புதன், 23 பிப்ரவரி, 2011

மனப்பெண்

கல்லூரிக் காலத்தில்
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!

உண்டு குடித்து உறங்கி
ஊர்சுற்றித் திரிந்தபோதும் 
கண்டுகொள்ளவேயில்லை என்னுள்
காதல் விதை உறங்கியதை!

உன்புன்னகை சிந்திய 
பொன்னொளி பட்டதும்
உறங்கிய விதையது
உயிர்பெற்றது விருட்சமாய்!

எப்படிச் சொல்வதென்று
எண்ணித் தவிக்கையில்
தேவதை நீயே
தித்திக்கும் வரம்தந்தாய்!

வாகனத்தில் உடனமர்ந்து
வருவதற்கே தயங்கியவள்
வாழ்க்கை முழுவதுமே
உடன்வர சமதித்தாய்!

நீயென் மூச்சுக்காற்றில்
ஊதிய பந்து
முதல்முதல் பாடிய
காவடிச் சிந்து!

மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!

இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்........

14 comments:

Chitra சொன்னது…

மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!


.....அழகான கவிதை...அருமையான வரிகள்!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

அழகான கவிதை..

பெயரில்லா சொன்னது…

கவிதை நிஜமெனில் வாழ்க காதல்...வாழ்க மணமக்கள்..உயிரோட்டமுள்ள கவிதை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

உயிரோட்டமான கவிதை...

G.M Balasubramaniam சொன்னது…

நினைவுகளோ நிகழ்வுகளோ நன்றாக உணரப்பட்டால்தான் கவிதை வடிவம் பெறும். இந்தக் கவிதை அழகாக வந்திருக்கிறது.

சேலம் தேவா சொன்னது…

லவ் பண்ணி கல்யாணம் பண்றவங்களுக்கு இந்த கவிதைய பிரேம் போட்டு தரலாம்ண்ணே..!! சூப்பர்..!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் காதல் கவிதை நண்பரே.... காதல் ரசம் சொட்டச் சொட்ட....

Unknown சொன்னது…

ஆஹா...

ADHI VENKAT சொன்னது…

நல்லதொரு காதல் கவிதை!

thendralsaravanan சொன்னது…

மனப்பெண் மணப்பெண்ணானது ...கேட்கவே இனிமையாக உள்ளது!
வாழ்த்துக்கள் தங்கள் இருவருக்கும்!

வசந்தா நடேசன் சொன்னது…

//கல்லூரிக் காலத்தில்
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!//

அட நம்மாளு.

உயிரோடை சொன்னது…

க‌விதை ந‌ன்று

பட்டிக்காட்டான் சொன்னது…

கவிதை நிஜமெனில்
வாழ்க காதல்...
வாழ்க மணமக்கள்..

Sriakila சொன்னது…

kavithai super!!

Quote

Followers