அது ஒரு
ஆடிமாத புதன்கிழமை
பௌர்ணமி நாள்.
அன்று தான்
நிலா என்னுடன்
உலா வருவதாய்
உறவு பேசியது.
இன்றுநான் புதிதாய் பிறந்தேன் - ஆம்
இன்றுதான் புதிதாய் பிறந்தேன்
காதலர் சொல்லும் கவிமொழியை
நானன்று வழி மொழிந்தேன்!
இதுவரை
காதலை நான்
காதலித்துக்கொண்டிருந்தேன்.
இன்று தான்
காதல் என்னை
காதலிப்பதாய்ச் சொல்லியது!
என்
அசைகின்ற ஓவியம்
அன்புமொழி பேசினாள்.
நானோ
தாய்மொழியிலும்
தடுமாறிப் பேசினேன்.
"வருங்கால மனைவியாக
நானுனக்கு
வருவதற்கு தகுதியுண்டா" என்றாள்.
இன்பக் கோவிலின்
இதய தெய்வத்தை
இமைக்காமல் பார்த்தேன் நான்.
யோசிக்க வேண்டுமா என்றாள்.
யோசிக்கவும் வேண்டுமா என்றேன்.
அதற்குப்பின் பேசியது
அனைத்துமே மௌனமொழி
விழியிட்ட வினாவிற்கு
விழியாலே விடை சொன்னோம்............
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
▼
2010
(47)
- ► செப்டம்பர் (5)
3 comments:
காதல் ஒரு பெரிய போதை...
அதுல விழுந்தா நீந்தி கரை சேரவே முடியாது..
கவிதை அருமை ..
வார்த்தைகளில் காதல் கசிகிறது . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி
நன்றி
நன்றி
கருத்துரையிடுக