Google+ Followers

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

கூட்டாஞ்சோறு 10.09.10

 பெரிய பெயர் பெற்றவர்.....
 உலகிலேயே மிக நீளமான ஆறு எதுன்னு கேட்டா நீங்க அமேசான்னு சரியாவோ இல்ல நைல்னு தப்பாவோ சொல்லிடுவீங்க. உலகிலேயே நீளமான பேர் யாரோடதுன்னு கேட்டா சொல்ல முடியுமா?

Adolph Blaine Charles David Earl Frederick Gerald Hubert Irvin John Kenneth Lloyd Martin Nero Oliver Paul Quincy Randolph Sherman Thomas Uncas Victor William Xerxes Yancy Zeus Wolfe­schlegelstein­hausenberger­dorffvoraltern­waren­gewissenhaft­schaferswessen­schafewaren­wohlgepflege­und­sorgfaltigkeit­beschutzen­von­angreifen­durch­ihrraubgierigfeinde­welche­voraltern­zwolftausend­jahres­vorandieerscheinen­wander­ersteer­dem­enschderraumschiff­gebrauchlicht­als­sein­ursprung­von­kraftgestart­sein­lange­fahrt­hinzwischen­sternartigraum­auf­der­suchenach­diestern­welche­gehabt­bewohnbar­planeten­kreise­drehen­sich­und­wohin­der­neurasse­von­verstandigmen­schlichkeit­konnte­fortplanzen­und­sicher­freuen­anlebens­langlich­freude­und­ruhe­mit­nicht­ein­furcht­vor­angreifen­von­anderer­intelligent­geschopfs­von­hinzwischen­sternartigraumen, Senior
 
இப்போ நீங்க படிச்சதுதான் (நெசமா படிச்சிங்களா?) உலகிலேயே நீளமான மனிதப்பெயர். மொத்தம் 746 எழுத்துக்கள் (நல்லா பாருங்க A B C D ன்னு துவங்கி Z வரைப்போய் அப்பவும் அடங்காம ஆறு வரி சேத்துருக்காங்க) இவர செல்லமா Wolfe­schlegelstein­hausenberger­dorff ன்னு கூப்பிடலாமாம்.

பிஞ்சிலேயே பழுத்தது 
இந்தோனேசியாவில் ஒரு சிறுவன் இல்லை இல்லை ஒரு குழந்தை 18 மாதத்தில் இருந்தே சிகரெட் குடிக்கிறதாம். இரண்டு வயதாகும் ஆர்டி ரிசால் (Ardi Rizal ) இப்போது ஒரு நாளைக்கு 40 சிகரெட் குடிக்குமளவுக்கு புகைப்பழக்கத்துக்கு அடிமை ஆகி இருக்கிறான். இப்போது சிகரெட் தர மறுத்தால் சுவற்றில் முட்டிக்கொள்ளும் அளவுக்கு சாருக்கு கோவம் வருகிறதாம். என்ன கொடும சார் இது....

 


நொறுக்ஸ் 
  • இனி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் இரு அணிகளும் கோல் போடாமல் இருந்தாலோ அல்லது சமநிலையில் இருந்தாலோ கூடுதல் நேரம் ஒதுக்கப்படாது. நேரடியாக பெனால்டி கிக் தான்.
  • இன்றைய ரமலான் நோன்புக்கும் நாளைய விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்துக்கள். கலைஞர் தொலைக்காட்சியில் நாளை விநாயகர் சதுர்த்தி இல்லையாம் விடுமுறைதின சிறப்பு நிகழ்சிகளாம் (நாத்திகம்??)
  • காமன்வெல்த் போட்டி வரலாற்றிலேயே அதிக செலவு செய்தது நாம்தான். முதலில் 617.5 கோடி என்றார்கள், அப்புறம் 1895.3 கோடி அப்புறம் 7000 கோடி என்றார்கள். இப்போதைய நிலவரப்படி 65500 கோடி செலவாகுமாம். காமன்வெல்த் போட்டி 2014 ல் நடத்தப்போகும் ஸ்காட்லான்ட் திட்டமிட்டுள்ளது மொத்தமே 3749 கோடிகள்.
  • இன்னும் 23 நாட்களே மீதமுள்ள நிலையில் போட்டிக்கான 24 செயல்திட்டங்களில் 16 மட்டுமே நிறைவடைந்துள்ளது. அதே சமயம் 2014ல் போட்டிகள் நடக்கப்போகும் ஒரு அரங்கைப்பாருங்கள். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்....?

 குத்திக் காட்டியது தமிழ் 
(இந்தக் கவிதையை மின்னஞ்சலில் படித்ததும் நறுக்கென மனதில் தைத்தது)

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
தவறி விழும்முன் சொன்னேன்
SORRY தாத்தா என்று...

கழுத்துவரை போர்த்திவிடும்
கருணைமிகு தாய்க்கு
தூக்கத்திலும் சொன்னேன்
THANKSமா என்று...

நாளை பிறந்தநாள்
நண்பனுக்கு எழுதினேன்
HAPPY BIRTH DAY என்று...

கோவிலில் பார்த்த
சிநேகிதியின் கணவனுக்கு
அவன் சொல்லும்முன் முந்திக்கொண்டு
HAI என்றேன்...

கடற்கரை மணலில் என்னவள்
கைபிடித்து எழுதினேன்
I  LOVE YOU என்று...

வீட்டிற்குச் செல்கையில்
காலில் முள் குத்தியது
அலறினேன்
"அம்மா" என்று.....

18 comments:

vanathy சொன்னது…

நீள....மான பெயர் தான்.
சரி விடுங்க பொடியனுக்கு என்ன கவலையோ?? நல்லா அப்படித் தான் புகை விடணும் அப்பு.

இரா கோபி சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.

என்னது நானு யாரா? சொன்னது…

கூட்டாஞ்சோறு அருமை நண்பா! அந்த பொடியன் மேட்டரு மனசை என்னமோ செஞ்சது!

கவிதை சூப்பரு... நல்லாயிருக்கு!

வெறும்பய சொன்னது…

ரொம்ப சின்ன பெயரா இருக்கே..
//
காமன்வெல்த் போட்டியிலையாவது மத்த நாடுகளும், நம்ம நாட்டு மக்களும் தெரிஞ்சுக்கட்டும்... இந்தியா ஏழை நாடு இல்லைன்னு...(கணக்கில வந்தது இவ்வளவுன்னா.. பாக்கெட்டில பதுங்கினது எத்தன கொடியோ..)
//
ஏற்க்கனவே படித்ததுதான்.. ஆனால் யோசிக்க வைத்த கவிதை..
//
கூட்டாஞ்சோறு.. நல்ல சுவை..

வெறும்பய சொன்னது…

அனைவருக்கும் ஈத் பெருநாள் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

இவர் பெயர் சொல்லி கூப்பிடுவதற்குள், ஒரு மைல் போய் இருப்பார் போல.......
இந்த சின்ன வயதில் சிகரட் addiction .... டூ மச் இல்ல, டென் மச்!!!!!

விக்னேஷ்வரி சொன்னது…

கவிதை நல்லாருக்கு.

ப.செல்வக்குமார் சொன்னது…

//
இப்போ நீங்க படிச்சதுதான் (நெசமா படிச்சிங்களா?)///
சத்தியமா படிக்கலை .!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//நாளை விநாயகர் சதுர்த்தி இல்லையாம் விடுமுறைதின சிறப்பு நிகழ்சிகளாம் (நாத்திகம்??)///

அதவிட அவுங்க தை 1 தமிழ்புத்தாண்டு அப்படின்னு அறிவிச்சுடுவாங்கலாம் ,
அப்புறம் சித்திரை 1 விடுமுறை விடுவாங்களாம்.!

ப.செல்வக்குமார் சொன்னது…

//வீட்டிற்குச் செல்கையில்
காலில் முள் குத்தியது
அலறினேன்
"அம்மா" என்று.....///

ஆபத்து வந்தால்தான் தமிழ் வருதோ ..!!

பின்னோக்கி சொன்னது…

கண்டிப்பா அந்தப் பெரிய பெயரைப் படிக்கலை :).

அந்தப் பையனின் பெற்றோர்களைப் போலீஸ் பிடித்து ரிவிட் அடித்ததாக தகவல். இப்பொழுது அந்தப் பையன் அரசாங்க காப்பகத்தில்னு நினைக்கிறேன்.

2014க்கு இப்பவே ரெடியா ?. எந்த ஊருன்னு சொல்லையே ?

விடுமுறை நாளில் போடபோற படத்து பேரு “நான் கடவுள்”. நல்லவேளை படத்துப் பெயரையாவது சொல்றாங்களே.

பின்னோக்கி சொன்னது…

2014. ஹி.ஹி... கொஞ்சம் ஸ்பீடா படிச்சுட்டேன். மன்னிக்க.. ஸ்காட்லாண்டு

Murali.R சொன்னது…

விநாயக சதூர்த்தி வாழ்த்துக்கள்!! என் ப்ளாக் வந்து குறை, நிறை சொல்லூங்க

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

ஹேமா சொன்னது…

கலாநேசன்...கூட்டாங்சோறு குழைத்ததில் குறும்புப் படங்களும் கவிதையும் ருசி !

நியோ சொன்னது…

கூட்டாஞ்சோறு அருமை தோழர்!

சே.குமார் சொன்னது…

கவிதை நல்லா இருக்கு.

ஸாதிகா சொன்னது…

பலவித சுவைகளில் கூட்டாஞ்சோறு அருமை.

வைகறை சொன்னது…

நச்... கவிதை!

Quote

Followers