சனி, 1 ஜனவரி, 2011

பு(ன்ன)கைப்படம்

கொஞ்சமாய்த் தெரியும்
மஞ்சள் சூரியன்
பிஞ்சுக் குழந்தையின்
பஞ்சுநிகர்ப் பாதங்கள்.

நினைத்ததைக் காட்டும்
நீலவானக் கண்ணாடி.
விமானப் பயணத்தில்
வெளியேத் தெரியும் வெளி.

திரையிட்டு மறைத்தாலும்
தெரிகின்ற கண்கள்.
நுரையிட்டு நம்காலை
நுகர்கின்ற அலை.
கால்தடப் பொட்டுவைத்து
கரையிடும் கோலம்.

திருமண தினத்தின்
தித்திக்கும் நிமிடங்கள்.
இருவயது மகளின்
அறுசுவைக் குறும்புகள்.

உள்ளங்கையில் தாஜ்மகால்
உச்சந்தலையில் குதுப்மினார்
பச்சைவயற் பயிர்கள்
பறக்கின்ற உயிர்கள்
மொட்டை மாடியில்
முளைத்த மரம்.

இப்படி எனக்குப்
பிடித்த படங்களும்- நான்
பிடித்த படங்களும்
ஏராளம் இருந்தாலும்...

கரும்பு தினமொன்றில்
விரும்புவதைச்சொல்லிவிட்டு - நீ
புன்னகையில் வெட்கம்கலந்தோர்
புதுப்பார்வை பார்த்தாயே
அந்நொடியை படம்பிடித்து
உள்ளத்தில் மாட்டியுள்ளேன்
உயிராணி துணைகொண்டு...

இன்னல் வரும்போது
இருவிழி மூடியுன்
புன்னகையைப் பார்த்தாலே
புதுத்தெம்பு கிடைக்குதடி.
போகுதடித் துன்பமெல்லாம்
போனதிசை தெரியாமல்...

22 comments:

ஸாதிகா சொன்னது…

//இன்னல் வரும்போது
இருவிழி மூடியுன்
புன்னகையைப் பார்த்தாலே
புதுத்தெம்பு கிடைக்குதடி.
போகுதடித் துன்பமெல்லாம்
போனதிசை தெரியாமல்...
// அருமையான கவிதை

G.M Balasubramaniam சொன்னது…

’உள்ளத்தில் மாட்டி உள்ளேன் உயிராணி துணைகொண்டு” ஆஹா..அழகான வார்த்தை விலையாட்டு. ரசித்தேன். வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

பிறக்கிற 2011 இன்னும் நிறைந்த பதிவுகளைத் தரட்டும்.வாழ்த்துகள் கலாநேசன்!

புன்னகை எங்களுக்கும் புரிகிறது காதலோடு !

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!!!

VELU.G சொன்னது…

//கரும்பு தினமொன்றில்
விரும்புவதைச்சொல்லிவிட்டு - நீ
புன்னகையில் வெட்கம்கலந்தோர்
புதுப்பார்வை பார்த்தாயே
அந்நொடியை படம்பிடித்து
உள்ளத்தில் மாட்டியுள்ளேன்
உயிராணி துணைகொண்டு...
//

excellent

ரொம்ப அருமை

Unknown சொன்னது…

புகைப்படங்கள் தரும் நினைவோடைகள் ...

Unknown சொன்னது…

கலாநேசன் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

அழகான விஷயங்களையெல்லாம் வரிசைப்படுத்தி, அதை "அந்த" பெண்ணின் புன்னகையுடன் ஒப்பிட்டு, பெருமைப்படுத்தி இருப்பது நன்றாக இருக்கிறது.

R. Gopi சொன்னது…

super

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிய புத்தாண்டின் முதல் தினத்தில் காதலாய் வார்த்தை விளையாட்டு. அருமை கலாநேசன். வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

புதுவருட வாழ்த்துக்கள்...

vanathy சொன்னது…

Nice one.

தமிழ் சொன்னது…

/விரும்புவதைச்சொல்லிவிட்டு - நீ
புன்னகையில் வெட்கம்கலந்தோர்
புதுப்பார்வை பார்த்தாயே
அந்நொடியை படம்பிடித்து
உள்ளத்தில் மாட்டியுள்ளேன்
உயிராணி துணைகொண்டு...

இன்னல் வரும்போது
இருவிழி மூடியுன்
புன்னகையைப் பார்த்தாலே
புதுத்தெம்பு கிடைக்குதடி.
போகுதடித் துன்பமெல்லாம்
போனதிசை தெரியாமல்.../

அருமை

மாதேவி சொன்னது…

உள்ளத்தில் மாட்டிய காதல் இனிது.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

ரொம்ப அருமை

தினேஷ்குமார் சொன்னது…

இன்னல் வரும்போது
இருவிழி மூடியுன்
புன்னகையைப் பார்த்தாலே
புதுத்தெம்பு கிடைக்குதடி.

அருமையான வரிகள் நல்லாருக்கு ....

ரிஷபன் சொன்னது…

புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
அருமையான கவிதையுடன் பிறந்து விட்டது!

சக்தி கல்வி மையம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

வாழத்துக்கள் சதம் அடித்ததுக்கு.1000 அடிக்க வாழ்த்துக்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
கிமு

அன்புடன் மலிக்கா சொன்னது…

அருமையான கவிதை
புன்னகையோடு புகைப்படம் எடுத்தது..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

போகுதடித் துன்பமெல்லாம்
போனதிசை தெரியாமல்...//
அருமை வரிகள். வாழ்த்துக்கள்.

Quote

Followers