மலர்ந்த போதும் - இந்த
மகிழ்வில்லை எனக்கு....
மாதாவின் மார்பில்
இதழ்வைத்த போதும் - இந்த
இதமில்லை எனக்கு....
தமையனின் தோளில்
தங்கையான போதும் - இந்த
தவிப்பில்லை எனக்கு....
இனிய தலைவனோடு
இல்லறம் புகுந்தபோதும் - இந்த
சிலிர்ப்பில்லை எனக்கு....
எந்தன் மணிவயிற்றில்
உந்தன் உயிர்ச்சத்தம்
உருவாகி விட்டதை
உணர்ந்த நொடிமுதலே - இத்தனை
உவகையும் எனக்கு....
நூறாவது மகளிர்தின நல்வாழ்த்துக்கள்!
13 comments:
உலகத்தில் எத்தனை உணர்ச்சிகள் இருந்தாலும் தாய்மை உணர்விற்கு முன்
எல்லாம் தூசுதான்
அருமையான கவிதை
நல்ல கவிதை
தாய்மைக்கு நிகர் எதுவும் உண்டோ!
நேரமிருப்பின் என் தாய்மை கவிதையும் வாசித்து பாருங்கள்
வாழ்த்துக்கள்!
எந்தன் மணிவயிற்றில்
உந்தன் உயிர்ச்சத்தம்
உருவாகி விட்டதை
உணர்ந்த நொடிமுதலே - இத்தனை
உவகையும் எனக்கு....
....lovely!
That photo is cho chweet!!!!
அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை! தாய்மை என்ற உணர்விற்கு ஈடான உணர்வில்லை!
அனைவர்க்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்
தாய்மைக்கு ஈடு இணையே இல்லை. அருமையான கவிதை.
தாய்மையின் உன்னதத்தை வார்த்தைகளினால் அளவிட முடியாதுதான்!கவிதையில் கணித்துவிட்டீர்களே!
கவிதை நல்லாயிருக்கு சார்.. ஆனால் அந்த படம் பொருத்தமானதாக தெரியவில்லை..
கவிதை அருமையாக இருக்குங்க. உண்மையில் தாய்மைக்கு நிகர் வேறு எதுவும் இல்லைதான்.
வெறுமைக்கு பொருள் தருவது தாய்மை
தாய்மைக்கு அருள் தருவது சேய்மை
அருமையான கவிதை..மனதை வருடுகிறது.
வர இருக்கும் குட்டிப் பாப்பாவுக்கு முத்தமிடும் அந்த சிறுவனின் படமும் கவிதையும் அருமையோ அருமை.
கருத்துரையிடுக