தனது அடுத்த படமான ராணாவின் முதல் நாள் படப்பிடிப்பின் பொது மூச்சுத்தினரலால் அவதிப்பட்ட ரஜினிகாந்த் ஏப்ரல் 25 ம் தேதி சென்னை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிலநாள் சிகிச்சைக்குப் பின் மீண்டும் திரைப்படப் பணிகளை தொடர்ந்தார்.
மே 13ம் தேதி உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா மற்றும் வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்ட ரஜினிக்கு நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீரக செயல்பாடுகள் குறைந்துள்ள நிலையில் மருத்துவர்கள் டயாலசிஸ் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிறப்பு வார்டில் இருந்து ராமச்சந்திரா மருத்துவமனையின் ICU வுக்கு ரஜினி மாற்றப்பட்டுள்ளார். சிகிச்சைகள் தொடர்வதாகவும் நுரையீரல் தொற்று சரியானதும் அவருடைய சிறுநீரகங்கள் மீண்டும் இயல்பாய் செயல்படத் துவங்குமென்றும் அதன் பிறகு டயாலசிஸ் தேவைப்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மை நிலை இப்படி இருக்கையில் விசமிகள் பலர் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
8 comments:
ஆண்டவன் நல்லவங்கள் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்
:)
LET US PRAY FOR HIM.
ரஜினி விரைவில் குணமடைவார்.
ரஜினி நலம் பெற பிரார்திக்கிறேன்.
நலம் பெறட்டும் திரு ரஜினி…
சூப்பர் ஸ்டார் ரஜினி நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம்
தந்திக்கு ஒரு வழி என்றால்
வதந்திக்கு நூறு வழி என்பது
சரியாகத்தான் இருக்கு
தெளிவூட்டும் நல்ல பதிவு
தொடர நல்வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக