Google+ Followers

சனி, 5 மார்ச், 2011

வரி விளையாட்டு


இந்தப் படத்தில் இருப்பது யார்?
மகேஷ் பூபதியும் அவரின் முதல் மனைவி ஸ்வேதா ஜெய்சங்கரும்னு சரியாச் சொன்னவங்களுக்கு வாழ்த்துக்கள்.
மகேஷ் பூபதி- பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற முதல் இந்தியன். இன்னும் ஏராளமான டென்னிஸ் போட்டிகளில் பெரும்பாலும் இரட்டையர் பிரிவில் கலக்கியவர். 2001 ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ வாங்கியவர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு போனமாதம் (16 .02 .2011 ) லாரா தாத்தாவை மணந்தார். அப்புறம் முதல் மனைவியும் அடுத்த சில நாட்களிலேயே (20 .02 .2011 ) சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்  ரகு கைலாசை மணந்தார்.  (அட நான் சொல்ல வந்ததை விட்டு பதிவு வேறு எங்கேயோ போகுதே!)


திங்கட்கிழமை திரு பிரணாப் முகர்ஜி வாசித்த பட்ஜெட்டில் நமக்கு ஏதேனும் சலுகை இருக்கிறதா என் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருப்பவரா  நீங்கள்? அப்போ உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல் எனும் சொல்.

இப்படி ஒரு பையன் மகனாகப் பிறப்பதற்கு அவன்தந்தை என்ன புண்ணியம் செய்தானோ என ஏங்கும் படியான ஒரு ஒப்பந்தத்தில் தந்தையும் மகனும் 10.06.1994 ல் கையெழுத்து போட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி உணவு, உடை, உறைவிடம், டென்னிஸ் பயிற்சி மற்றும் டிப்ஸ் என தந்தை செலவழித்த 28.5 லட்சத்தை தான் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்குள் திருப்பித் தருவதாக எழுதினர். இது தந்தைக்குத் தான் அளிக்கும் குருதட்சணை என்றும் அதற்கு வரிவிலக்கு அளிக்குமாறும் முறையிட்டார் பூபதி. வருமான வரித்துறையும், கர்னாடக உயர்நீதி மன்றமும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை  25.10.2010 அன்று விசாரித்த தலைமை நீதிபதி SH கபாடியா, நீதிபதிகள் KS ராதாக்ருஷ்ணன் மற்றும் ச்வத்தந்த குமார் அடங்கிய பென்ச் ஐந்தே நிமிடங்களில் தள்ளுபடி செய்தது. அதை தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்....

மகனுக்கு நல்ல புத்தி சொல்லி அவன் சுயமாய் சம்பாதிக்கும் வரை அவனைக் காப்பது தந்தையின் கடமை. இந்த நீதிமன்றம் இதுபோல் ஒரு வழக்கை இதற்குமுன் பார்த்ததில்லை.

1989 ல் இருந்து 1994 வரையான காலத்தில் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கிய போதும், இந்த ஒப்பந்தம் 1994 ல் செய்தது வரி விலக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்பதை தெளிவாக்குகிறது.

(பய புள்ள டென்னிஸ் கோர்ட்ல மட்டுமல்ல சுப்ரீம் கோர்ட்லயும் நல்லாத்தான் விளையாண்டிருக்கு)


7 comments:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வரி கட்ட பயந்து செய்த நாடகம் என ஹிந்து ஒரு கட்டுரை போட்டிருக்கு. அதே போல் இந்தியா டைம்ஸில் ஒரு ஆர்ட்டிக்கிள் வந்திருக்கு

Chitra சொன்னது…

பணம் பத்தும் செய்யும்! :-)

வசந்தா நடேசன் சொன்னது…

பணத்துக்காகத்தான் ரென்டு கண்ணாலமோ??

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பய புள்ள டென்னிஸ் கோர்ட்ல மட்டுமல்ல சுப்ரீம் கோர்ட்லயும் நல்லாத்தான் விளையாண்டிருக்கு)
நல்லாத்தான் விளையாடியிருக்கிறார்.

அமுதா கிருஷ்ணா சொன்னது…

பாவம் வரி கட்ட பணத்திற்கு என்ன செய்வார்??

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நிறைய பணம் இருந்தாலும் பிரச்சனைதான்! எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.

Quote

Followers