செவ்வாய், 1 மார்ச், 2011

மறுபடியும் மகளானேன்!

வட்டநிலா வானில் 
வந்தவுடன் போனதுபோல்  
மொட்டு மலரொன்று 
முகம்காட்டி மறைந்ததுபோல் 
கட்டுக்கரும்பது கைக் 
கிட்டியதும் கசந்ததுபோல் 
தொட்டில் நெடுங்கனவே 
தொலைதூரம் ஏன்போனாய்?

கட்டிய கயவனவன் 
கைவிட்டுப் போனபின் 
ஒட்டி உறவாட 
ஒற்றையுயிர் நீயிருப்பாய் 
கெட்டுப் போகவில்லை 
வாழ்வென்றே நினைத்திருந்தேன் 
பட்டுமலர் உனையிறைவன்
படைத்ததுமேன் பறித்துக்கொண்டான்?

விழியாரப் பார்க்கவில்லை 
விரல்பிடித்து நடக்கவில்லை 
விளையாடிச் சிரிக்கவில்லை 
விடியலென வந்தவனே 
விட்டிலாகி ஏன் மறைந்தாய்?

பிறந்தவுடன் இறந்துவிட்டப் 
பிள்ளைக்குநான் தாயுமில்லை 
ஏமாற்றிய கணவனுக்கு 
இன்றுநான் மனைவியில்லை 
வாடுமென் அம்மாவுக்கு 
வருத்தந்தரும் மகளானேன்.....

28 comments:

R. Gopi சொன்னது…

இதயம் கனக்கிறது. இது போல ஒன்றிரண்டு சம்பவங்களை நேரில் வேறு பார்த்த துர்ப்பாக்கியம் வேறு உண்டு எனக்கு:-(

எல் கே சொன்னது…

காலை மனம் கனக்க வைக்கும் பதிவு

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

\\வருத்தந்தரும் மகளானேன்// ஹ்ம்..
:(

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செம கவிதை. நெஞ்சை கனக்க வைத்தது...

Chitra சொன்னது…

யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.... வாசிக்கும் நமக்கே, இவ்வளவு வருத்தமாக இருக்கே.

Unknown சொன்னது…

கண்ணீர் துளிகள்...

'பரிவை' சே.குமார் சொன்னது…

மனம் கனக்க வைக்கும் பதிவு.

Sriakila சொன்னது…

கண்ணீரை வரவழைக்குது கவிதை... படத்தில் உள்ள அந்த பிஞ்சுக்கால்களை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போல் உள்ளது.

யுவா சொன்னது…

/விழியாரப் பார்க்கவில்லை
விரல்பிடித்து நடக்கவில்லை
விளையாடிச் சிரிக்கவில்லை
விடியலென வந்தவனே
விட்டிலாகி ஏன் மறைந்தாய்?/

கனத்த வரிகள்.

ADHI VENKAT சொன்னது…

மனம் கனக்க வைத்தது. :(

அன்புடன் நான் சொன்னது…

கவிதை மனதை நெருடுகிறது.....

வசந்தா நடேசன் சொன்னது…

//பிறந்தவுடன் இறந்துவிட்டப்
பிள்ளைக்குநான் தாயுமில்லை
ஏமாற்றிய கணவனுக்கு
இன்றுநான் மனைவியில்லை
வாடுமென் அம்மாவுக்கு
வருத்தந்தரும் மகளானேன்....//

மனதை ரணமாக்கும் வரிகள்..

பெயரில்லா சொன்னது…

வலிமிகும் வார்த்தைகள்!

G.M Balasubramaniam சொன்னது…

கணவனில்லை ஆனால் கைம்பெண் அல்ல. குழந்தை இல்லை ஆனால் மலடியல்ல.வருந்தும் அன்னையின் துயர் துடைக்கலாம்.,மறதி ஒரு வரம். காலமும் மாறிக்கொண்டிருக்கிறது. எழுதிய கவிதை வரிகள் அழகு.

thendralsaravanan சொன்னது…

அழுத்தமான வரிகள்!மனசு வலிக்கிறது!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனதை அழுத்திய பகிர்வு.

கார்த்திக் பாலசுப்ரமணியன் சொன்னது…

மிகவும் ரசித்தேன். நன்றி.

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அழுத்தமான கவிதை..

Asiya Omar சொன்னது…

என்னவொரு சிறப்பான எழுத்து,கவிதை மனதை அழுத்துகிறது.

அரபுத்தமிழன் சொன்னது…

மனம் தொட்ட அருமைக் கவிதை

ஹேமா சொன்னது…

ஒரு தாயின் அவலக்குரலாய் இருக்கு வரிகள்.கலங்கியேவிட்டேன் !

Thenammai Lakshmanan சொன்னது…

வருந்த வைத்த கவிதை..

பெயரில்லா சொன்னது…

இச்சைக்கு உட்பட்டால் சர்ச்சைக்கு உடன்பட வேண்டியிருக்கும் என்ற கருத்தினை அருமையான கவிதையாக வடித்து இருக்கிறீர்கள்.

VELU.G சொன்னது…

மனம் கணக்கும் வரிகளில் தடுமாறினேன்

நல்ல கவிதை

Sudheer G N சொன்னது…

உண்மையின் உரைகல்

மோகன்ஜி சொன்னது…

நெஞ்சைப்பிழியும் கவிதை

arasan சொன்னது…

படிக்கும் போதே மனது கரைந்து விடுகிறது

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

மனம் கனக்கின்றது. அருமை

Quote

Blog Archive

Followers