வெள்ளி, 7 ஜனவரி, 2011

தற்கொலைகளின் தலைநகரம்

கொசுவர்த்திச் சுருளை
பொடியாக்கிக் குடித்து
உயிர்விட்டாள் ஒருத்தி.


கணவன் திட்டியதால்
கயிற்றில் தொங்கினாள்
ஒருத்தி.

மனைவியுடன் ஏற்பட்ட
மனக்கசப்பில் தன்னுயிரை
மாய்த்துக்கொண்டான் ஒருவன்.

பதினெட்டு மாதக்குழந்தையை
பரிதவிக்க விட்டுவிட்டு
உள்ளத் தகராறில்
உயிர்விட்டனர் இருவர்.

இப்படி
நாலிரண்டு மாதத்தில்
நானூற்று ஐந்துபேர்
உள்ளத் துணிவின்றி
உயிர்மாய்த்துக் கொண்டனரே...
திருப்பூர் என்ன
ஆடை தொழில்நுட்பத்தின்
அழகு நகரா - இல்லை
தற்கொலைகளின் தலைநகரா?

உங்கள் தாய்
ரத்தத்தை பாலாக்கி
ஊட்டி வளர்ப்பதுவும்
உங்கள் தந்தை
சொத்தைவிற்று கடன்வாங்கி
சுபமுகூர்த்தம் குறிப்பதுவும்
பாதிவழியில் நீங்கள்
பயணத்தை முடிப்பதற்கா?

"பாசக்கயிர்" பிடிக்கும்
பாசப் பறவைகளே..
துயரத் தனிமையை
துடைத்தெரியுங்கள்.
உயரப் பறப்பதற்கு
உறுதி கொள்ளுங்கள்.

குறிப்பு: இரண்டாயிரத்துப்பத்தின் முதலெட்டு மாதங்களில் மட்டும் திருப்பூரில் 405 பேர் தற்கொலை செய்துகொண்டனர். பெரும்பாலான தற்கொலைகள் மூடத்துணிச்சலில் எடுக்கும் அவசர முடிவுகளே. உங்களுக்குத் தெரிந்தவர் யாரேனும் திடீர்த்தனிமையை விரும்பினால், அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களின் ஒரு நிமிடப் பேச்சு ஒரு உயிரைக் காக்கலாம். வாழ்க்கை வாழ்வதற்கே...

25 comments:

ம.தி.சுதா சொன்னது…

நல்ல முயற்சி... நல்லாயிருக்குதுங்கோ...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
இலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்

கமலேஷ் சொன்னது…

மிகவும் அவசியமான கவிதை நண்பரே... உங்கள் தொண்டுக்கு வாழ்த்துக்கள்.

சேலம் தேவா சொன்னது…

நேற்று முன்தினம் கூட என் நண்பர் ஒரு ஒப்புபெறாத விஷயத்துக்கு தற்கொலை செய்து கொண்டார்.அவருடைய பெற்றோரின் நிலையை ஒரு நிமிடம் சிந்தித்திருந்தால் அந்த முடிவு எடுத்திருக்க மாட்டார்.பொருளாதார பிரச்சினைகள் மறைமுகமாக ஒரு காரணமாயிருக்கிறது இற்த தற்கொலைகளுக்கு....

:-((

Unknown சொன்னது…

தலைப்பைப் பார்த்தவுடனே திருப்பூர் தான் என்று ஊர் பெயரைத் தேடினேன் முதலில்...
(திருப்பூர் நஞ்சப்பா பள்ளி (காலை)நடைபயிற்சி(வாக்கிங்)தான் இதற்கு முழுக் காரணமோ என்றே எனக்கு அடிக்கடி தோன்றுகிறது..அதைப்பற்றி எழுதுங்களேன்..)

Unknown சொன்னது…

உண்மையான கவிதை.... அருமை !

பெயரில்லா சொன்னது…

மன முதிர்வில்லாமையே இதற்கு காரணம். :(

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதை மூலம் நல்லதோர் முயற்சி. தற்கொலை - ஆண்டவன் கொடுத்த உயிரை மாய்த்துக்கொள்ள நாம் யார்?

பகிர்வுக்கு நன்றி.

அன்புடன் அருணா சொன்னது…

/உங்களுக்குத் தெரிந்தவர் யாரேனும் திடீர்த்தனிமையை விரும்பினால், அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களின் ஒரு நிமிடப் பேச்சு ஒரு உயிரைக் காக்கலாம். /
ம்ம்ம்...இப்போலாம் மக்களுக்கு நேரில் பேச எங்கே நேரம் இருக்கிறது?sms,chatting,face book என virtual உலகில் பேசி முடிக்கவே நேரமில்லை!:(

G.M Balasubramaniam சொன்னது…

இப்படிப்பட்டவர்களுக்கு அறிவுரை கூறி தற்கொலை தடுப்பு முயற்சியில் சில சமுக அமைப்புகள் இருப்பதாகப் படித்தது நினைவுக்கு வரவில்லை.வாழ்க்கை வாழ்வதற்கே என்றறிந்தால் நிகழ்வுகள் குறையலாம்.

அருண் பிரசாத் சொன்னது…

கோழைகள எடுக்கும் தைரியமான முடிவு....

இவர்கள் போயிடுவாங்க... அவதிபடுறது பெத்தவங்கதான

Chitra சொன்னது…

உங்களின் ஒரு நிமிடப் பேச்சு ஒரு உயிரைக் காக்கலாம். வாழ்க்கை வாழ்வதற்கே...

.... rightly said!

THOPPITHOPPI சொன்னது…

அருமையான விழிப்புணர்வு பதிவு

விக்னேஷ்வரி சொன்னது…

நல்ல பதிவு. அவசியமானது.

ADHI VENKAT சொன்னது…

அர்த்தமுள்ள இடுகை.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வாழ்க்கை வாழ்வதற்கே...

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

வாழ்க்கை வாழ்வதற்கே ..


தற்கொலை என்பது முட்டாள்களின் கடைசி ஆயுதம்...

Unknown சொன்னது…

திருப்பூர் நஞ்சப்பா பள்ளி (காலை)நடைபயிற்சி(வாக்கிங்)தான் இதற்கு முழுக் காரணமோ என்றே எனக்கு அடிக்கடி தோன்றுகிறது..
---
சென்ற வாரம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர், சம்பவம் நடந்த அன்று காலை நடை பயிற்சி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றவுடன் நடந்துள்ளதால்....
(45 வயதேயான நல்ல வசதியுள்ளவர்..இரண்டு மகள்கள், ஒரு மகன்)
37 வருடங்களில் நான் ஒரு நாள் கூடச் செல்வதில்லை...
காரணம்...அவன் இவளை வைத்துள்ளான்..இவள் அவனை வைத்துள்ளான்....கொசலமா ? (இதுக்கெதற்கு பயற்சி !)

தூயவனின் அடிமை சொன்னது…

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம், பிரச்சினைகளுக்கு முடிவு தற்கொலை அல்ல.

சிவகுமாரன் சொன்னது…

ஒரு நிமிடப் பேச்சு ஓர் உயிரை காக்கும் உண்மை. தனிமை விரும்பிகளை கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும். முக்கியமாய் பதின்ம வயதினரை.
மிக முக்கியமான அவசியமான பதிவு. நன்றி.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

செல்வா சொன்னது…

//உங்கள் தாய்
ரத்தத்தை பாலாக்கி
ஊட்டி வளர்ப்பதுவும்
உங்கள் தந்தை
சொத்தைவிற்று கடன்வாங்கி
சுபமுகூர்த்தம் குறிப்பதுவும்
பாதிவழியில் நீங்கள்
பயணத்தை முடிப்பதற்கா?///

அருமையான கேள்விங்க , ஆனாலும் இது போன்ற செய்திகளைப் படிக்கும் போது மனம் வலிக்கிறது!

Priya சொன்னது…

நல்ல பதிவு....அவசியமான கவிதை!

goma சொன்னது…

தற்கொலை என்ற விளிம்புக்கு வருபவர்கள்...ஒரு விநாடி சிந்திக்கும் திறன் இழந்து முடிவெடுத்து விடுகிறார்கள்.பரிதாபத்துக்கு உரியவர்கள்

ஹேமா சொன்னது…

எங்கள் உயிரை இவ்வளவுதானா மதிக்கிறோம் விரும்புகிறோம் !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

உண்மையான கவிதை.....

Quote

Followers