வியாழன், 27 ஜனவரி, 2011

பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-1

பாரதி!

தமிழ் இலக்கியத்தின் உயிர் எழுத்துக்களில் ஒருவன். தாளக்கட்டுகளுக்கு மட்டும்  தலையாட்டிக் கொண்டிருதவர்களின் காதைத்திருகி புதுக் கவிதை காட்டியவன். அவன் இறந்து 50 வருடங்கள் ஆனபின்னும், ஏன் இன்றும் கூட "ஏன் மரபை மீறுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு பாரதி மீறினான் என்பதே பதிலாய் இருக்கிறது. அவன் பெண்ணியப் பெருங்கவி, விடுதலை வீரன், புதுமைக்காதலன், புரட்சியாளன், எட்டயபுரத்தில் கொட்டிய முரசு.

"நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
அறம் பாடவந்த அறிஞன் - புதிய
மறம் பாட வந்த மறவன் " என்ற பாரதிதாசனின் வரிகளைச் சொல்லி என் பள்ளி நாளொன்றில் சேலம் தமிழ்ச்சங்கத்தில் பேசிய நாளிலிருந்தே பாரதி பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டுமென்பதென் ஆசை. அது அண்மையில் நிறைவேறியது. 11 .01 .11 அன்று இரவு சேலத்தில் இருந்து திருநெல்வேலி கிளம்பினேன்.

திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி போனேன். கோவில்பட்டியில் இறங்கிய பின்தான் நினைவுக்கு வந்தது என் கேமராவின் பேட்டரி வீட்டிலேயே (சேலத்தில்) விட்டு வந்தது. ஒருமணி நேரம் கோவில்பட்டியின் கடைவீதிகளில் அந்த எட்டாத கனிக்காய் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன். பின் என் கைப்பேசிக் கேமராவே நல்ல படமெடுக்கும் என்ற ஞானம் வந்தவனாய் தூத்துக்குடி பேருந்தில் ஏறினேன்.

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது எட்டயபுரமென்னும் கிராமம். முத்து சோளப்பயிர்களையும் முட்புதர்களையுமே வழியெங்கும் காண முடிந்தது. எட்டயபுரத்தில் இறங்கியதும் பாரதி வீட்டை ஓர் ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்தேன். அவர் நடந்து போகும் தொலைவிலுள்ள வீட்டில் இருபது ரூபாய் வாங்கிக்கொண்டு இறக்கிவிட்டார்.வழியில் உள்ள பெயர்ப் பலகைகளில் எட்டயபுரம், எட்டயாபுரம், எட்டய்யபுரம் என்று வித விதமாய் எழுதி என்னை யோசிக்க வைத்தார்கள். கோவிலுக்கு அருகில் எட்டு அய்யர்களின் குடும்பங்கள் வாழ்ந்த கிராமம் தான் எட்டயபுரமோ (எட்டு + அய்யர் + புரம்) என்ற எண்ணம் எழுந்தது. வரலாறு படித்த வல்லுனர்களும் நன்னூல் படித்த நல்லவர்களும் இதை சரி பார்க்கலாம்.

அந்தப் பெருங்கவி பிறந்த வீடு ஒரு அருங்காட்சியகமாய் இருக்கும் என்று போன எனக்கு ஆச்சர்யமே கிடைத்தது. அந்தக் கவிராஜனை காணப் போன என்னை வெறும் மேசை, நாற்காலியே வரவேற்றது. அதன் மீது ஒரு வருகைப்பதிவேடு. அதில் நாளொன்றுக்கு சுமார் 20 - 25 கையெழுத்துகள் பதிவாகியிருந்தன. வெளிச்சுவற்றில் பாரதியின் படம் அதனருகில் "திராவிடர் இயக்கம் ஒருகாலத்தில் பாரதியை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் திராவிடர் இயக்கம் இன்று பாரதியை ஏற்றுக்கொள்வது பாரதி பெற்ற பெருமை" என்ற கலைஞரின் வசனம். கீழே பாரதி பிறந்த வீட்டை அரசுடைமையாக்கியதற்கான கல்வெட்டு.

இன்னொரு புறம் இன்னுமோர் கல்வெட்டு அதில் பாரதியின் சிறப்பாய் பதிந்திருக்கிறார்கள் பாருங்கள்...

முதல் உள்ளறையில் பாரதி பிறந்த இடத்தில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் உள்ளறையில் சுவரெங்கும் புகைப்படங்கள். அதில் பாரதியின் குடும்ப வரைபடம், துணைவியார் செல்லம்மாவுடன் பாரதி, மூத்த மகள் தங்கம்மாள், இளைய மகள் சகுந்தலா, இந்தியா இதழின் முகப்பு அட்டை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம், அரசியல் குரு திலகர், ஆன்மீக குரு நிவேதிதா, குவளைக்கண்ணன், சோமசுந்தர பாரதியார், பாரதிதாசன், நெல்லையப்பர், நெல்லையில் கல்வி பயன்ற இந்துக்கல்லூரி பள்ளி இன்னும் சில புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. அவற்றுள் சில உங்களுக்காக...

இந்தியா இதழின் அட்டைப்படம் 

பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம்

புதுச்சேரி நாட்களில் இருந்து கடைசிவரை கூடவே இருந்த குவளைக்கண்ணன்

பாடல்களை பதிப்பித்த நெல்லையப்பர் 

காலக்கடிகாரமும் பாரதியின் காதல் கடிகாரமும்

காரைக்குடியில் பாரதியார்

நெல்லையப்பருக்கு பாரதியின் கடிதம்  

இந்த வண்ணம் உதிர்ந்த சுவற்றில் மாட்டப்பட்டுள்ள உள்ளம் உருக்கும் பாரதியின் கடிதம் அடுத்த பதிவில்...



25 comments:

எல் கே சொன்னது…

நல்ல பகிர்வு

ஸாதிகா சொன்னது…

அருமையான படங்களுடன் நல்ல தகவல்கள்.பகிர்வுக்கு நன்றி.

உயிரோடை சொன்னது…

நெகிழ்வான பதிவு. திருவல்லிகேணியில் பாரதி வசித்த இடம் எதுவென்று தேடி பார்த்து ஏமார்ந்தேன்.

துளசி கோபால் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.

//துணைவியார் செள்ளம்மாவுடன் பாரதி, //

செல்லம்மா என்று இருக்கவேண்டாமா?

போனமாதம் சென்னையில் பாரதி வாழ்ந்த இல்லத்துக்குச் சென்று வந்தேன்.

சுட்டி இங்கே.

http://thulasidhalam.blogspot.com/2011/01/blog-post_05.html

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு கலாநேசன். படங்கள் மூலம் நானும் பாரதியின் வீட்டைப் பார்த்தது போன்ற உணர்வு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான படங்களுடன் நல்ல தகவல்கள்.

raji சொன்னது…

எங்களையும் பாரதி வீட்டிற்கு அழைத்துச்
சென்றமைக்கு நன்றிகள் பல

Unknown சொன்னது…

தமிழில் எழுதப்படும் அனைத்துக் கவிதைகளும் பாரதியின் நினைவுச் சின்னங்களே...!

பின்னோக்கி சொன்னது…

அடுத்த பகுதியைப் படிக்க ஆவலாக இருக்கிறது. நிறைய புகைப்படங்களுக்கு நன்றி.

R. Gopi சொன்னது…

சிறப்பான பதிவு கலாநேசன். அடுத்தமுறை திருநெல்வேலி பக்கம் போகும்போது அவசியம் போய்ப் பார்க்கவேண்டும்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

நல்ல பதிவு கலாநேசன்.பாரதி வீடு செல்லப் பாக்கியம் செய்திருக்கிறீர்கள்.

தூயவனின் அடிமை சொன்னது…

நல்ல பகிர்வு.

Philosophy Prabhakaran சொன்னது…

புகைப்படங்கள் அருமை... அதனினும் முதல் சில பத்திகளில் வார்த்தை விளையாட்டு அருமை...

Unknown சொன்னது…

எல் கே : நன்றி நண்பா...

ஸாதிகா: நன்றி

உயிரோடை : நன்றி.பார்த்தசாரதி கோவிலுக்கு பக்கத்துல தாங்க..விவரம் உங்களுக்கு அடுத்த பின்னூட்டத்தில் உள்ளது.

Unknown சொன்னது…

@ துளசி கோபால் : தட்டச்சுப் பிழையைத் தவிர்க்க முயல்கிறேன். சுட்டியமைக்கு நன்றி. உங்கள் பதிவு படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

@ வெங்கட் நாகராஜ் : நன்றி நண்பரே..

@ சே.குமார் : நன்றி

@ raji : நன்றி

Unknown சொன்னது…

@ வைகறை :ஆமாங்க...

@ பின்னோக்கி : வாங்க வாங்க....

@ Gopi Ramamoorthy :நிச்சயம் பாருங்கள்...

Unknown சொன்னது…

@ எம்.ஏ.சுசீலா : ஆமாம் அம்மா...

@ இளம் தூயவன் : நன்றி

@ Philosophy Prabhakaran : நன்றி

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு. உங்களுடன் நாங்களும் பாரதியின் இல்லத்திற்கு சென்று வந்தது போல் உள்ளது.

vanathy சொன்னது…

super post.

arasan சொன்னது…

நல்ல பதிவை வழங்கிய உங்களுக்கு அன்பு நன்றிகள் பல ./..

பத்மநாபன் சொன்னது…

அலை பேசியின் கேமிரா கொண்டே அற்புதமாய் மகாகவியின் நினவில்லத்தை கண் முன்னே நிறுத்திவிட்டீர்கள் ... யான் பெற்ற இன்பம் வையகமும் பெருக என பகிர்ந்திட்ட உங்களுக்கு நன்றிகள் ....

ப.கந்தசாமி சொன்னது…

வந்தேன், பார்த்தேன், படித்தேன், வருந்தினேன்.

ஹேமா சொன்னது…

பிந்திப் பார்த்தாலும் அருமையான பதிவு.
காலப்பொக்கிஷம்.நன்றி கலாநேசன் !

சிவகுமாரன் சொன்னது…

உள்ளம் சிலிர்க்கிறது நண்பா.
என் 23 வது வயதில் சொற்ப சம்பளத்தில் புதுவையில் வேலை பார்த்த போது புதுவை பாரதி நினைவிடத்தை பார்த்த கையோடு எட்டயபுரம் தேடிப் போனது நினைவுக்கு வருகிறது.
பகிர்வுக்கு நன்றி

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

Quote

Followers