ஞாயிறு, 2 அக்டோபர், 2011

உயிரின் விலை 27 ரூபாய்


ரிஷி என்ற மனநிலை சரியில்லாத அண்ணனுக்கும் கணேஷ் என்ற உடல் ஊனமுற்ற அண்ணனுக்கும் ஒரே தம்பியான 22 வயது உமேஷ் குமார் பாண்டே மானேசர் - குர்கான் நெடுஞ்சாலையில் உள்ள ஓர் சுங்கச்சாவடியில் நான்கு மாதத்திற்கு முன்னர் பணியில் சேர்ந்தான். செப்டெம்பர் 22 நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வழக்கம் போல டோல் பூத்தில் பணம் வசூலித்துக் கொண்டிருந்தான். டோல் பூத் விதிகளின் படி அருகில் இருபது கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள கிராமங்களின் வாகனகளுக்கு சுங்கவரி கிடையாது.

வெள்ளை நிற போலீரோவில் விஜய்வீர் யாதவ் (28) டோல் பூத்திற்கு வந்த போது  உமேஷ் 27  ரூபாய்க் கட்டணம் கேட்டான். அதை மறுத்த விஜய் தான் அருகில் உள்ள ஓர் கிராமத்திலிருந்து வருவதாகச் சொன்னான். விதிப்படி வண்டியின் ஒரிஜினல் RC காண்பித்தால் சுங்கவரி கட்டத் தேவையில்லை. விஜயிடம் RC எதுவும் இல்லை வெறும் ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்திருந்தான். இருந்த போதும் விஜய் மிரட்டியதால் உமேஷ் கேட்டைத் திறந்துவிட்டு போகும்படிச் சொன்னான். அதன் பின்னரும் சும்மா போகாமல் உமேஷை சுட்டுவிட்டுச் சென்றான் அப்பாவி. கழுத்தில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான் உமேஷ். இந்த வீடியோவைப் பாருங்கள்.
 
கேட் திறந்தே இருந்ததால் பின்னிருந்த ஐந்தாறு வாகனங்களும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி டோல் செலுத்தாமல் வேகமாய் வெளியேறின... உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த உமேஷை விட்டுவிட்டு. பின்னொரு ட்ரக்காரர் கவனித்து தகவல் சொல்லி மருத்துவமனை கொண்டுசெல்லும் முன் உயிர்விட்டான் உமேஷ். நியாயமாய் 27 ரூபாய்க் கட்டணம் செலுத்தச் சொன்னதற்காக கொலைசெய்யப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்வது. உமேஷின் மறைவால் மூன்றே மாதத்திற்கு முன் உமேஷை மணந்தவளும் உமேஷின் சம்பளத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்த நால்வரும் (வயதான பெற்றோர்கள் மற்றும் இரு அண்ணன்கள்) மீளாத்துயரில் வாடுகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகளில்லை. இந்தக் குடும்பத்திற்கு உதவ முன்வருவோர் கீழ்காணும் முகவரிக்கு காசோலை அனுப்பலாம். (நன்றி: NDTV)

Ramrati Pandey
Account Number: 30496591243
State Bank of India
Birha, Bijhauli, Hanumana,
Rewa, Madhya Pradesh
India
Pin Code: 486335

மேலும் விவரங்களுக்கு NDTV ன் இந்த லிங்கைப் பார்க்கவும்.

6 comments:

ஜெய்லானி சொன்னது…

ச்சே..என்ன கொடுமை இது :-(

Rathnavel Natarajan சொன்னது…

நாம் சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கொடுமையான நிகழ்வு இது... படித்தபோதே மனது கலங்கியது. எங்கே இருக்கிறோம் நாம்!

ADHI VENKAT சொன்னது…

27 ரூபாய் கட்டணத்திற்க்காக கொலையா!

கொடுமை.....:(

'பரிவை' சே.குமார் சொன்னது…

என்ன கொடுமை இது...

படித்த போதே மனது கலங்கியது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனதை கலங்கவைத்த பகிர்வு.

Quote

Followers