Osama bin Mohammed bin Awad bin Laden. அரேபிய மொழியை பின்னிருந்து படிக்க வேண்டும் என்பதால் இந்தப் பெயரின் அர்த்தம் லேடனின் மகன் அவாத். அவாதின் மகன் முகமது. முகமதுவின் மகன் ஒசாமா என்று பொருள்படும். ஆகவே அவரை பின்லேடன் என்று சொல்வதை விட ஒசாமா என்று சொல்வதே சரி.
சௌதி அரேபியாவில் அரச குடும்பத்திற்கு நெருக்கமான பணக்கார வியாபாரியின் பத்தாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தார் ஒசாமா. கல்லூரிப் படிப்பை முடித்தபின் ஒசாமா அப்துல்லா ஆஜாமுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினார். பின்னர் அமெரிக்க ஜனாதிபதிகள் கார்ட்டரும் ரீகனும் அமெரிக்க மத்திய உளவுத்துறை மூலம் பணமும், பயிற்சியும், ஆயதங்களும் கொடுத்து வளர்த்தனர். அல்கொய்தா என்னும் அமைப்பை நிறுவி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார். 2001 ல் செப்டெம்பர் 11 அன்று நியுயார்க்கில் நடத்திய விமான தாக்குதலில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து பத்து வருடம் தேடி நேற்று முன்தினம் பாகிஸ்தானில் ராணுவ மையத்திற்கு மிக அருகில் அபாத்தாபாத்தில் உள்ள வீட்டில் வைத்து அமெரிக்க உளவுத்துறையும் சிறப்பு கடற்படையும் இணைந்து கொன்றனர். ஒசாமாவுக்கு நான்கு மனைவிகளும் சுமார் 12 முதல் 24 குழந்தைகளும் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
ஒசாமா தங்கியிருந்த வீட்டின் மீது ஹெலிகாப்டர் மூலமாகவும் தரை வழியும் சுமார் நாற்பது நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலை ஒபாமாவும் ஹிலாரி கிளிண்டனும் நேரடியாகப் பார்த்தனராம். மூன்று மாடி வீட்டை சுற்றி 18 அடி உயர மதில் சுவரும் அதன் மேல் மின் கம்பிகள் அமைத்து மிக பாதுகாப்பாக பதுங்கியிருந்த ஒசாமா இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கையில் ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த ஒசாமாவை மனைவி மனித கேடயமாகி காக்க முயன்றாராம். பாதுகாப்பாய் தங்க இடம் கொடுத்துவிட்டு மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாய் இருந்த ஒசாமாவை கொள்ள உதவியதாக பாகிஸ்தான் சொல்கிறது.
திங்களன்று அமெரிக்காவின் செய்தித்தாள்களில் வந்த தலைப்புகளைப் பாருங்கள்.
3 comments:
அவர்களை தவறு சொல்ல இயலாது கலா நேசன்.
வளர்த்தவர்கள் வெட்டுகிறார்கள் !
சிறை பிடிக்கப்பட்டவர்களை பயங்கர சித்திர வதைக்கு உள்ளாக்கி கிடைத்த தகவல்கள் நாட்கணக்கில் ஒன்று சேர்க்கப்பட்டு, அவனது இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் சாயம் அமெரிக்கர்களால் வெளுக்கப்பட்டுள்ளது. ஒரு ஒசாமா ஒழிந்தான். இன்னும் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ.
கருத்துரையிடுக