புதன், 12 ஜனவரி, 2011

லோஹ்ரி திருவிழா


நம்ம ஊர் பொங்கல் போல பஞ்சாப் இன்னும் சில வட மாநிலங்களில் அறுவடைத் திருநாள் லோஹ்ரி (Lohri) பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கலும் லோஹ்ரியும் மிக நெருங்கிய தொடர்புடையன. இங்கு கோதுமை விளைச்சலைக் கொண்டாடவும் விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விளைச்சலுக்கு நன்றி தெரிவிப்பதோடு மக்கள் பாங்க்ரா நடனமாடுவார்கள். குழந்தைகள் ஆடிப் பாடியபடி அருகில் உள்ள வீடுகளில் இனிப்பைப் பகிர்வார்கள்.
பின்பு பாரம்பரிய வாத்தியமான டோல் வாசித்தபடி நெருப்பைச் சுற்றி நடனமாடுவார்கள். ஆடலும் பாடலும் முடிந்ததும் மக்காச்சோள ரொட்டியும் கரும்புச் சாரும் விருந்து படைப்பார்கள். நம்ம ஊரில் புதிதாய் திருமணமானவர்களுக்கு எப்படி தலைப் பொங்கல் விசேஷமோ அப்படியே பஞ்சாபிலும் மணமான பின் முதல் லோஹ்ரி மிக விசேஷம்.
இதே பண்டிகை பிகு(Pihu) என்று அசாமிலும் மகா சங்கராந்தி என்று இன்னும் பல மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.



பதிவுல நட்புகளுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

16 comments:

G.M Balasubramaniam சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கலானேசன்.என் கருத்துரைப் பகுதியில் நீங்கள் விரும்பியபடி வெரிஃபிகேஷன் என்ற வார்த்தையை நீக்கிவிட்டேன்.

ADHI VENKAT சொன்னது…

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் தியானாவுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

nice...

HAPPY PONGAL!

சேலம் தேவா சொன்னது…

புதிய தகவல்கள்..!!மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்ண்ணே..!!

தூயவனின் அடிமை சொன்னது…

புதிய தகவல்கள்..இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

புதிய தகவல்கள்..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

ஹேமா சொன்னது…

மனம் நிறைந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள் கலாநேசன்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

வாழ்த்துக்கள்...

செல்வா சொன்னது…

இது புதுசா இருக்கே ,
லோஹ்ரி பத்தி தெரிந்துகொண்டேன் அண்ணா ..

raji சொன்னது…

புதுமையான தகவல்கள்

Quote

Followers