புதன், 28 செப்டம்பர், 2011

நாய்க்கடி நாள் வாழ்த்துக்கள்

இன்று உலக ராபிஸ்(Rabies) தினம். நண்பர்கள் தினம், மகளிர் தினம், அப்பாக்கள் தினம், அன்னையர் தினம், நாத்தனார் தினம், கொழுந்தியா தினமெல்லாம் கொண்டாட ஆரம்பித்துவிட்ட நாம் நாய்க்கடி தினம் பற்றியும் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதில் தவறில்லை தானே!

ராபிஸ் என்பது வைரஸ் தாக்குதலுக்கு உண்டான நாயிடாமிருந்து மனிதனுக்குப் பரவும் கொடுமையான நோய். கடிபட்ட இடத்திலிருந்து வைரஸ் நரம்பு மண்டலம் வழியாக மூளையைத் தாக்கும். இதற்கு ஒரு சில வாரங்கள் கூட ஆகலாம். ராபிஸ் வைரஸ் மூளையை அடையும் முன் தடுக்காவிட்டால் நிச்சயம் மரணம் தான். எனவே நாய்க்கடித்த உடன் செய்யவேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.

  1. கடிபட்ட இடத்தை நிறைய தண்ணீர் விட்டு குறைந்தது பத்து நிமிடமேனும் நன்றாகக் கழுவ வேண்டும்.
  2. டெட்டால் அல்லது சோப்புத் தண்ணீரைத் தெளிக்கலாம். ஆனால் கடிபட்ட இடத்தை மூடக் கூடாது.
  3. அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று ராபிஸ் நோய்க்கான தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

5 comments:

Philosophy Prabhakaran சொன்னது…

அந்த கருமாந்திரம் புடிச்ச நாள் இன்னைக்குத்தான் வந்து தொலைக்கனுமா... விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

விழிப்புணர்வு பகிர்வு.....

நாய்க்கடி பற்றி பலருக்கு அவ்வளவாக தகவல்கள் தெரிவதில்லை. மிகவும் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணரச் செய்த பகிர்வு....

ஹுஸைனம்மா சொன்னது…

பகிர்வுக்கு நன்றிங்க. எனக்கு இதனாலேயே நாயைக் கண்டாலே அலர்ஜி. அதுவும் சிலருக்கு வீட்டு நாய் கடித்தே ரேபிஸ் வந்ததைக் கேள்விப்பட்டதிலிருந்து... கூடுதல் அலர்ஜி.

'பரிவை' சே.குமார் சொன்னது…

விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு நன்றி.

ADHI VENKAT சொன்னது…

விழிப்புணர்வு பதிவு.

அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது.

Quote

Followers