ஞாயிறு, 8 மே, 2011

அம்மா

முதல்மாத சம்பளத்தில் 
பட்டுப்புடவை - உன் 
முகம் மலர 
கீதைப் புத்தகம்.
கழுத்து கனக்க
தங்கப் பதக்கம்- என் 
சாம்ராஜ்யத்தில் 
தலைமைப் பீடம்.
உனக்கு 
எவ்வளவு செய்தாலும் 
பாக்கி இருக்கிறதே....
பத்து மாத வாடகையும் 
பால்கணக்கும்.


11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்லாவே இருக்கு இந்தக்குட்டிக்கவிதைகள்.
ஜான் ஏறினா முழம் சறுக்குவதை விளக்குகிறது.
பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

பத்து மாத வாடகையும், பால் கணக்கும் என்றுமே தீர்க்க முடியாத கடன்கள்.அதிகம் எதிர்பார்ப்பில்லாத தாயன்புக்கு, அவர்கள் மனம் நோகாதபடி இருத்தலே சிறந்த கைமாறு.

மதுரை சரவணன் சொன்னது…

ஆமாங்க....பாக்கிகள்அதிகம் தான்...வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

அழகான வரிகள்... அன்னையர் தின வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அன்னையின் அன்புக்கு ஏது கைம்மாறு! நல்ல கவிதை சரவணன்.

சேலம் தேவா சொன்னது…

எவ்வளவு கொடுத்தாலும் தீர்க்கமுடியாத பாக்கிண்ணே அது..!!அன்னையர் தின வாழ்த்துகள்..!!

Jaleela Kamal சொன்னது…

mika arumai

கீதமஞ்சரி சொன்னது…

அவள் என்றுமே கணக்குப் பார்க்கமாட்டாள், கொடுப்பதிலும் பெறுவதிலும்!

நாம்தான் என்னென்னமோ தப்புக்கணக்குப் போடுகிறோம்.

அம்மாவைப் போற்றும் அழகான கவிதை.

r.v.saravanan சொன்னது…

அன்னையர் தின வாழ்த்துகள்

குட்டிக்கவிதைகள் நல்லா இருக்கு

இராஜராஜேஸ்வரி சொன்னது…

எவ்வளவு செய்தாலும்
பாக்கி இருக்கிறதே.//
அன்னையர் தின வாழ்த்துகள்......

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

Very nice and touching lines..:)

Quote

Blog Archive

Followers