வெள்ளி, 21 ஜனவரி, 2011

சாளர இருக்கை

சாளர இருக்கை கிட்டின் 
சாதித்த உணர்வு தோன்றும் 
துண்டு மேகம் பார்க்க
துடைத்துவைத்த வானம் பார்க்க 
வண்டுகள் பறக்கப் பார்க்க 
வட்ட நிலவு பார்க்க 
நகர்கின்ற மரங்கள் பார்க்க 
நட்சத்திரக் கூட்டம் பார்க்க 
தகதகவென மாலையில் மின்னும் 
தங்கச் சூரியன் பார்க்க 
நடைமேடைக் கடைகள் பார்க்க 
நகைத்திடும் குழந்தைகள் பார்க்க 
தடையில்லாப் பறவைகள் பார்க்க 
தலைகோதும் தென்றல் பார்க்க 
சாளர இருக்கை கிட்டின் 
சாதித்த கர்வம் தோன்றும்.

24 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

நல்லா இருக்கு சார்... கிட்டியதா அந்த இருக்கை...

சேலம் தேவா சொன்னது…

சாளர இருக்கை கிடைச்சா இதுவரைக்கும் தூங்கிட்டே இருந்துட்டேன்.நீங்க நல்ல ரசிகர்ண்ணே..!! :-)

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமை....

எல் கே சொன்னது…

ஊருக்கு போக வர சாளர இருக்காய் கிடைத்ததா

பெயரில்லா சொன்னது…

ஜன்னலோர இருக்கையோட சிறப்பைச் சொல்லி கவிதை சிறப்படையுது பாஸ்! :)

தினேஷ்குமார் சொன்னது…

நல்லாருக்கு சார்

Chitra சொன்னது…

very nice.

Unknown சொன்னது…

குழந்தைகள் பறித்துக்கொள்ளும் சாளர இருக்கைகளை இப்போது ...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஜன்னலோர பயணத்தில் முகத்தில் காற்று வீசி கண்களை மூட முயல, அதை எதிர்த்து, கண்ணைத் திறந்து இத்தனை விஷயங்களை ரசிக்க முயல்வது எத்தனை அழகு! பகிர்வுக்கு நன்றி கலாநேசன்.

விக்னேஷ்வரி சொன்னது…

அட, ஆமால்ல. இது ஒரு சின்னக் குழந்தையின் மனநிலை. இது வாய்க்கக் கிடைப்பது வரமே.

ADHI VENKAT சொன்னது…

அருமை.

க.பாலாசி சொன்னது…

நல்ல கவிதைங்க... அடிச்சிப்பிடிச்சி சாளர இருக்கையில உட்காந்திருக்கிற சிலர் கொறட்டை விட்டு தூங்கிறதப்பாத்தா எரிச்சலாவரும்..

Sriakila சொன்னது…

nice one!!

பத்மா சொன்னது…

எனக்கும் தான் ....நல்லா இருக்குங்க

உயிரோடை சொன்னது…

ஜன்னலோர பயணம் எல்லோருக்கும் பிடித்த ஒன்று அருமையாக எழுதி இருக்கிங்க நல்லா இருக்கு

G.M Balasubramaniam சொன்னது…

One must be born lucky to get a window seat in real life. I sometime feel jealous of some dogs traveling in cars, whereas some downtrodden struggle to make both ends meet. I am not able to avoid thinking like this when you list the pleasures of travel occupying a window seat.

தூயவனின் அடிமை சொன்னது…

அருமை.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

கவிதை ரொம்ப நல்லாருக்கு !

raji சொன்னது…

எத்தனை வயது ஆனால்தான் என்ன?
சாளர இருக்கைக்கு மனம் ஆசைப்படுவது மாறுவதில்லை ரசனை இருக்குமட்டில்.
கவிதை அற்புதம்

சிவகுமாரன் சொன்னது…

அந்த இருக்கைக்காக எனக்கும் என் மகனுக்கும் போட்டியே வரும். இறுதியில் நடுவராய் வரும் என் மனைவி ஜெயித்து விடுவாள்.
மிக அருமையான கவிதை.
நான் எழுத நினைத்தது . முந்திக் கொண்டீர்கள்.

ஹேமா சொன்னது…

கிடைத்துவிட்டால்....அந்தச் சந்தோஷம்.ஆனால் கிடைப்பது குறைவு !

"உழவன்" "Uzhavan" சொன்னது…

நல்ல ரசனை

Thenammai Lakshmanan சொன்னது…

நிஜம்தான்.. சாதனை பண்ணிட்ட மாதிரி இருக்கும்..:))

கவி அழகன் சொன்னது…

பிரயோசனமான கவிதை ஜோசிக்க வைக்குது

Quote

Followers