சனி, 12 மார்ச், 2011

முடிவு!

என் கவிதைகள் 
எங்கு தொடங்கி 
எதில் முடியும்?

சில கவிதைகள் 
என்றும் தொடரும் 
உன் நினைவுகள் போல....

கேள்வியால் துவங்கி 
கேள்வியால் முடியலாம் 
உன் பார்வைகள்  போல....

பாதியில்கூட நின்றுபோகலாம் 
உன்வருகையை எதிர்பார்த்து 
நான் ஏமாறுவது போல....

முற்றுப்புள்ளியால் அரிதாய் 
முழுமை பெறுகிறது 
உன் புன்னகை போல....

ஆச்சர்யக்குறியிலும் முடியலாம் 
திடீர்முத்தமிட்டு நீயென்னை
திக்குமுக்காடச் செய்தால்....

ஆனாலும் பாரடி 
அதிகக் கவிதைகள் முடிவதில்லை 
உன் மௌனத்தைப் போல....





25 comments:

Chitra சொன்னது…

பாதியில்கூட நின்றுபோகலாம்
உன்வருகையை எதிர்பார்த்து
நான் ஏமாறுவது போல....


....very nice... :-)

Kousalya Raj சொன்னது…

காதலில் கவிதைகளுக்கு என்றும் முடிவு இல்லை...! :)

அழகான வரிகள்.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

அழகு !

Sriakila சொன்னது…

nice very nice!!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

மிக அருமை

Unknown சொன்னது…

அழகாக இரு விடயங்களையும் ஒப்பிட்டிருக்கிறீர்கள்..அழகான கவிதை பாஸ்

இலியானா வீட்டில இப்படி ஒண்ணுமே இல்லையாம்லே!!
http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_12.html

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
மௌனங்கள் தொடர வேண்டாம்
ஆனால் உங்கள் அழகு கவிதைகள் தொடரட்டும்
வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

நைஸ்! :)

சென்னை பித்தன் சொன்னது…

அருமை1

G.M Balasubramaniam சொன்னது…

காதலின் தொடக்கத்தில் கவிதைதொடங்கலாம்.காதலின் முடிவில்..... காதல் என்றும் முடிவதில்லை. ஆதலால் கவிதைகளும் முடிவதில்லை.புன்னகையே அரிதாக இருக்கையில் திடீர் முத்தங்களா.?

ADHI VENKAT சொன்னது…

அருமை.

Asiya Omar சொன்னது…

ஆனாலும் பாரடி
அதிகக் கவிதைகள் முடிவதில்லை
உன் மௌனத்தைப் போல....

அருமை,அருமை சகோ.

ஜெய்லானி சொன்னது…

நல்லா இருக்குங்க :-)

ஹேமா சொன்னது…

காதல் கவிதைகளுக்கு முடிவேது கலாநேசன்.எப்படி எழுதினாலும் அழகுதான் !

Thenammai Lakshmanan சொன்னது…

அதிகக் கவிதைகள் முடிவதில்லை
உன் மௌனத்தைப் போல....

/// மிக அழகு கலாநேசன்..:)

Unknown சொன்னது…

அழகு !

thendralsaravanan சொன்னது…

”முடிவு” அழகு!
வர்ணிக்க வார்த்தையில்லை!
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கவிதைகளுக்கும், காதல் நினைவலைகளுக்கும் என்றுமே முடிவென்பது இல்லை. அவை சுனாமி போலத்தான். எப்போது தோன்றும் எப்போது ஓயும் என்றே சொல்ல முடியாதது. வந்து போகும் சில நொடிகளில் நம்மை வாட்டி வதைத்து விடும்.

அருமையான கவிதை. என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

உயிரோடை சொன்னது…

:) நன்று. கலாநேசன் நீங்க வேற களம் தேடலாம் கவிதைகளுக்காக.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அதிகக் கவிதைகள் முடிவதில்லை
உன் மௌனத்தைப் போல....//
Interesting.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

மிக அருமை

Unknown சொன்னது…

இந்த கவிதைக்கு
இனிமைஅதிகம்
உன்னைப்போலவே...

Unknown சொன்னது…

//அதிகக் கவிதைகள் முடிவதில்லை
உன் மௌனத்தைப் போல....
//

சிவகுமாரன் சொன்னது…

\\அதிகக் கவிதைகள் முடிவதில்லை
உன் மௌனத்தைப் போல....//

அருமை.

மௌனமாய் இருக்கும் வரையில் தான் கவிதை எல்லாம் .
பேசத் தொடங்கிவிட்டால் கவிதைக்கு வேலையென்ன ?

Quote

Blog Archive

Followers