Google+ Followers

வியாழன், 16 செப்டம்பர், 2010

பறவை


மற்றவர்முன் நீ
பாடும் போதும்
மற்றவரை நீ
பாராட்டும் போதும்
குயில்.

அடுத்தவர் உன்புகழ்   
'பாடும்' போதும்
அவர்கள் உன்னை
பாராட்டும் போதும் நீ
பால்மட்டும்  பருகும்
அன்னம்.

முடிவெடுக்கும்  சில
முக்கிய நிமிடங்களில்
நிச்சயம் நீ
கிளி.

என்னிடம் நீ
பொய்யாகச் சண்டையிட்டு
மெய்யாக சமாதானம் செய்வாயே
அப்போது நீ
புறா.

இப்படி
பலமுறை நீ
பறவையானாய்.....

நானோ
உன்னைப் புரிந்துகொள்ளும்
உன்னத முயற்சியில்
என்றும் என்றென்றும்
பீனிக்ஸ் பறவையாய்......பீனிக்ஸ் தெரியாதோர் இந்த பின்குறிப்பைப் படிக்கவும்:
சூரியனைத் தொடுவதே பீனிக்சின் லட்சியம். அதன் முயற்சியில்  ஒவ்வொரு முறையும் தன் சிறகுகளை அகல விரித்து உயரே.........உயரே பறக்கும். குறிப்பிட்ட உயரத்தில் சூரியனின் சூடு தாங்காமல் உடல் கருகி மண்ணில் விழும். சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும். மீண்டும் தன் லட்சியத்தை நோக்கி உயரே பறக்கும்.

25 comments:

என்னது நானு யாரா? சொன்னது…

கவிதையோடு புதிய தகவலுமா! நாட்டில எப்படி எல்லாம் இறங்கிட்டாங்கையா...ஒரு வேலை ரூம் போட்டு யோசிப்பாங்காளோ?....

சிவராம்குமார் சொன்னது…

/

என்னிடம் நீ
பொய்யாகச் சண்டையிட்டு
மெய்யாக சமாதானம் செய்வாயே/
நல்லா இருக்கு...
ஆனா பீனிக்ஸ் பறவை என்று ஒன்று கிடையாது என்று கேள்வி.... :-)

வெறும்பய சொன்னது…

கவிதை அழகு... தகவல் அருமை...

Chitra சொன்னது…

அழகிய கவிதை...... phoenix பறவை - ஒரு mythology - அதைக் கொண்டும், கவிதையில் அழகை சேர்த்து இருப்பது அருமை.

http://en.wikipedia.org/wiki/Phoenix_%28mythology%29

சே.குமார் சொன்னது…

கவிதை அழகு... தகவல் அருமை...

விக்னேஷ்வரி சொன்னது…

:)

இரா கோபி சொன்னது…

நல்லா இருக்கு

ஒரு டவுட்டு
\\அடுத்தவர் உன்புகழ்
'பாடும்' போதும்
அவர்கள் உன்னை நீ
பால்மட்டும் பருகும்
அன்னம்.\\

இந்த இடம் கோவையாக இல்லையோ?

அருண் பிரசாத் சொன்னது…

அழகு!

அன்பரசன் சொன்னது…

கவிதை அருமை...

ப.செல்வக்குமார் சொன்னது…

//முடிவெடுக்கும் சில
முக்கிய நிமிடங்களில்
நிச்சயம் நீ
கிளி.//

கவிதை கலக்கலா இருக்குங்க ..!! பீனிக்ஸ் பறவை பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் .. ஆனா பார்த்ததில்லை ..!!

மோகன்ஜி சொன்னது…

பீனிக்ஸ் பறவையை பொருத்தமாய் கவிதையில் பறக்கவிட்ட நயம் அழகு. வாழ்த்துக்கள் கலாநேசன்.

vanathy சொன்னது…

very nice kavithai!

சீமான்கனி சொன்னது…

//நானோ
உன்னைப் புரிந்துகொள்ளும்
உன்னத முயற்சியில்
என்றும் என்றென்றும்
பீனிக்ஸ் பறவையாய்......//

சூப்பர்...பறவை படித்த மனதுக்கு கவிதை பிடித்து போகிறது...வாழ்த்துகள் நேசன் சார்...

சேலம் தேவா சொன்னது…

எப்பயும் போல கலக்கல்ண்ணே!!!

VELU.G சொன்னது…

ரொம்ப நல்லாயிருக்குங்க

எப்பவும் பீனிக்ஸ் பறவையாகவே இருக்காதீங்க பாஸ்

உங்க பறவைய வேற யாராவது கொத்திட்டு போயிடுவாங்க

கலாநேசன் சொன்னது…

@என்னது நானு யாரா?: நன்றி
@சிவராம்குமார்:ஆமாங்க அப்படி ஒரு பறவை கிடையாது.
@வெறும்பய: நன்றி
@Chitra : Thanks for the link. எனக்கு முன்னாடியே தெரியுங்க.
@சே.குமார்:நன்றி
@விக்னேஷ்வரி: ??

கலாநேசன் சொன்னது…

@இரா கோபி: நன்றி. தட்டச்சும்போது விட்டுப்போன வார்த்தைகளை சரிசெய்துவிட்டேன்.
@அருண் பிரசாத்:நன்றி
@அன்பரசன்:நன்றி
@ப.செல்வக்குமார்:அத எங்கயுமே பார்க்க முடியாது.
@மோகன்ஜி:நன்றி

கலாநேசன் சொன்னது…

@vanathy:நன்றி
@சீமான்கனி : நன்றி
@சேலம் தேவா :நன்றி
@VELU.G :நன்றி.நண்பா இப்போ அது என் கூட்டுப்பறவை.

அண்ணாமலை..!! சொன்னது…

ஒவ்வொரு பறவைக்கும் அழகான வர்ணனைகள்!
அழகு நண்பரே!

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

அழகான கவிதை... பீனிக்ஸ் பறவை பற்றிய கதை என்பது ஒரு கற்பனை என்றே நான் நினைக்கிறேன்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…

உங்கள் வலைத்தள வடிவமைப்பு பச்சைப் பசுமையாய் அழகாக உள்ளது... நன்று..

siva சொன்னது…

hm superna..

athavathu vetila sandai pottu eluthina kavithai pola alaga erukkuna..

last lines touching..

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

அடுத்தவர் உன்புகழ்
'பாடும்' போதும்
அவர்கள் உன்னை
பாராட்டும் போதும் நீ
பால்மட்டும் பருகும்
அன்னம்.//

அருமை கலா நேசன்..:))

sweatha சொன்னது…

வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

ஹேமா சொன்னது…

கலாநேசன்...கவிதை சிந்தனை அருமை.பீனிக்ஸ் பற்றிய தகவல் என்றுமே உண்மையா என்கிற சந்தேகம் எனக்கும் !

Quote

Followers