Google+ Followers

சனி, 11 ஜூன், 2011

அலுவலக ஞாபகத்தில் பல்பு வாங்கும் பத்து தருணங்கள்

 லொள்ளு லொள்ளும்பாங்களே  அது இதானா?

  1. காலையில் எழுந்ததும் உங்க தங்கமணி கடைக்குப் போகச் சொல்வாங்க. பர்சை எடுத்து பாக்கெட்டில் வைத்தபின் பழக்க தோஷத்தில் ID கார்ட எடுத்து கழுத்துல மாட்டுவீங்களே!    
  2. ஒருநாளும் இல்லாத திருநாளா ஹோட்டலுக்குக் குடும்பத்தோடு சாப்பிடச் செல்வீர்கள். சாப்பிட்டு முடித்ததும் அலுவலக பழக்கத்தில் தட்டை கையிலெடுத்துக் கொண்டு கை கழுவப் போவீர்கள்!
  3. அப்படிப் போகையில் தங்கமணி முறைத்து தவறைச் சுட்டியதும் தட்டை டேபிளில் வைத்துவிட்டு கை கழுவப் போவீர்கள். அங்கு போய் அலுவலக ஞாபகத்தில் கையை நீட்டிக் கொண்டு காத்திருப்பீர்கள்....தானே தண்ணீர் வருமென்று!
  4. ரொம்ப நாள் கழித்து உங்க நண்பர் தொலைபெசியிருப்பார். ஊர் கதை உலகக் கதையெல்லாம் அடித்துவிட்டு போனை வைக்கும் போது பழக்க தோஷத்தில் 'ஓகே பை பை, ஏதாவது பிரச்சனைனா திரும்பக் கூப்பிடறேன்' என்பீர்கள்!
  5. நாள் முழுதும் அவசரம் அவசரம்னே பேசிக்கேட்ட பழக்கத்தில் வீட்டில் சாப்பிடும் போது உங்க மனைவியிடம் அர்ஜென்ட்டா ஒரு தோசை கொடு என்பீர்கள். வெந்தா தான் தர முடியும் ரொம்ப அவசரம்னா தோசைய நேரடியா தட்ல தான் வார்க்கனும்னு சொல்வாங்களே!
  6. உங்க பிறந்த நாளுக்கோ அல்லது கல்யாண நாளுக்கோ உங்க பாஸ் வாழ்த்து அனுப்புவார். அதை படிக்காமலே பழக்க தோஷத்தில் உங்களுக்கு கீழே வேலை செய்பவருக்கு "please review & discuss " என்று பார்வார்ட் செய்வீர்கள்!
  7. கைப்பேசியில் SMS எதையோ டெலீட் செய்துவிட்டு அவுட்லுக் ஞாபகத்தில் செல்போனில் "deleted items " தேடுவீர்கள்!
  8. வேக வேகமாய் வீட்டுக்கு வந்து சாவியை எடுத்து பூட்டைத் திறக்காமல் கதவு திறக்க கார்டை நீட்டுவீர்களே!  (இதை யாரும் பார்கவில்லை என்றாலும் சுயமாய்க் கொடுக்கும் சூப்பர் பல்பு இது.)
  9. ரொம்ப நாளைக்குப் பிறகு சினிமாவுக்குப் போயிருப்பீங்க. இடைவேளையின் போது உங்க மனைவி டைம் என்னங்கன்னு கேட்பாங்க. அதுக்கு நீங்களோ கடிகாரம் பார்க்காமல் திரையின் வலது புறம் கீழ் மூலையைப்  பார்ப்பீர்கள்! 
  10. ரொம்ப நாள் யோசிச்சு இந்த மாதிரி ஒரு ஐடியா க்ளிக்காகும். சரி ஒரு பதிவ தேத்தலாம்னு ஜிமெயில் லாகின் செய்வீர்கள். பாஸ்வார்ட் இன்வாலிட் என்று வரும். அப்ப தான் தெரியும் நீங்க போட்டது ஆபீஸ்  USER ID என்று!
இந்தப் பத்தில் ஐந்து உங்களுக்கு நடந்திருந்தால்....அட நீங்க நம்மாளு!


49 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Very true . .

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

5 ila 7 enaku nadanthuruku. . .

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

எல்லோருக்குமே ஏதோ ஒரு சமயத்திலாவது இதுபோல கட்டாயம் நடந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நான் இதில் நாலைந்து பல்புகள் வென்றுள்ளேன்.

எனக்குத்தெரிந்த உயர் மேலதிகாரியொருவர்,ஒரு விடுமுறை நாளில், கார் பார்க் செய்துவிட்டு, ஷாப்பிங் போய் வந்தபின், வரிசையாக அடுத்தடுத்து 3 மாருதி கரும்பச்சைக்கார்கள் நிற்க, தன்னுடைய கார் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் என்ன்வென்று செக்ரெடரிக்கு போன் செய்து, கேட்டபிறகே, தன்னுடைய காரில் ஏறி புறப்பட்டு வந்தார். இதுபோன்ற மிகச் சாதாரண விஷயங்களில், அவ்வளவு ஞாபகமறதியும், அலட்சியமும் அவருக்கு.

thendralsaravanan சொன்னது…

பல்பு சூப்பர்!

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…

சூப்பர்!

சுரேகா.. சொன்னது…

ஆஹா.. நல்லா இருக்கு!

பின்னியிருக்கீங்க!
சொந்த அனுபவம் அதிகம் இருக்கும்போல?

:)

தினேஷ்குமார் சொன்னது…

ஆஹா பல்பு பல்பு

எஸ் சக்திவேல் சொன்னது…

>உங்க பிறந்த நாளுக்கோ அல்லது கல்யாண நாளுக்கோ உங்க பாஸ் வாழ்த்து அனுப்புவார். அதை படிக்காமலே பழக்க தோஷத்தில் உங்களுக்கு கீழே வேலை செய்பவருக்கு "please review & discuss " என்று பார்வார்ட் செய்வீர்கள்!

உங்கள் தங்கமணி "செல்லமாக" ஒரு email அனுப்புவாள்.அதை படிக்காமலே பழக்க தோஷத்தில் உங்களுக்கு கீழே வேலை செய்பவருக்கு "please review & discuss " என்று பார்வார்ட் செய்வீர்கள்!

கொஞ்சம் மாற்றினேன், ஹீ, ஹீ :-)

G.M Balasubramaniam சொன்னது…

பல்புகள் வாங்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இருந்தாலும் இதையெல்லாம் தம்பட்ட மடிக்கலாமா.?

கலாநேசன் சொன்னது…

@ "என் ராஜபாட்டை"- ராஜா : Thank you

கலாநேசன் சொன்னது…

@ வை.கோபாலகிருஷ்ணன் : வாஸ்தவம் தாங்க...சிலருக்கு அலட்சியம் பலருக்கு வேலையைத் தவிர வேறெதுவும் நினைக்க முடியாத வாழ்க்கை....

கலாநேசன் சொன்னது…

@ thendralsaravanan :நன்றி!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஹா ஹா ஹா

சி.கருணாகரசு சொன்னது…

இதெல்லாம்..... வாழ்க்கையில் இயல்புதான்.... ஆனா இதையாராவது பார்த்துவிட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஒரு பெரு மூச்சு விடுவோமே.............

பெயரில்லா சொன்னது…

5 வது பாயிண்ட் அனுபவம் உண்டு.

9 வது பாயிண்ட் ஒரு இடத்தில் சட்டென்று படிக்கும்போது பொருள் மாறுபடுகிறது...

நிரூபன் சொன்னது…

சகோ, சேம் சேம் பப்பி சேம்,
நானும் உங்க கட்சி தான்.
எனக்கும் இப்படி அனுபவங்கள் நடந்திருக்கு சகோ.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

:))))))) ”பல்பு வாங்கலியோ பல்பு….” நிறைய வாங்கிட்ட மாதிரி இருக்கு… நல்ல நகைச்சுவை நண்பரே.

கலாநேசன் சொன்னது…

@ தோழி பிரஷா : நன்றி!

கலாநேசன் சொன்னது…

@ சுரேகா : ஆமாங்க..

கலாநேசன் சொன்னது…

@ தினேஷ்குமார் : நன்றி!

கலாநேசன் சொன்னது…

@ எஸ் சக்திவேல் : இது நல்லா இருக்கே...content பார்கலேன்னா பரவாயில்லை. அனுப்பினதே யார்னு பார்க்கலைன்னா அது ரொம்பத் தப்பு.

Ramani சொன்னது…

பல்பு வாங்கியதும் புறமண்டையில் ஒருதட்டும்
நாக்கை ஒரு கடி கடித்தும்
அடுத்த முறையும் அதே மாதிரி செய்ய நேர்வது
எல்லோரும் நம் மாதிரிதான் என
அனவருக்கும் ஆறுதல் சொல்லிப்போகும் சூப்பர் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

மாதேவி சொன்னது…

:)))

கோவை2தில்லி சொன்னது…

பல்புகள் நல்லாவே இருக்குங்க.!!

உலக சினிமா ரசிகன் சொன்னது…

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Abu Sana சொன்னது…

பல்பு வாங்கி இருந்தா பரவைல்லைங்க என் நண்பன் ஒருத்தன் பெரிய பெரிய டூயுப் லைட் எல்லாம் வாங்கி இருக்கான் ..........உதரணத்துக்கு.........ஒரு முறை நாங்கள் நண்பர்களாக ஒரு காரில் (துபாயில்) சென்று கொண்டிருந்தோம், நான் செல்லவேண்டிய இடம் வலது பக்கத்தில் உள்ளது, அதற்க்கு அந்த பலப் வாங்கியவன் சொன்னான் " நேரா போய் யு டர்ன் அடிக்கனும்னு" அவ்வளவு தாங்க..................அவனை ஒரு வழி பண்ணிட்டோம்.

Rajan சொன்னது…

பத்து பல்பும் வாங்கின எனக்கு ஏதாவது பரிசு உண்டா? #same blood

vidivelli சொன்னது…

!!!ஆஹா..பல்பு நல்லா இருக்கு!

நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கிறது

ஹேமா சொன்னது…

அட....நீங்களுமா !

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

ஹிஹி நம்மள மாதிரி கம்ப்யூட்டர் அடிக்ட் 5 பல்பாவது வாங்காம இருந்தாதான் அதிசயம். அது சரி தட்டு கழுவி வைக்கிறீங்களா.. எங்க ரங்கமணிகிட்ட இந்த அதிசய தகவல சொல்லணுமே. எங்க அந்த போனு..:)

கலாநேசன் சொன்னது…

@ G.M Balasubramaniam : யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

கலாநேசன் சொன்னது…

@ சி.பி.செந்தில்குமார் : ஹி ஹி அதே தாங்க தமாசு தமாசு.

கலாநேசன் சொன்னது…

@ சி.கருணாகரசு : சரியாச் சொன்னீங்க... நம்ம பக்கம் ரொம்ப நாள் கழிச்சு வரீங்க போல...

கலாநேசன் சொன்னது…

@ She-nisi : 5 வது மட்டும் தானா....

9 வதை கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்.

கலாநேசன் சொன்னது…

@ நிரூபன் : ஆமாம் சகோ. All the donkeys are in our name.

கலாநேசன் சொன்னது…

@ வெங்கட் நாகராஜ் : ஆமாம் நண்பரே. நன்றி.

கலாநேசன் சொன்னது…

@ Ramani :சரியாச் சொன்னீங்க...மிக்க நன்றி.

கலாநேசன் சொன்னது…

@ மாதேவி : !

கலாநேசன் சொன்னது…

@ கோவை2தில்லி : நன்றி சகோ.

கலாநேசன் சொன்னது…

உலக சினிமா ரசிகன் : விளம்பரமெல்லாம் சரி. இந்தப் பதிவைப் பற்றி உங்க கருத்து என்ன?

கலாநேசன் சொன்னது…

@ Abu Sana : இது போல் நம் வாழ்வில் நிறைய நடக்கும். thanks

கலாநேசன் சொன்னது…

@ Rajan :இந்தப் பதிவே நம்மள மாதிரி பல்ப் வாங்கரவங்களுக்குப் பரிசுதாங்க...

கலாநேசன் சொன்னது…

@ vidivelli : நன்றி. நிச்சயம் வருகிறேன்.

கலாநேசன் சொன்னது…

@ ஹேமா : ஆமாங்க அப்பப்போ...

கலாநேசன் சொன்னது…

@ தேனம்மை லெக்ஷ்மணன் : அட தப்பா புரிஞ்சுகிட்டிங்க.... நாங்க ஆபீஸ்லல்லாம் தட்டு கழுவறது இல்லைங்க. தட்ட வாஷிங்க்ல போடறத சொன்னேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பத்து பல்பும் டியூப் லைட்டாக பிரகாசமாக இருக்கின்றன. ஒளிமயமான் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் சொன்னது…

பத்து பல்புகளையும் ஒருங்கே பெற்றவன் பாக்கியவான். ஒளிமயமான எதிர்காலத்துக்கு ஆயுட்கால உத்தரவாதம் :-)))))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

பல்புகள் அனைத்தும் பிரகாசம், அதிலும் please review & discuss ரியலி ராக்ஸ்

கலாநேசன் சொன்னது…

@ இராஜராஜேஸ்வரி : மிக்க நன்றி

@ அமைதிச்சாரல் : மிக்க நன்றி

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): மிக்க நன்றி

Quote

Followers