ஞாயிறு, 6 மார்ச், 2011

கவிஞன்

என்
தள்ளாத வயதிலும்
அந்த 
தமிழ்க்கவியைக்
காணச்சென்றேன்.
என்னைக் கண்டதும் 
எழுந்துவந்து 
கட்டிக்கொண்டான்.
அப்புறம் அறிந்தேன் 
தப்புத் தப்பாய் 
தமிழ் எழுதி - நான் 
தண்டித்த மாணவன் 
அவனென்று...

'கவிஞனாக எப்படி?'
 என்றேன்.
"காதலிக்கிறேன் ஐயா"
என்றான்.

8 comments:

சக்தி கல்வி மையம் சொன்னது…

வித்தியாசமான கவிதை..

தமிழ் 007 சொன்னது…

//'கவிஞனாக எப்படி?'
என்றேன்.
"காதலிக்கிறேன் ஐயா"
என்றான்.//

அருமையான வரிகள் நண்பரே!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

good one sir

thendralsaravanan சொன்னது…

தண்டித்ததால் தமிழ் வந்தது. காதலித்ததால் தமிழ் சாதித்தது!

சிவராம்குமார் சொன்னது…

ஹ்ம்ம்... இந்த காதல் வந்தாலே கவிதையும் தானா வருது!!!

R. Gopi சொன்னது…

super!

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

G.M Balasubramaniam சொன்னது…

அன்று தண்டிக்கப்பட்ட மாணவனின் கருத்தை நான் நூறு சதவீதம் வழி மொழிகிறேன். மாணவனின் அனுபவம் எனக்குமுண்டு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை நண்பரே – காதலிப்பவர்கள் எல்லோருக்குமே கவிதை பொங்குதே!

Quote

Blog Archive

Followers