திங்கள், 14 மார்ச், 2011

மனதின் வார்ப்பு

கல்லூரி வாழ்க்கைக்குள்
காலெடுத்து வைக்கும்வரை
நட்புக்கும் எனக்கும்
நாலாம் பொருத்தம்தான்.

வகுப்பு துவங்கியதும்
வாரம் சில சென்றபின்பு
வளாகத்தில் நிகழ்ந்ததுநம்
முதல் சந்திப்பு.

மனதில் குழப்பத்துடன்
சரிஎது தவறெதுவென
சரிவரத் தெரியாமல்
மாணவர்க் கூட்டத்தில்
தனிமையில் நான் வாட
துணைக்கரம் நீட்டிய
தோழி நீ.

காணாமல் போனஎனை
கண்டெடுத்துத் தந்தவள் நீ.
எனக்கு எதெல்லாம்
நன்றாக வருமென்று
நீ சொல்லித்தான்
எனக்கேத்  தெரியவரும்.

வகுப்பறைக்குள் அமர்ந்து
வாதிட்ட நிமிடங்களும்
நடந்து பேசி சிரித்த
நல்ல நினைவுகளும்
என்னுள் நிலைத்திருக்கும்
நானுள்ள வரையில்...

வெள்ளைத் தாளாய்
இருண்ட என் மனதில்
கள்ளி நீதான்
கவிதை எழுதினாய்.

செதுக்குவதாய் நினைத்து
சிலசமயம் நீஎன்னை
சிதைத்தும் இருக்கிறாய் - நாம்
மணிக்கணக்கில் பெசியதுமுண்டு
மாதக்கணக்கில் பேசாமலிருந்ததும் உண்டு
ஆனாலும்
நட்பென்ற  சொல்லை
யார் சொன்னாலும்
உன்முகம் எனது
உள்மனதிரையில்
ஒளிர்கிறதே........

மனதின் வார்ப்பாய்.


என்னுயிர்த்தோழி தேவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

21 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிய நட்பிற்காக நல்ல கவிதை! உங்கள் தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிக அருமை.நட்பை மிக அழகாக கவியாக
வார்த்துக் கொடுத்திருக்கிறீர்கள்
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

எல் கே சொன்னது…

கவிதையான நட்பிற்கு வாழ்த்துக்கள். உங்கள் தோழிக்கு இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அழகான நட்பு.. அழகான கவிதை.

Sriakila சொன்னது…

அருமையான நட்புக்கு அடையாளமாய் உங்கள் கவிதை. நாங்களும் ரசித்தோம்..

G.M Balasubramaniam சொன்னது…

கவிதையில் ஒரு வார்த்தை நட்பையும் தாண்டி ஏதோ தொற்றுவிக்கிறதே. மற்றபடி கவிதை பிரமாதம்.

உயிரோடை சொன்னது…

உங்க‌ள் தோழிக்கு வாழ்த்துக‌ள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>நட்புக்கும் எனக்கும்
நாலாம் பொருத்தம்தான்.

ஏழாம் பொருத்தம் என்பதே சரி

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>கள்ளி நீதான்
கவிதை எழுதினாய்.

ஆஹா.. ரசித்தேன்

விக்னேஷ்வரி சொன்னது…

அழகான கவிதையுடன் நல்ல வாழ்த்து. என் வாழ்த்துகளும், உங்கள் நட்பிற்கு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

உங்கள் தோழிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காணாமல் போனஎனை
கண்டெடுத்துத் தந்தவள் நீ.//
இனிய தேழிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ADHI VENKAT சொன்னது…

நட்பிற்காக ஒரு கவிதை!
உங்கள் தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

பெயரில்லா சொன்னது…

மணிக்கணக்கில் பேசவும் தெரியும்
மாதக்கணக்கில் பேசாமலிருக்கவும் தெரியும்.. காதலுக்கே உரிய வலிமை இது!

வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

அருமையான நட்பைப் பற்றிய கவிதை.உங்கள் தோழிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அழகான நட்புக்கவிதை.. உங்கள் நண்பிக்கு எனத பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

thendralsaravanan சொன்னது…

இது நட்பின் சுகத்தால் வந்தக்கவிதை அல்லவா,அருமையாய் உள்ளது.
தேவிக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்!

ஹேமா சொன்னது…

அருமையான நட்பின் வார்த்தைகள்.வாழ்த்துகள் உங்கள் தோழிக்கு !

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//வெள்ளைத் தாளாய்
இருண்ட என் மனதில்
கள்ளி நீதான்
கவிதை எழுதினாய்.//

//நாம்
மணிக்கணக்கில் பெசியதுமுண்டு
மாதக்கணக்கில் பேசாமலிருந்ததும் உண்டு//

மிகவும் ரசித்தேன். அருமையான ”மனதின் வார்ப்பு”

மதுரை சரவணன் சொன்னது…

ungkal tholikku vaalththukkal...super

prabha devi சொன்னது…

முதல் முறையாய் என் பிறந்தநாளுக்கு நீ கவிதை சொல்லியிருக்கிறாய்.. என்னால் தான் உடனே பார்க்க முடியவில்லை. இது ஏற்கனவே நான் வாசித்த கவிதைதான் என்றாலும், எனக்காக நீ சொல்லியிருப்பதில் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி..அடிவயிற்றில் ஆயிரம் பனிக்கட்டிகளைக் கொட்டியது போல ஒரு சிலிர்ப்பு எனக்குள்!.. என்னை யாரென்றே தெரியாவிட்டாலும் என்னை வாழ்த்திய அனைத்து நேச நெஞ்சங்களுக்கும் மிக்க நன்றி... என் நண்பனின் கவிதை கண்டு கண்கள் பனித்ததை விடவும்,உங்கள் அனைவரின் அன்பினைக் கண்டு கண்கள் அதிகமாய் பனித்தன...நெக்குருகி விட்டேன்..மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் என் நன்றி...

Quote

Blog Archive

Followers