Google+ Followers

சனி, 15 அக்டோபர், 2011

உதயநிலா

இன்று வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கர்வா சவுத் (KARVA CHAUTH)  கொண்டாடப்படுகிறது. திருமணமான இந்துப் பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நிலவு வரும் வரை விரதமிருப்பார்கள். நிலவு வந்ததும் அதை நீரிலோ, துப்பட்டா அல்லது சல்லடை வைத்தோ பார்த்து பின் கணவன் முகம் பார்ப்பார்கள். "கடவுளே என் கணவனுக்கு ஆரோக்யமான நீண்ட ஆயுள் கொடு, நான் சுமங்கலியாக (இவனைத் தனியே தவிக்கவிட்டுட்டு!) இறக்க வேண்டும்" என வேண்டிக்கொள்வார்கள்.கர்வா என்றால் மண்கலசம். சௌத் (சௌதா) என்றால் நான்கு (அதாவது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள்). மண் கலசத்தில் நீரையோ அல்லது பாலையோ நிரப்பி அதில் பஞ்ச ரத்தினங்களை இட்டு தானமாகக் கொடுத்து கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் பண்டிகை என்று பொருள்.


 அந்த காலத்தில் வெகு தொலைவில் வாக்கப்பட்டுப் போகும் பெண்கள், ஏதாவது  பிரச்சனை என்றால் தங்கள் குடும்பத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள இயலாது. அதனால் நாத்தனார் அல்லது அருகில் உள்ள குடும்பத்துப் பெண்களை சகோதரியாக ஏற்று பிரச்சனைகளை பேசிக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவும் இந்தப் பண்டிகை பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது. இன்றோ சாமியார் மடத்தில் பூனை கட்டிய கதையாய், மருதாணி இட்டு வளையல் போட்டு புடவை கட்டும் பண்டிகையாகிப் போனது கர்வா சௌத்.கர்வா சௌத் அன்று சூரிய உதயத்தில் இருந்து நிலவு வரும் வரை தண்ணீர் கூட குடிக்காமல் பெண்கள் கணவனுக்காக விரதமிருக்கிறார்கள். முன்தினமே கை நிறைய வளையல் வாங்கிக்கொண்டு மருதாணி இட்டுக்கொள்கிறார்கள். அன்று பெரும்பாலும் முகூர்த்த புடவைகளை கட்டிக்கொண்டு தெருவில் உள்ள பெண்களெல்லாம் ஒன்றாய் கூடி பூஜை செய்கிறார்கள்.


 உதயநிலா 
அன்று 
சந்திரனைப் பார்த்த 
சல்லடைத் தட்டுவழி 
இந்திரனைப் பார்த்தாள்
ரதி - அதன்பின் 
ஒவ்வொரு நாளும் 
விடிகிறது அவனுக்கு 
உதயநிலா முகம் பார்த்து...

18 comments:

G.M Balasubramaniam சொன்னது…

தகவலுக்கும் பகிர்தலுக்கும் நன்றி. உதய நிலா வெகு அழகு. சில திரைப் படங்களில் காணும் சில விஷயங்கள் புரிவதில்லை.இப்போது ஒரு சில காட்சிகளின் பொருள் புரிகிறது. இதே போல் கல்யாணத்தில் செருப்பு மறைத்து தேடுவார்கள். இதன் பின்னணியும் இதுவரை புரியாத ஒன்று.

மனோ சாமிநாதன் சொன்னது…

வித்தியாசமான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மீள் பதிவு எனினும் நல்ல பகிர்வு.... அந்த பண்டிகை கொண்டாடப்படும் நாளில்....

இப்போது இந்தப் பண்டிகைக் கொண்டாடப்படும் விதமே மாறிவிட்டது நேற்று ஒருவர் புலம்பிக்கொண்டு இருந்தார் அலுவலகத்தில்... இந்த வருடம் மட்டும் அவரது தங்கமணி அவருக்கு வைத்த செலவு - 4000/-... புலம்பல் அதனால் கூட இருக்கலாம்.. :)

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

தமிழ்மணம் 3

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அருமையான தகவ்ல் பகிர்வுக்கும்,
அற்புதமான படங்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்>

ரிஷபன் சொன்னது…

இன்றோ சாமியார் மடத்தில் பூனை கட்டிய கதையாய், மருதாணி இட்டு வளையல் போட்டு புடவை கட்டும் பண்டிகையாகிப் போனது கர்வா சௌத்.

இப்படித்தான் பல விஷயங்கள் சடங்காகி விட்டது. இருந்தாலும் பண்டிகையின் அழகும் அதனால் வரும் உற்சாகமும் குறைவதே இல்லை.

சிவகுமாரன் சொன்னது…

உதயநிலா. அந்த மருதாணி விரல்கள் என்று இரண்டு கவிதைகளும் அருமை.
அறியாத தகவல்கள் .
பகிர்வுக்கு நன்றி.

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
r.v.saravanan சொன்னது…

தகவல்கள் பகிர்வுக்கு நன்றி i நண்பரே படங்கள் சூப்பர்

மாலதி சொன்னது…

தகவலுக்கும் பகிர்தலுக்கும் நன்றி. உதய நிலா வெகு அழகு

ஆதிரா சொன்னது…

புதிய தகவல். அறியாதது. தகவலுக்கு நன்றி உதயநிலா.

இத்தகவலை நான் உங்கள் அனுமதியுடன் உங்கள் பெயரில் ஈகரை தமிழ் களஞ்சியத்தில் பதிவு செய்கிறேன் தோழர். மீண்டும் நன்றி

ஆதிரா சொன்னது…

நான் அறிந்து கொண்ட புதிய தகவலை நான் இணைந்துள்ள வலைத்தள உறவுகளும் அறியும் பொருட்டு உங்கள் பதிவை அங்கு பதிவு செய்துள்ளேன். இணைப்பு கீழே கொடுத்துள்ளேன். நன்றி

http://www.eegarai.net/t72753-topic#657090

ஆதிரா சொன்னது…

மிக்க நன்றி கலாநேசன்.

ஹேமா சொன்னது…

உண்மையில் எனக்கும் புதிய தகவல் !

மகேந்திரன் சொன்னது…

தகவல்கள் களஞ்சியமாய்...
பகிர்வுக்கு நன்றி நண்பரே.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் இன்ஃபர்மேஷன்ஸ்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

மிக அருமையான விளக்கம் கார்வா சவுத் பற்றி..:)

Quote

Followers