புதன், 11 மே, 2011

புர்ஜ் காலிபாவில் தற்கொலை

புர்ஜ் காலிபா (Burj Khalifa) 160 மாடிகள் கொண்ட உலகிலேயே உயரமான இந்தக் கட்டிடம் துபாயில் உள்ளது (2717 அடிகள்). 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி திறந்துவைக்கப்பட்ட இதில் 19 வது தளத்தில் இருந்து 108 வது தளம் வரை குடியிருப்புகள். அதற்கு மேலே 37 தளங்களில் அலுவலகங்கள் இயங்குகின்றன. உலகிலேயே உயரமான மசூதி இந்தக் கட்டிடத்தின் 158வது தளத்தில் உள்ளது.

இந்தக் கட்டிடத்தின் 147 வது தளத்தில் இருந்து சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை சுமார் ஒன்பது மணியளவில் வெளியே குதித்து தற்கொலை செய்துகொண்டார். 147  வது தளத்தில் இருந்து குதித்த இவர் மற்ற தளங்களில் மோதி 108  வது  தளத்தின் பால்கனியில் விழுந்து உயிர்விட்டார். 147 வது தளத்தில் சன்னல்களோ பால்கனியோ இல்லை என்பதால் இவர் AC வைத்திருந்த துவாரத்திலிருந்து குதித்தார் என நம்பப்படுகிறது.

இந்த சோக நிகழ்வை உறுதி செய்துள்ள போலீசார் இறந்தவர் யாரென்ற விவரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். விடுமுறை கிடைக்காத இந்திய வாலிபர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


12.05.2011
இறந்தவர் சிவகங்கையைச் சேர்ந்த ஆதிராமன் கிருஷ்ணன் என்ற 38 வயது தமிழர் என்றும் அராப்டெக் (Arabtec ) என்னும் கட்டுமான நிறுவனத்தில் கிளீனராக பணியாற்றி வந்த இவரின் சூப்ரவைசர் பலமுறை கேட்டும் விடுமுறை கொடுக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளது.



18 comments:

எல் கே சொன்னது…

:((

Unknown சொன்னது…

என்ன கொடுமை சரவணா இது???

Unknown சொன்னது…

ஆனால் அழகான கட்டடம் இல்லே??

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரொம்ப மோசம்

Unknown சொன்னது…

அவனுக்கு என்ன சோகமோ!

நிரூபன் சொன்னது…

தற்கொலை பண்ணுவதிலும் சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்திருப்பாரோ இந்த இளைஞன்,
157ம் மாடிக்குப் போய்...

அதிர்ச்சியான விசயம்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

சாவிலும் சாதனை தேடியுள்ளாரோ இவ் இளைஞன்... பாவம்

மனோவி சொன்னது…

அடப் பாவமே...!

பெயரில்லா சொன்னது…

ரொம்ப கொடுமை. :(

வெங்கட் நாகராஜ் சொன்னது…

:( கொடுமையான விஷயம் சரவணன்.

Chitra சொன்னது…

really sad to know this.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் பயங்கரம். சோகம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனி சாதனை படைத்த கட்டிடத்தைப் பார்த்தால் இந்த நினைவு தவிர்க்க முடியாமல் நினைவில் வரும்.

G.M Balasubramaniam சொன்னது…

அந்த கட்டிடத்தில் குடியிருப்பவர் என்றால் பணம் படைத்தவராய்த்தான் இருக்க வேண்டும்பணம் இருந்து என்ன பலன். சோகங்கள் பல விதம்.

Jaleela Kamal சொன்னது…

ஏன் இப்படி , ரொம்ப பயங்கரமா இருக்கே

ravi சொன்னது…

very sad news

thalaivan சொன்னது…

namba mudiavillai..pesama eela porattathukkaga theekkulithu irukkalaam!!!

ராஜ நடராஜன் சொன்னது…

Shocking

Quote

Blog Archive

Followers