ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஆசிரியப்பா


'அ'னா சொல்லித்தந்த
முதல்வகுப்பு ஆசிரியை.
தொடையில் ஊசிபோட்ட
நாலாம்வகுப்பு ராமசாமி.

பேனா பரிசளித்து
பெரிதும் ஊக்குவித்த
வரலாறு - சரஸ்வதி.

எழுதிக்கொடுத்து என்னை
தமிழ்ச்சங்கத்தில் பேசவைத்த
வெங்கட்ட ராசன்.

பொதுத்தேர்வுக் கணிதத்தில்
நூற்றுக்கு நூறு
வாங்கவைத்த நடேசன்.

தேர்வரைக்குள் வந்து
தாவரவியலா? விலங்கியலா?
எது முதலில்
எழுதுகிறேன் எனப்பார்த்து
போட்டிப்பாசம் காட்டிய
உயிரியல் சகோதரிகள்.

வேதியியலோடு சேர்த்து
தேசியம் கற்பித்த
பதாமி.

ஆய்வுப்பாதையில் என்
ஆர்வத்தைத் தூண்டிய
ரவிசங்கர்.

இப்படி
ஆசிரியர்தினத்தில்
நினைத்து மகிழ
நெஞ்சார்ந்த நன்றி சொல்ல
நிறையபேர் இருந்தும்..........

'ஷூ எங்கே எனக்கேட்டு
மரஸ்கேலில் அடித்த
ஜோதிவித்யாலயா டீச்சர்'
நீங்கள்தான் என்
நினைவிலதிகம் வருகிறீர்கள்.

உங்களால்தான்
தமிழ்வழிக் கல்விக்கு
தடம்மாறினேன் நான்.
உங்களுக்கென் தனிவணக்கம்.

23 comments:

Unknown சொன்னது…

இதை என் தனி அழைப்பாய் பாவித்து யாரேனும் உங்கள் ஆசிரியர்களைப் பற்றித் தொடர் எழுதினால் மகிழ்வேன்.

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

ஆஹா!! கவிதையாவே சொல்லீட்டீங்களே!! நல்லா இருக்கு.

vanathy சொன்னது…

சூப்பர். ஆசிரியர்களுக்கு மரியாதை - கவிதை நல்லா இருக்கு. இரண்டாவது போட்டோ அழகு.

மரா சொன்னது…

நல்ல நாளில் நல்ல ஒரு நினைவூட்டல்.நன்றி.

R. Gopi சொன்னது…

சூப்பர்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையா சொல்லியிருக்கீங்க...

பத்மா சொன்னது…

very touching

என்னது நானு யாரா? சொன்னது…

உண்மை தான் பங்காளி! அடித்த டீச்சர் தான் நம் நினைவுகளில் ஊஞ்சலாடுகிறார்கள்.

அவர்கள் மேல் கொண்ட கோபமும், வெறுப்பும் கூட மறைவதில்லை. அருமையா தான் சொல்லி இருக்கீங்க! வாழ்த்துக்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

ரொம்ப அழகா உங்க ஆசிரியர்களை நினைவு கூர்ந்து இருக்கீங்க..
சந்தோசமா இருக்கு.. வாழ்த்துக்கள்..

சிவராம்குமார் சொன்னது…

நல்லா இருக்கு... உண்மையில் நம்மை ரொம்ப கண்டித்த ஆசிரியர்களே மனதில் அதிகம் நிற்பவர்கள்..

ரிஷபன் சொன்னது…

உங்களால்தான்
தமிழ்வழிக் கல்விக்கு
தடம்மாறினேன் நான்.
உங்களுக்கென் தனிவணக்கம்.

ஆஹா.. என்ன ஒரு நயமான வணக்கம்..

Jey சொன்னது…

//கலாநேசன் சொன்னது…
இதை என் தனி அழைப்பாய் பாவித்து யாரேனும் உங்கள் ஆசிரியர்களைப் பற்றித் தொடர் எழுதினால் மகிழ்வேன்.//

அண்ணே, இவர்களை நாம் மறக்க முடியுமாணே..., நானும் என் குருநாதர்கள் பற்றி எழுதுரேன் அண்ணே...,
அதெல்லாம்...சுகமான நினைவுகள் அண்ணே...

a சொன்னது…

கவிதை நல்லா இருக்கு

இரகுராமன் சொன்னது…

// 'ஷூ எங்கே எனக்கேட்டு
மரஸ்கேலில் அடித்த
ஜோதிவித்யாலயா டீச்சர்'
நீங்கள்தான் என்
நினைவிலதிகம் வருகிறீர்கள். //

adi kodukaravanga nyaabagam thaan adikadi varumo :P

arumaiya irukku . kalakungo :)

'பரிவை' சே.குமார் சொன்னது…

ஆஹா!! கவிதையாவே சொல்லீட்டீங்களே!! நல்லா இருக்கு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

Kavithaiyile oru Aasiriyar thina vaazhthu. Nallaave vandhu irukku. vaazhthukkal.

venkat.

sakthi சொன்னது…

ஆசிரியர் தினத்தன்று
அழகாய் ஒரு கவிதையை
அர்ப்பணித்துள்ளீர்கள்
வாழ்த்துக்கள்!!!

vinthaimanithan சொன்னது…

தமிழ் மாதிரியே.... இனிமையா...

ப.கந்தசாமி சொன்னது…

ஓ, பள்ளிநாட்கள். இனிமையான நினைவுகள்.

சசிகுமார் சொன்னது…

கவிதை நடையில் அருமை சார்

செல்வா சொன்னது…

ஆசிரியர்களை நினைவுபடுத்தி எனது பள்ளிக்காலத்திற்கே அழைத்து சென்று விட்டீர்கள் ..

ஜெய்லானி சொன்னது…

கவிதையா சொல்லிய பாங்கு அருமை ...!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடடா வழக்கம்போல நான் லேட்டா?

Quote

Followers