ஒரு அழகான கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவளைப்போல் ஓர் அழகியை யாரும் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை. அவள் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழை வாலிபனைக் காதலித்து வந்தாள். இது தெரிந்ததும் மொத்தக் கிராமமும் அந்தக் காதலை எதிர்த்தது. இதனால் வேறு வழி தெரியாமல் ஊரை விட்டு ஓட திட்டமிட்டனர். திட்டமிட்டபடி ஒரு நாள் ஊரை விட்டு ஓடிவிட்டனர். கிராமமே சேர்ந்து தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு அந்தக் காதலை ஏற்றுக்கொள்வதாக செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தனர். அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. மகிழ்ந்த கிராம மக்கள் மிக பிரமாண்டமான முறையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டனர்.
திருமண ஆடைகள் வாங்க கடைக்குச் சென்று திரும்பிவரும் வழியில் அவர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. அந்தக் காதலன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தான். (இது அந்தத் தலைவரின் வேலையான்னு நீங்க யோசிக்க வேண்டாம்). விபத்தன்று அவன் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை அவன் நினைவாக அந்தப்பெண் வைத்திருந்தாள். ஒரு நாள் அவள் கனவில் ஒரு தேவதை வந்து அந்தச் சட்டையை துவைத்து விடவேண்டுமென்றும் இல்லை என்றால் குடும்பத்துக்கே பெரும் இழப்பு நேரிடும் என்றும் சொன்னது. அவள் அதை கண்டுகொள்ளவேயில்லை.
சில நாள் கழித்து அதே தேவதை அவள் அம்மாவின் கனவிலும் வந்து அந்தச் சட்டையை துவைத்துவிடச் சொன்னது. ஆனால் அவர்கள் அதை சட்டை செய்யவேயில்லை. பின் ஒருநாள் அதே தேவதை அவள் தந்தையின் கனவிலும் வந்து எச்சரித்ததும் அவர்களுக்கு அதன் விபரீதம் புரிந்தது. உடனே அந்தச் சட்டையை துவைத்தாள். ஆனாலும் ரத்தக் கறை போகவேயில்லை. மீண்டும் தேவதை அவள் கனவில் வந்து எச்சரித்தது. எப்படி முயன்றும் அந்தக் கறை போகவேயில்லை.
அடுத்த நாள் காலை யாரோ அவர்கள் வீட்டுக் கதவை தட்டினர். அவள் சென்று கதவைத் திறந்தாள். என்ன ஆச்சர்யம், கனவில் வரும் தேவதை நின்றிருந்தது. முகம் வெளிறிப்போய் இருந்தது. அவளைப் பார்த்து கோபமாய்ச் சொன்னது. லூசாடி நீ! எத்தனை முறை சொல்றது? சர்ப் எக்செல் போடு கறை போயிடும்!!!
15 comments:
surf excel ஏஜண்ட் இல்லையே நீங்க!!!
நல்லா இருக்கு கதை!
மனதை பிழிய வில்லை சட்டையை அடித்து துவைக்க் போறாங்க. b
நம்பி வந்தேன்... பீலீங்கோட படிச்சேன்... கடைசில அடிச்சு துவைச்சிட்டீங்களே...
என்னவொரு வில்லத்தனம்...
யப்பா முடியலை சாமி
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வலையகம்! ;)
ஏங்க இப்படி, ???
நம்பி வந்தோரை ஏமாற்றாதீர்கள்
surf excel ஏஜண்ட் இல்லையே நீங்க!!!
நல்லா இருக்கு கதை!
இதே சந்தேகம்தான் எனக்கும்..
YOU WILL BE GETTING A CALL FROM SURF EXCEL MARKETING AND ARVERTISING COMPANY. GOOD. I ENJOYED THAT.!
சே! எதிர்பார்க்கவே இல்லை.
அண்ணே..நீங்களுமா இப்டி..?! :)
:))
நம்பவேமுடில கலாநேசன்.நீங்களுமா !
:)))) முடியல! அளுதுடுவேன். எதிர்பார்க்காத முடிவு!
என்னிடம் இருந்து இதுபோல் நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்பது பின்னூட்டங்களின் மூலம் தெரிகிறது.
கருத்துரையிடுக