வியாழன், 23 டிசம்பர், 2010

வானவில் மனிதர்கள்

அமுதத்தமிழ் கடலின்
அலைகளில் விளையாடும்
சிறுவன் நான்.
விரைவில் பயில்வேன்
இலக்கண நீச்சல் - பின்
விலகிப் போகும்
"செய்யுள்"  காய்ச்சல்.

இணையத்திரை  வானில்
இனிக்கும் நட்புகளே -நீங்களென்னை
வாழ்த்தி வளர்க்கும்
வானவில் மனிதர்கள்.

பனித்துளி கவிதைகளை
பகலவன் என்றுசொல்லி
பாராட்டி பாராட்டி
பதிவெழுத வைப்பவர்கள்.

தொடர்ந்து படிக்கும்
தொண்ணூறு பேருக்கும்
நடுநடுவே வந்து
நல்வாழ்த்து சொல்வோருக்கும்
நன்றி...நன்றி!

19 comments:

எல் கே சொன்னது…

ஐம்பதிற்கு கவிதை... வாழ்த்துக்கள். மேலும் பல நல்ல பதிவுகளைத் தாருங்கள் கலா நேசன்

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!
//"செய்யுள்" காய்ச்சல் // :)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வாழ்த்துக்கள்

vanathy சொன்னது…

congrats, Bro.

சேலம் தேவா சொன்னது…

100 வது கவிதைக்கும் கவிதை எழுதி கலக்குங்கண்ணே..!!

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

விரைவில் பயில்வேன்
இலக்கண நீச்சல்//

ஆகா முத்துலிங்கம் சொன்னமாதிரி மரபுக்கவிதைகள் ஆரம்பிக்கபோறீங்களா..
எழுதுங்க எழுதுங்க..:)
வாழ்த்துக்கள் வளர்க ..

தினேஷ்குமார் சொன்னது…

நல்லாருக்கு வாழ்த்துகள் நண்பரே

sakthi சொன்னது…

வாழ்த்துக்கள்:)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஐம்பதிற்கு வாழ்த்துக்கள் கலா! மேலும் பல நூறு கவிதைகள் எழுதி கலக்க வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் சொன்னது…

அதிகாலை பனித்துளியை அருந்தி மகிழுமாம் முயல்கள். உங்கள் பனித்துளி விரும்பும் முயல் நான் நண்பரே .வாழ்த்துக்கள்

செல்வா சொன்னது…

//தொடர்ந்து படிக்கும்
தொன்னூறு பேருக்கும்
நடுநடுவே வந்து
நல்வாழ்த்து சொல்வோருக்கும்
நன்றி...நன்றி!
//

அட எனக்கு கூட நன்றி சொல்லிருக்காங்க ..!!

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் நேசன்.

பல நூறு கவிதைகள் எழுதி கலக்க வாழ்த்துக்கள்.

ADHI VENKAT சொன்னது…

விரைவில் 100 வது கவிதையை வெளியிட வாழ்த்துக்கள்.

arasan சொன்னது…

தொடர்ந்து கலக்குங்க ...

மாணவன் சொன்னது…

உங்கள் கவிதைப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சார்

Unknown சொன்னது…

முதல் பத்தி பிரமாதம் ...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

வாழ்த்துக்கள்

அன்புடன் நான் சொன்னது…

உங்க கவிதை கல்வெட்டுங்க.... பாராட்டுக்கள்.

Meena சொன்னது…

''பனித்துளி கவிதைகளை
பகலவன் என்றுசொல்லி
பாராட்டி பாராட்டி
பதிவெழுத வைப்பவர்கள்//

பாராட்டுதலுக்கு அப்படி ஒரு மகிமை பாருங்க. சிறந்த கவியை உருவாக்குகிறது பாராட்டுக்கள்

Quote

Followers