சமன்பாடு 1
மனிதன் = சாப்பாடு + தூக்கம் + உழைப்பு + மகிழ்ச்சி
கழுதை = சாப்பாடு + தூக்கம்
ஆகவே
மனிதன் = கழுதை + உழைப்பு + மகிழ்ச்சி
அதாவது
மனிதன் - மகிழ்ச்சி = கழுதை + உழைப்பு
தீர்வு: மகிழ்ச்சியாக வாழத்தெரியாத மனிதன் உழைக்கும் கழுதை.
சமன்பாடு 2
ஆண் = சாப்பாடு + தூக்கம் + பொருள் ஈட்டுவது
கழுதை = சாப்பாடு + தூக்கம்
ஆகவே
ஆண் = கழுதை + பொருள் ஈட்டுவது
அதாவது
ஆண் - பொருள் ஈட்டுவது = கழுதை
தீர்வு: சம்பாதிக்காத ஆண் கழுதை.
சமன்பாடு 3
பெண் = சாப்பாடு + தூக்கம் + செலவு
கழுதை = சாப்பாடு + தூக்கம்
ஆகவே
பெண் = கழுதை + செலவு
அதாவது
பெண் - செலவு = கழுதை
தீர்வு: செலவு செய்யாத பெண் கழுதை.
சமன்பாடு இரண்டு மற்றும் மூன்றின் படி
சம்பாதிக்காத ஆண் = செலவு செய்யாத பெண்
அதாவது
பெண் கழுதையாகாமல் இருக்க ஆண் சம்பாதிக்கிறான்.
ஆண் கழுதையாகாமல் இருக்க பெண் செலவு செய்கிறாள்.
ஆண் + பெண் = கழுதை + வருமானம் + கழுதை + செலவு
முடிவு : ஆணும் பெண்ணும் சேர்ந்து சம்பாதித்து செலவு செய்யும் இரு கழுதைகள்.
இந்த மொக்கைப் பதிவை படித்துவிட்டு என்னை திட்ட நினைப்பவர்கள் இதை எனக்கு ஆங்கிலத்தில் மின்னஞ்சல் செய்த கழுதையை திட்டுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
8 comments:
இப்போதெல்லாம் ஆண்கள் பெண்கள் தான் எங்குமே தென்படுகின்றனர். அந்த அளவுக்கு அவைகள் கண்ணில் தென்படக்காணோம். எங்கள் ஊரில் சுத்தமாகவே இல்லை என்று சொல்லலாம். ஒரு வேளை இந்தப்பதிவைப்படித்துவிட்டு கடுப்பாகிப் எங்காவது ஊரைவிட்டே போய் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
முன்பே ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் தமிழில் படிக்கும்போது ரசிக்கும்படியாகவே இருந்தது...
பகிர்வுக்கு நன்றி சரவணன்....
பெண் கழுதையாகாமல் இருக்க ஆண் சம்பாதிக்கிறான்.
ஆண் கழுதையாகாமல் இருக்க பெண் செலவு செய்கிறாள்.
..... What???????????? இன்னுமா உலகம் இப்படி நினைக்குது? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....
என்ன ஒரு கண்டுபிடிப்பு..
மனிதனை கழுதையோடு ஒப்பிட்டதற்கு நான் வன்னையாக கண்டிக்கிறேன்....
அப்புறம் கழுதை கோச்சிக்க போகுதுங்க...
கழுதை, மனிதனை ஒப்பிட்டுக் காமெடி செய்திருக்கிறீங்க சகோ. அருமை.
கழுதை... விடுங்கண்ணே... :)
ஹா ஹா ஹா ஹா
அட ஆத்தா ஏன் கழுத வளக்கல என்னு இப்ப தானே புரியுது
கருத்துரையிடுக