திங்கள், 5 செப்டம்பர், 2011

ஆசிரியப்பா


'அ'னா சொல்லித்தந்த
முதல்வகுப்பு ஆசிரியை.
தொடையில் ஊசிபோட்ட
நாலாம்வகுப்பு ராமசாமி. 

பேனா பரிசளித்து
பெரிதும் ஊக்குவித்த
வரலாறு - சரஸ்வதி.

எழுதிக்கொடுத்து என்னை
தமிழ்ச்சங்கத்தில் பேசவைத்த
வெங்கட்ட ராசன்.

பொதுத்தேர்வுக் கணிதத்தில்
நூற்றுக்கு நூறு
வாங்கவைத்த நடேசன்.

தேர்வறைக்குள் வந்து
தாவரவியலா? விலங்கியலா?
எது முதலில்
எழுதுகிறேன் எனப்பார்த்து
போட்டிப்பாசம் காட்டிய
உயிரியல் சகோதரிகள்.

வேதியியலோடு சேர்த்து
தேசியம் கற்பித்த
பதாமி.

ஆய்வுப்பாதையில் என்
ஆர்வத்தைத் தூண்டிய
ரவிசங்கர்.

இப்படி
ஆசிரியர்தினத்தில்
நினைத்து மகிழ
நெஞ்சார்ந்த நன்றி சொல்ல
நிறையபேர் இருந்தும்..........

'ஷூ எங்கே எனக்கேட்டு
மரஸ்கேலில் அடித்த
ஜோதிவித்யாலயா டீச்சர்'
நீங்கள்தான் என்
நினைவிலதிகம் வருகிறீர்கள்.

உங்களால்தான்
தமிழ்வழிக் கல்விக்கு
தடம்மாறினேன் நான்.
உங்களுக்கென் தனிவணக்கம்.

6 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகாய் ஒரு ஆசிரியப்பா... மிகவும் நன்றாக இருக்கிறது...

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு.
அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

thendralsaravanan சொன்னது…

ஹ ஹ ஹா...அது என்னவோ தெரியல யாரை ரொம்ப கண்டிக்கிறோமோ அந்த மாணவர்கள், ஆசிரியர் மேல் அளவு கடந்த பாசத்தை கொண்டிருப்பார்கள்...
அழகான பா!
பகிர்வுக்கு நன்றி!

Yaathoramani.blogspot.com சொன்னது…

ஒவ்வொரு ஆசிரியரையும் பெயரோடு அவர்கள்
தனித்தன்மையினையும் மிக அழகாகச்
சொல்லிச் செல்லும் விதம் அருமை
ஆசிரியப்பா மிக மிக அருமை.வாழ்த்துக்கள்
த.ம3

அம்பாளடியாள் சொன்னது…

ஆசிரியர்தின வாழ்த்துக் கவிதை அருமை வாழ்த்துக்கள் சகோ ........

பெயரில்லா சொன்னது…

Can You Win at least one point in a sport - Sporting 100
There are some very different ways to do this - Betting on your favourite team 토토 사이트 도메인 in your favourite sport. One way to do this is to bet on the underdog - either by betting on

Quote

Followers