ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

மனப்பெண்


கல்லூரிக் காலத்தில்
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!

உண்டு குடித்து உறங்கி
ஊர்சுற்றித் திரிந்தபோதும் 
கண்டுகொள்ளவேயில்லை என்னுள்
காதல் விதை உறங்கியதை!

உன்புன்னகை சிந்திய 
பொன்னொளி பட்டதும்
உறங்கிய விதையது
உயிர்பெற்றது விருட்சமாய்!

எப்படிச் சொல்வதென்று
எண்ணித் தவிக்கையில்
தேவதை நீயே
தித்திக்கும் வரம்தந்தாய்!

வாகனத்தில் உடனமர்ந்து
வருவதற்கே தயங்கியவள்
வாழ்க்கை முழுவதுமே
உடன்வர சமதித்தாய்!

நீயென் மூச்சுக்காற்றில்
ஊதிய பந்து
முதல்முதல் பாடிய
காவடிச் சிந்து!

மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!

இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்.....

12 comments:

Unknown சொன்னது…

சந்தோசமா??ஹிஹி

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
எத்தனை பேருக்குத்தான்
மனப்பெண்ணே மணப்பெண்ணாய்
வாய்க்கப்பெறுகிறது?
பெற்றாலும் அதை மனப்பூர்வமாய்ச் சொல்ல
மனமிருக்கிறது?
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam சொன்னது…

PATHIVARKAL EZHUTHUVATHIL KARPANAI ETHU, UNMAI NILAI ETHU ENRU THELIVAAKATH THERIVATHILLAI. KAPANAIYO NIJAMO KAVITHAI AZHAKU KOLLAI POKIRATHU. GOOD. KEEP IT UP.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

”மனப்பெண்ணே மணப்பெண்ணாய்” நல்ல வார்த்தைப் பிரயோகம். நல்ல கவிதை படைத்து பகிர்ந்தமைக்கு நன்றி சரவணன்.

thendralsaravanan சொன்னது…

என்ன மறு பதிவாய் மலர வைத்துள்ளீர்கள்!!!!பிப்ரவரியில் இந்த பதிவினை படித்து விட்டேன்!!
நல்ல பதிவு!

சுபத்ரா சொன்னது…

நல்லாயிருக்கு :-)

vanathy சொன்னது…

super!

நிரூபன் சொன்னது…

கை கூடி வந்த காதலைப் பற்றிய சந்த கவி..
வார்த்தைகள் தாள கதியுடன் சரிவர வந்து விழுந்துள்ளன.

சிவகுமாரன் சொன்னது…

அட்ரா சக்கை அட்ரா சக்கை

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மனப்பெண் போலவே அருமையான கவிதை
மணப்பெண் போலவே ஜொலிக்கிறது.

பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அன்பின் சின்னமாம் ஹாட்டீன் வடிவத்தில் ஒரு ஆணும் பெண்ணும் வளைந்து கொடுப்பதாக சித்தரித்துள்ள படம் மிகவும் நன்றாகவும் பொருத்தமாகவும் உள்ளது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்.//
வாழ்த்துக்கள்.

Quote

Followers