வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-3

பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-1


பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-2


பாரதி பிறந்த எட்டயபுர வீட்டில் சுமார் இரண்டரை மணி நேரம் இருந்தேன். அங்கு என்னையும் சில கொசுக்களையும் தவிர வேறு உயிர்களே இல்லை. ஒரு மாபெரும் கவிஞனின் வீட்டை அரசுடமையாக்கினால் மட்டும் போதுமா? அதைப் பராமரிக்க வேண்டாமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் வெகுசிலவே இருந்தன. ஒரு சமீபக் காலக் கவிஞனிடம் இருந்து நாம் பாதுகாத்து வைத்திருப்பது இவ்வளவுதானா என்றே தோன்றியது. பாரதியின் கையெழுத்துக்களையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சுவற்றில் பாரதியின் குடும்ப வரைபடம் வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கையில் மங்காத்தா படத்திற்கு பாட்டெழுதும் பாரதியின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் வரை இதில் சேர்க்கலாமே என்று தோன்றியது. பாரதி காணி நிலம் கேட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரின் வேண்டுதலைப் பாருங்கள்.


சுதந்திரத் தீ சுடர்விட்டு எறிந்த காலத்திலும் தாய்நாட்டுப் பற்றோடு தமிழ்ப் பாசத்தையும் வளர்க்கச் சொன்னவன்  பாரதி. இதோ ஒரு சங்கற்பங்கள் அவரின் கையெழுத்தில்...


இயன்ற வரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன்.
சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்.
எப்பொழுதும் பராசக்தி - முழு உலகின் முதற்பொருள் -அதனையே
தியானம் செய்துகொண்டிருக்க முயல்வேன்.
அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க விரும்புவேன்.

இப்படிச் சாகும் வரை தமிழைத் தன் சுவாசமாய்க் கொண்டவன் பாரதி. பாரதி போன்ற நன்னிலத்தில் தானே வளரும் தவவலிமை கொண்டது தமிழ். யாரும் தங்கள் தோட்டத்தில் நட்டு வளர்க்கத் தேவையில்லை. நாங்கள் தான் இலக்கியம் படைத்து தமிழை வளர்க்கிறோம் என்று யாரேனும் சொன்னாலோ, இவர்தான் முத்தமிழை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து பாதுகாக்கிறார் என்று எச்சில் ஒழுக யாரையேனும் புகழ்ந்தாலோ நீங்கள் நிச்சயம் சிரிப்பீர்கள் தானே!

வழிப்போக்கர் ஒருவரின் துணையோடு நான் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

சீரிய கவியே
புயலாய்ச்
சீறிய கவியே!
உன் சிலைக்கு முன்னால்
சில சின்னக் கேள்விகள்.

உன்
ஆணைகளில் எது இங்கே
அமலுக்கு வந்தது?

பிறநாட்டுச் சாத்திரங்கள்
பெயர்த்தோமா?
இறவாத தமிழ்நூல்கள்
இயற்றினோமா?

படைப்பிலக்கியம் தானே
ஒரு
சுத்தமான மொழியின்
சுவாசம்.

இங்கே
கிலோ கணக்கில்
தமிழ் வளர்க்கும்
எழுத்தாளர்களை
என்ன சொல்ல?

விற்பனைச் சந்தையின்
வியாபார அவசரத்தில்
எழுத்துக்களுக்கு இங்கே
ஆடை அணிவிக்கவும்
அவகாசமில்லை.

அச்சு எந்திரம்
இங்கே
வாசகனை உருவாக்கியது
குடிமகனை....?
(வைரமுத்துவின் கவிராஜன் கதையிலிருந்து)




23 comments:

Unknown சொன்னது…

கவிராஜனுக்கும் உங்களுக்கும் என் சல்யூட் ...

சேலம் தேவா சொன்னது…

பாரதியின் வீட்டை பார்க்கும் போது ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. நன்றிண்ணே.. உங்கள் பதிவுக்கு...

சேலம் தேவா சொன்னது…

//இங்கே
கிலோ கணக்கில்
தமிழ் வளர்க்கும்
எழுத்தாளர்களை
என்ன சொல்ல?//

யாருண்ணே அவங்க..?!

G.M Balasubramaniam சொன்னது…

பாரதிக்கு இணை பாரதிதான். அவன் இருந்த காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை, என்றாலும் இப்போதாவது பலருடைய வழிகாட்டியாக இருக்கிறான் என்று கொல்ளலாமா. சந்தேகம்தான்.

Chitra சொன்னது…

அருமையான பகிர்வுங்க...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தமிழ் இனி மெல்ல வாழும்.....

பத்மநாபன் சொன்னது…

நாங்களே நேரில் சென்று பார்த்த உணர்வை உங்கள் பதிவுகளில் கொண்டுவந்து விட்டீர்கள்..வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் பகிர்வு. நேரில் சென்று பார்க்கத் தூண்டியது. மிக்க நன்றி.

ADHI VENKAT சொன்னது…

நல்ல பகிர்வு.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

அருமையான பகிர்வு

Prasanna சொன்னது…

Very nice

அன்புடன் நான் சொன்னது…

மிக்க மகிழ்ச்சி நண்பரே... பெருமையாய் உணர்கிறேன்.

அன்புடன் நான் சொன்னது…

உங்க உணர்வுக்கும் கவீதைக்கும் என் நன்றிகள்.

அன்புடன் நான் சொன்னது…

மகாகவி வீட்டில் நீங்கள்
உங்களுக்கும் பெருமை.... மகாகவியை விரும்பும் உங்களால் அவருக்கும் பெருமை.

Unknown சொன்னது…

@ கே.ஆர்.பி.செந்தில் : அண்ணே உங்களுக்கும்.

@ சேலம் தேவா : ஒன்றா..இரண்டா..

@ G.M Balasubramaniam : சந்தேகம் வேண்டாம் அய்யா. நிச்சயம் காலம் கடந்து அவன் தமிழ்கவிதை வழிகாட்டியாக நிற்பான்.
நன்றி.

Unknown சொன்னது…

@ Chitra : நன்றி.

@ MANO நாஞ்சில் மனோ : அது சாகும் சங்கதியல்ல...

@ பத்மநாபன் : நன்றி.

Unknown சொன்னது…

@ வெங்கட் நாகராஜ் : நன்றி

@ கோவை2தில்லி : நன்றி

@ தோழி பிரஷா : நன்றி

@ Prasanna : நன்றி

Unknown சொன்னது…

தமிழ் இன்று பலரின் நாவில் நின்று நடமாட பாரதியும் ஒரு காரணம்.

உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் நண்பரே

பெயரில்லா சொன்னது…

என் பாரதியை பற்றி படிக்கையில் பெருமிதம் என்னையும் அறியாமல்..பாரதியின் கையெழுத்தை கண்டதும் கண்கள் கலங்கியது.சிறந்த பகிர்வு கலாநேசன்

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃதமிழ்ப் பாசத்தையும் வளர்க்கச் சொன்னவன் பாரதிஃஃஃஃ

ஆமாங்க உண்மையாகவே தான்...


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

Unknown சொன்னது…

வைரமுத்துவின் கவிதை சரியான இடத்தில் நினைவுகூர்ந்துள்ளீர்கள்.

Unknown சொன்னது…

//தமிழ் இன்று பலரின் நாவில் நின்று நடமாட பாரதியும் ஒரு காரணம்//

உண்மை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அங்கு என்னையும் சில கொசுக்களையும் தவிர வேறு உயிர்களே இல்லை. //
அவர் இறந்தபின்னும் அவ்ர் முகத்தில் மொய்த்த ஈக்களை விட குறைந்த எண்ணிக்கையிலான மனிதர்களே வந்திருந்தார்களாம்.

Quote

Followers