Google+ Followers

ஞாயிறு, 20 மார்ச், 2011

பிச்காரி


இன்று ஆரியர்கள் அனைவரும் கொண்டாடும் ஹோலி திருவிழா. ஹோலி என்றதும் என் நினைவுக்கு வருவது வண்ணப்பொடி, எண்ணெய், கிரீஸ், மை, முட்டை, தக்காளி, பெயின்ட் என கலந்துகட்டி சீனியர்களுடன் ஹோலி விளையாடிய கல்லூரி முதலாமாண்டு ஹோலிதினம் தான். நான் அதற்கு முன்பின் அப்படி கொண்டாடியதேயில்லை. ஹோலி என்றால் நெருப்பு என்று பொருள். இன்றோ வெறும் வண்ணங்கள் மட்டும் நினைவில் நின்று இத்திருவிழாவின் எண்ணம் மெல்ல மறைகிறது. சரி, ஹோலியின் புராணக் கதை காண்போமா?
 
இப்போ நான் சொல்லப்போகும் புராணக்கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். தசாவதாரம் படத்தில் கூட வருகிறது. (இது கமல் நடித்த தசாவதாரம் இல்லைங்க). ஹிரன்யஹஷிபு நெடுந்தவம் புரிந்து பிரம்மாவிடம் ஒரு அரிய வரம் பெற்றான். அதன்படி அவனை மனிதனோ மிருகமோ, பகலிலோ இரவிலோ, மண்ணிலோ விண்ணிலோ, வீட்டிலோ வெளியிலோ  கொல்ல முடியாது. மூவுலகையும் ஆள முடிவெடுத்த ஆவான் ஏராளமான கொடுமைகள் செய்தான். அனைவரும் இனி கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டு தன்னை வணங்குமாறு கட்டளையிட்டான். உலகமே பயத்தில் நடுங்கிய போதும் அவன் மகன் பிரகலாதன் மட்டும் நாராயணனை வணங்கினான். பிரகலாதனை பலவகையில் பயமுறுத்தியும் அவன் கடவுளை வணங்குவதை நிறுத்தவேயில்லை. தந்தையே மகனைக் கொல்ல முடிவெடுத்தான். விஷம் கொடுத்தான், பாம்புகளுடன் அறையிலடைத்தான், பட்டினி கிடக்கச் செய்தான், யானைகளை விட்டு மிதிக்க வைத்தான். எதுவும் பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை. பிறகு அவன் தங்கை ஹோலிகாவிடம் (நோட் பண்ணுங்கப்பா..நோட் பண்ணுங்க...ஹோலிகா) பிரகலாதனைக்  கொல்லுமாறு கட்டளையிட்டான் ஹிரன்யகஷிபு. ஹோலிகாவோ நெருப்பில் எரியாத வரம்* வாங்கியிருந்தாள். பிரகலாதனை மடியில் வைத்துக்கொண்டு நெருப்பிடச் சொன்னாள். பிரகலாதனுக்கு ஒன்றுமே ஆகவில்லை ஆனால் ஹோலிகா சாம்பலானாள். (* conditions apply : தனியே எரிந்தால் மட்டுமே நெருப்பு ஒன்றும் செய்யாது.) அப்புறம் நாராயணன் நரசிம்ம அவதாரம் (பாதி மனிதன் பாதி சிங்கம்) எடுத்து வந்து ஒரு மாலைப்பொழுதில் அவன் அரண்மனையின் வாசற்படியில் வைத்து வயிற்றைக் கிழித்து கொன்றதுதான் உங்களுக்குத் தெரியுமே! ஹோலிகா என்னும் அரக்கி நெருப்பில் எரிந்ததை கொண்டாடுவதே ஹோலி (நரகாசுரன் தலை வெடித்த தீபாவளி போல்).


ஹோலிக்கு முன்தினம் பழைய மரக்கட்டைகள், சருகுகளை வைத்து தீமூட்டி சுற்றி வந்து வணங்குகிறார்கள். வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக மலர்களின் சாயங்களையும் செடிகொடிச்சாருகளையும் பூசி மகிழ்ந்த பழக்கமே இன்று கண்மூடித்தனமாய் கலரடிக்கும் ஹோலியானது.என் மகள் இரண்டு வாரம் முன்னர் அப்பா பிச்காரி வேண்டுமென்றாள். அபியும் நானும் பார்த்து ஏதோ உளருகிறாள் என்று நினைத்தேன். பிறகு தங்கமணி சொல்லித்தான் தெரியும் பிச்காரி என்றால் தண்ணீர்த் துப்பாக்கி. ஒன்று வாங்கிக் கொடுத்தேன். எங்கள் வீடு இரண்டாம் தளத்தில் என்பதால் பால்கனியில் நின்று கொண்டு வருவோர் போவோர் மீதெல்லாம் தண்ணி அடிக்கிறாள் இரண்டரை வயது இளவரசி. யாராவது உன்னைத் திட்டுவாங்கடா என்றேன். யாராவது திட்டினா "புரா மத் மானோ...ஏ ஹோலி ஹை!"ன்னு சொல்லணுமாம் ( கோவிச்சுக்காதீங்க...இது ஹோலி)

அப்புறம் முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் இந்தப் பதிவு முடியாதுங்க. அது குஜ்ஜியா. சமோசாக்குள்ள பூர்ணம் வைத்த மாதிரியான ஒரு இனிப்பு. ரொம்ப நல்லாருக்குங்க. இது தான் ஹோலி ஸ்பெசல் ஸ்வீட்.


ஹோலி கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

12 comments:

சே.குமார் சொன்னது…

ஹோலி கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

தலைப்பை பார்த்து ஏமாந்துட்டேன் நேசன்..

raji சொன்னது…

ரொம்ப நாள் வரியில் இந்த ஹோலிகா கதை எனக்கு தெரியாது.
சமீபத்தில்தான் நம்ம ஜீ தமிழ் சேனல் அந்த புண்ணியத்தை கட்டிக் கொண்டது.
அதில் வரும் விஷ்ணு புராணத்தில் நரசிம்ம அவதாரக் கதையில்
பார்த்து தெரிந்து கொண்டேன்.
ஹோலி பற்றிய பகிர்வுக்கு நன்றி
ஹோலி வாழ்த்துக்கள்

raji சொன்னது…

'பிச்காரி' மேட்டர் சிரிப்பை வரவழைத்தது

G.M Balasubramaniam சொன்னது…

இதே போன்ற பண்டிகை பழங்காலத்தில் த்மிழகத்திலும் காமன் பண்டிகை என்ற பெயரில் வசந்த காலத்தை வரவேற்கும் விழாவாக கொண்டாடப் பட்டது என்று படித்ததாக நினைவு. சரியா, தெரியவில்லை.

G.M Balasubramaniam சொன்னது…

நீங்கள் கூறும் இனிப்பு நம் பக்கத்திலும் உண்டு. சோமாசி என்று பெயர்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஹோலி பற்றிய பகிர்வுக்கு நன்றி
ஹோலி வாழ்த்துக்கள்

கோவை2தில்லி சொன்னது…

ஹோலி நல்வாழ்த்துகள். எங்கள் மகளும் பிச்காரி வைத்து விளையாடினாள். குஜியாவும் சாப்பிட்டோம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

ஹோலி நல்வாழ்த்துகள் கலாநேசன்! பிச்காரியில் கலர் தண்ணீர் பிடித்து உங்கள் மேல் அடித்தாளா உங்கள் செல்லக்குட்டி! குஜியா சுவை நன்றாக இருக்கும்!

அமைதிச்சாரல் சொன்னது…

பூரா நா மானோ ஹோலி ஹே :-))))

இங்கேயும் ஒரு ஹோலிக்கொண்டாட்டம் இருக்குது. நேரம் கிடைச்சா வாங்க :-))))

http://amaithicchaaral.blogspot.com/2010/02/blog-post_28.html

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ஹா ஹா ஹா.. பிச்காரி... செம க்யூட்.. :-))

நீங்க தந்த ஸ்வீட்ஸ் எடுத்துக்கிட்டேன்.. தேங்க்ஸ்.. :)

ஹோலி பண்டிகைக்கான காரண பகிர்வுக்கு நன்றி

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

அனைவருக்கும் ஹோலி வாழ்த்துக்கள்..

கலாநேசன் என் சின்னப்பையன் டெல்லியில் இருந்த போது இப்படித்தான் பிச்காரி வேணும் என்று கேட்டு தமாஷ் பண்ணிக் கொண்டிருந்தோம் நாங்களும்..:)

Quote

Followers