நண்பர் LK தனது கவிச்சோலை வலைப்பூவில் ஒரு கவிதைப்போட்டி அறிவித்திருக்கிறார். கீழுள்ள முத்தொள்ளாயிரப் பாடலுக்கு புதுக்கவிதை எழுதுவது தான் போட்டி.
பாடல்
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.
கவிதை 1
வீரனாம் சேரனை
வெல்லவரும் பகைவர்தேரை
வீதியில் சாய்ப்பதும்
வெறிகொண்டு மிதிப்பதுமே
வேலையெனக் கொண்டதோர்
வெற்றி யானை.
விண்ணிலே மின்னிய
வெண்ணிலா கண்டதும்
அங்கோர் தேர்க்குடை
அசைகிறதே என்றெண்ணி
தும்பிக்கை நீட்டியே
துடைத்தெரியப் பார்த்ததாம்!
இது போட்டிக்கான என் கவிதை நீங்களும் எழுத வேண்டுமா?
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்....
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.
கவிதை 1
வீரனாம் சேரனை
வெல்லவரும் பகைவர்தேரை
வீதியில் சாய்ப்பதும்
வெறிகொண்டு மிதிப்பதுமே
வேலையெனக் கொண்டதோர்
வெற்றி யானை.
விண்ணிலே மின்னிய
வெண்ணிலா கண்டதும்
அங்கோர் தேர்க்குடை
அசைகிறதே என்றெண்ணி
தும்பிக்கை நீட்டியே
துடைத்தெரியப் பார்த்ததாம்!
இது போட்டிக்கான என் கவிதை நீங்களும் எழுத வேண்டுமா?
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்....
கவிதை 2
வீரம் செறிந்த சேரமன்னனை
அம்பாரியில் அமர்த்தியே
வீறுநடை போடும் வெற்றி
வேழத்தின் துதிக்கைக்கு
செற்றார்தம் தேரினையும்,
வெண்கொற்றக் குடையினையும்
வீழ்த்துவதே வழக்கம்...
வழக்கமான பழக்கத்தினால்
வான்மதியும் வேற்றரசன்
தேர்க்குடையாய்த் தெரிந்திட
அக்கணமே அம்புலியைத்
துவம்சம் செய்திட - தம்
துதிக்கையைச் சுழற்றியதே
சூறாவளியாய்..!
17 comments:
பின்னூட்டப் பெட்டியில் இருந்த பிரச்சனை தீர்ந்தது.
இரு கவிதைகளும் நன்றாகவே பொருத்தமானதாகவே உள்ளன.
இரண்டாவதை விட முதல் கவிதை இன்னும் சிறப்பாக இருப்பது போல எனக்குத்தெரிகிறது.
முதல் கவிதையை வெளியிட்டவுடனேயே படித்து விட்டேன். COMMENTS BOX OPEN ஆகாமல் இருந்ததால் அப்போது பின்னூட்டம் இடமுடியவில்லை.
பரிசுபெற வாழ்த்துக்கள்.
@ வை.கோபாலகிருஷ்ணன் : நன்றி அய்யா..முதல் கவிதை என்னுடையது. இரண்டாம் கவிதை வலையுலகுக்கு வரப்போகும் ஒருத்தருடையது....
கவிதைகள் இரண்டும் அருமை. போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்..
கலக்கல் கவிதைகள் சகோ..
கலக்கல் கவிதைகள் சகோ..
உங்கள் இடுகையைப் படித்தபிந்தான் போட்டி பற்றி தெரிந்தது. இந்த ஊர்க்குருவியும் பறக்கிறது. கலைச்சோலையில் பின்னூட்டமாக எழுதி விட்டேன். என் வலையிலும் பதிவு செய்வேன் கருத்து கூற வேண்டுகிறேன். வழக்கம்போல் உங்கள் கவிதைகள் கலக்கல்.
நன்று
@ அன்புடன் மலிக்கா : நன்றி சகோ.
@ வேடந்தாங்கல் - கருன் :நன்றி சகோ.
@ G.M Balasubramaniam : நன்றி அய்யா... உங்க கவிதையை வாசித்தேன். மிக அருமை. வாழ்த்துக்கள்.
@ அப்பாதுரை : நன்றி
பெரியப்பா எல் கே உங்களையும் கெடுத்துட்டரா? ஹா ஹா கவிதை ஓக்கே
கவிதை இரண்டுமே அழகு !!போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் !!
இரண்டு கவிதைகளுமே நன்றாக வந்திருக்கு.நானும் முயற்சி செய்தேன்.இல்லவே இல்லை !
பரிசு உங்களுக்கே.கவிதைகள் வெகு சிறப்பு.
சிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்கள்.
பரிசு பெற வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக