துள்ளது

//நான் கருவைத்தாண்டி வெளிவந்த தருணம்
ஏன் கைகளில் தந்தாய் கள்ளிப்பால் மரணம்
பிறந்தேன் பெண்ணாக பிழையென்றால் யாரிங்கே காரணம்??//

வலிகளுடன் உணர்வுகளை பதிவு செய்கிறது
தொடருங்கள்.........

மாணவன் சொன்னது…

//நீங்க இதில் நடுவர்தான். ஆனாலும் போட்டி விதிகளுக்குட்பட்டு நீங்களும் எழுதலாமே.... //

நீ மட்டும் சுவாசி!
நானும் உயிர் வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்...

Unknown சொன்னது…

@மாணவன் : கவிதை நல்லா இருக்கு. ஆனா இதில் "நான்... ஏன்... பிறந்தேன் " இல்லையே.

அப்புறம் முடிவுகளில் 1 சொல்லிட்டிங்க... 2 , 3 , 4 ?

Chitra சொன்னது…

My rankings: 4 - 1 - 3 - 2

மாணவன் சொன்னது…

4 கவிதைகளுமே நல்லாருக்கு நண்பரே,

அழகான ரசனையுடன் அருமையான வரிகள்...

தொடருங்கள்.....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதைப்போட்டி என்றதும் பேனாவை எடுத்துட்டு அவசரமா வந்தேன்,ம் ம் ம்


சரி பரவால்லை.தப்பிச்சுட்டாங்க எல்லாரும்


4 , 2, 1, 3

சேலம் தேவா சொன்னது…

1-4-2-3 எல்லாமே நல்லா இருக்குண்ணே..!!

R. Gopi சொன்னது…

4,2,3,1

R. Gopi சொன்னது…

கலாநேசன், இந்த மாதிரி அடிக்கடி போடுங்க. இந்த சாக்கிலாவது நானும் தீர்ப்பு சொல்றேன்

பெயரில்லா சொன்னது…

1 - 4 - 2 - 3 :)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

எல்லாமே நல்லாயிர்ருக்கு..

நானும் முயற்சிக்கிறேன்...

உயிரோடை சொன்னது…

எழுதலாமே....

அன்புடன் மலிக்கா சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அன்புடன் மலிக்கா சொன்னது…

1.முதல் மற்றும் 4.கடைசி வரிகள் அருமை.. மற்றதும் நன்று..

இதோ நாமளும் சும்மா. எப்படியிருக்கு..

நான் நீயானேன்
ஏனென்றால்
பிறந்தேன் அதுக்காகத்தானே!

நான் உனக்குள் உறைந்தேன்
ஏன் எனக்குள் கலந்தாய்
பிறந்தேன் உனக்காவென்றா!

நான் பஞ்சானபோது
ஏன் தீயானாய்
பிறந்ததும் பற்றிக்கொள்ளவா!

குறிப்பு] மேலே உள்ள கருத்துரையில் சிறு பிழை அதான் நீக்கிவிட்டேன்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

1-4-3-2

G.M Balasubramaniam சொன்னது…

போட்டி சுவாரசியமாக உள்ளது. என் தீர்ப்பு வரிசை
1,3, 4,2. இப்போது என் பங்குக்கு என்று ஒன்று.

நான் நானாக இருக்க,
ஏன் நீ மட்டும் வேறாகப்
பிறந்தேன் (பிறந்து ஏன்) பழி தீர்க்கிறாய்.?

Unknown சொன்னது…

பரிசு ஆயிரம் பொற்காசுகளா?

ADHI VENKAT சொன்னது…

1,3,4,2.

செல்வா சொன்னது…

எனக்கு நாலாவது கவிதை பிடிச்சிருக்கு.அண்ணா .,
காரணம் அதுல மகிழ்சிய முடிச்சிருக்காங்க .,
அதே மாதிரி முதல் கவிதையும் அருமை ..
என்னோட வரிசை : 4,1,3,2

Unknown சொன்னது…

4 கவிதைகளுமே நல்லாருக்கு

சிவகுமாரன் சொன்னது…

4123

நான் தமிழனென்றேன்
ஏன் திருப்பிக்கொண்டாய்
பிறந்தேன் ஈழத்தில் என்றா ?

.....எனக்கு என்ன ரேங்க் ?

குகன் சொன்னது…

கவிதைகள் அருமை. வாழ்த்துக்கள் !! :)

Thenammai Lakshmanan சொன்னது…

நான் நலமில்லை
ஏனென்று நீ கேட்காததால்..
பிறந்தேனோ நீ புறக்கணிக்கவே..

Thenammai Lakshmanan சொன்னது…

கலாநேசன்.. உங்க போட்டியை ஃபேஸ்புக்குல ஷேர் பண்ணி இருக்கேன்..:))

போளூர் தயாநிதி சொன்னது…

நல்ல ஆக்கம் பரட்டுகளுக்குரியான

"உழவன்" "Uzhavan" சொன்னது…

எல்லாமே பிடித்துள்ளது

'பரிவை' சே.குமார் சொன்னது…

எல்லாமே நல்லாயிருக்கு...
4,3,1,2.

Thoduvanam சொன்னது…

எல்லாக் கவிதையும் அருமை.
1,4,2,3 என்ற வரிசை என் தேர்வு.
அப்புறம் நானும் என் பங்கிற்கு

நான் ஏங்குகிறேன்
ஏன் தாமரையாய்
பிறந்தேன் நீரின்றி,(என நினைந்து).


நான்,நான் என்ற மனம்
ஏன்,ஏன்,எனக் கேட்க
பிறந்தேன் ஞானியாய்,பிறக்கும் போதே.

raji சொன்னது…

நான் என்ற கர்வம் ஒழித்து
ஏன் என்று சிந்திக்க
பிறந்தேன் இவ்வுலகிலே

Unknown சொன்னது…

வாழ்த்திய நண்பர்களுக்கும், பின்னூட்டத் தீர்ப்பு சொன்ன நடுவர்களுக்கும் என் நன்றிகள்.

பின்னூட்டக்கவி எழுதிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

Unknown சொன்னது…

அந்த நாலு கவிதை யார் யார் எழுதுனது?

உங்களில் நிறைய பேருக்குப் பிடித்த முதல் கவிதையை எழுதியது என் தோழி தேவி. இரண்டாம் கவிதையை எழுதியவர் அவள் கணவர் ஸ்டானி. இது அவர் எழுதியுள்ள முதல் கவிதை. மூன்றாம் கவிதையை எழுதியது நண்பர் பாலா. நாலாவது நான் எழுதியது.

தமிழ் சொன்னது…

/சிவகுமாரன் சொன்னது…

நான் தமிழனென்றேன்
ஏன் திருப்பிக்கொண்டாய்
பிறந்தேன் ஈழத்தில் என்றா ?/


சொல்ல வார்த்தை இல்லை

Quote

Followers