புதன், 16 மார்ச், 2011

உயிர் குடிக்கும் கடல்


முதல் உயிர் முளைத்த 
மூப்பிலா ஆழியே!
இன்னல்பல தந்து -நீ 
இன்னும் நெடுநாள் வாழியே!

அலையாய் பொங்கிவந்து 
கொலைசெய்து விளக்குகிறாய்
நிலையாமைத் தத்துவத்தை -நீ 
உள்ளொன்று வைத்துப் 
புறமொன்று காட்டும் 
கள்ளத்தனம் கற்றாயோ 
கபடமாடும் மனிதரிடம்....

பிள்ளைக்கறி கடித்து பெருந்தாயே 
பிணந்தின்னும் பருந்தானாய்!
திட்டமிட்டு செதுக்கிய நாட்டை 
எட்டடிகள் நகர்த்தி வைத்தாய்!
நீரை வெளியேற்ற 
வெட்டிய குழிகளில் 
ஊரை வெளியேற்றி 
ஊழ்வினை ஆற்றினாய்!

வீடுடைக்கும் நிலம் 
உயிர்குடிக்கும் நீர்
ஊரழிக்கும் நெருப்பு 
கதிர்வீச்சு பரப்பும் காற்று 
கரும்புகை படிந்த ஆகாயம்.
அட 
அழைப்பது சரிதானோ 
பஞ்சபூதங்களென்று....











15 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//வீடுடைக்கும் நிலம்
உயிர்குடிக்கும் நீர்
ஊரழிக்கும் நெருப்பு
கதிர்வீச்சு பரப்பும் காற்று
கரும்புகை படிந்த ஆகாயம்.
அட
அழைப்பது சரிதானோ
பஞ்சபூதங்களென்று....//

நல்ல வார்த்தை பிரயோகம். கவிதை அருமை. ஜப்பானின் மக்களுக்கு அனுதாபங்களும் பிரார்த்தனைகளும்.

எல் கே சொன்னது…

//வீடுடைக்கும் நிலம்
உயிர்குடிக்கும் நீர்
ஊரழிக்கும் நெருப்பு
கதிர்வீச்சு பரப்பும் காற்று
கரும்புகை படிந்த ஆகாயம்.
அட
அழைப்பது சரிதானோ
பஞ்சபூதங்களென்று....//

:(((

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஜப்பானின் மக்களுக்கு என்னுடைய அனுதாபங்களும் பிரார்த்தனைகளும்.

சமுத்ரா சொன்னது…

கடலைத் திட்டாதீர்கள்..அது அள்ளி அள்ளிக் கொடுத்த போது மட்டும் வாய் மூடிக் கொண்டு
எடுத்துக் கொண்டோம்..

சமுத்ரா சொன்னது…

but ur poem is good:)

பெயரில்லா சொன்னது…

மனதை கனக்க செய்யும் வரிகள் கலாநேசன்..

aasky-jrs சொன்னது…

உயிர் குடிக்கும கடல்

ram j

கடலன்னை மீன்தந்தாள்-மிக
களிப்பாக நாமுண்டோம-மனித
உடல்தன்னை அவளுன்ன-நிலை
உருவாக செய்ததென்ன-அலை
தடம்மாறி உள்ளேவர-செயற்கை
தன்மைகளை நாளும்பெற-நாம்
திடமான இயற்கைதனை-மேலும்
தேடியெங்கும் அழித்ததுவே

புலவர் சா இராமாநுசம் சென்னை 24

G.M Balasubramaniam சொன்னது…

இயற்கையின் சீற்றத்தில் இருந்து சில நாட்களில் மீளலாம். கூடவே வரும் செயற்கை அழிவின் தாக்கம் எவ்வளவு நாட்களுக்கோ.காணும்போதே மனம் பதைக்கிறது. ஜப்பானியருக்கு நம் பரிவையும் அநுதாபங்களையும் சமர்ப்பிப்போம்.

Pranavam Ravikumar சொன்னது…

Touching lines. Thanks for your write which reflects your sentiments for the ones who are suffering. Let us pray for them. My wishes!

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்ல வார்த்தை பிரயோகம். கவிதை அருமை

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இயற்கை அமைதி திரும்ப பிரார்த்தனைகள்.

arasan சொன்னது…

எளிய வார்த்தைகளில் வழிகளை கூறி இருக்கிண்டிர்

arasan சொன்னது…

எளிய வார்த்தைகளில் வலிகளை கூறி இருக்கின்றீர்

thendralsaravanan சொன்னது…

இயற்கையின் கோபத்தை நாம் தடுக்க முடியாது.அதே சமயம் முயற்சியின் பிறப்பிடத்தை வேறோடு சாய்த்ததைத் தான் பொறுக்க முடியவில்லை!
அழகாய் சாடியிருக்கிறீர்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வலியுடன் கூடிய வரிகள் தான் இருப்பினும் அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

ஜப்பானியருக்கு நம் ஆழ்ந்த அனுதாங்களும், இனி மேலாவது இதுபோல சோகம் நிகழாமல் இருக்க பிரார்த்தனைகளும்.

Quote

Blog Archive

Followers