கல்லூரிக் காலத்தில்
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!
உண்டு குடித்து உறங்கி
ஊர்சுற்றித் திரிந்தபோதும்
கண்டுகொள்ளவேயில்லை என்னுள்
காதல் விதை உறங்கியதை!
உன்புன்னகை சிந்திய
பொன்னொளி பட்டதும்
உறங்கிய விதையது
உயிர்பெற்றது விருட்சமாய்!
எப்படிச் சொல்வதென்று
எண்ணித் தவிக்கையில்
தேவதை நீயே
தித்திக்கும் வரம்தந்தாய்!
வாகனத்தில் உடனமர்ந்து
வருவதற்கே தயங்கியவள்
வாழ்க்கை முழுவதுமே
உடன்வர சமதித்தாய்!
நீயென் மூச்சுக்காற்றில்
ஊதிய பந்து
முதல்முதல் பாடிய
காவடிச் சிந்து!
மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!
இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்........
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
▼
2010
(47)
- ► செப்டம்பர் (5)
7 comments:
வாவ்...
அட்டகாசமான கவிதை சார்...
நன்றி அகல்விளக்கு
//காதல் விதை உறங்கியதை!//
அதான் முளைச்சு மரமாகிடுச்சே....
KRP அண்ணே,
வருகைக்கு நன்றி
//காதல் விதை உறங்கியதை!//
அதான் முளைச்சு மரமாகிடுச்சே....
"பார்வை ஒழி
பட்டபின் தான்
காதல் விதை
முளைத்தது"
//காதல் விதை உறங்கியதை!//
அதான் முளைச்சு மரமாகிடுச்சே....
அட, நீங்க என்னை சொன்னீங்களா?
நாங்கல்லாம் first yearlaye ஆரமிசிட்டம்ல.
(அதை பற்றி அடுத்த பதிவில்)
இந்த கவிதை நண்பனைப் பற்றியது.
இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்........
"Arumaiyana vari" Super.
கவிதை நன்றாக இருக்கிறது.
மனோ
கருத்துரையிடுக