புதன், 24 நவம்பர், 2010

ஒற்றை விரல் ஓவியம்


பேருந்துப் பயணத்தில்
பின்புறம் திரும்பி
பேசுவதுபோல் ஒன்று...

புத்தகக் குழந்தைகளை
மார்பில் தாங்கியபடி
புன்னகைப்பது போல் ஒன்று...

அலுவல் நிமித்தமாய் - நான்
அயலூர் செல்கையில்
கையசைப்பது போல் ஒன்று...

சமையலறைக் கரப்பைபார்த்து
அலறித்துடித்து நீ
அஞ்சுவதுபோல் ஒன்று...

கடைத்தெரு போயெனை
காய்கறி வாங்கச்சொல்லி
கெஞ்சுவதுபோல் ஒன்று...

பிறக்காதக் குழந்தையின்
பிஞ்சுவிரல் பிடித்து 
கொஞ்சுவதுபோல் ஒன்று...

இப்படி நீ
புன்னகைப்பது...பூப்பறிப்பது...
வெட்கப்படுவது... வேடிக்கை பார்ப்பது...
முட்கள் குத்தியது...முகப்பரு வந்ததென
ஒவ்வொரு நிகழ்வையும்
ஓவியமாய் வரைந்தேன்.

பின்னொருநாள்
தூரிகை எல்லாம்
தோற்றுப்போனது -நீ
தொட்டுத்தொட்டு வரைந்த
ஒற்றை விரல் ஓவியத்தில்...

21 comments:

நிலாமதி சொன்னது…

கவிதை அழகாய் இருக்கிறது பாராட்டுக்கள்

R. Gopi சொன்னது…

நல்லா இருக்கு கலாநேசன். அந்த ஓவியம் (lady in the moonlight)சூப்பர். இப்போதான் பெரிய சைஸ் ஒன்னு வாங்கினேன்!

சைவகொத்துப்பரோட்டா சொன்னது…

முடித்த விதம் அழகாய் இருக்கிறது!

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

arumaiyaana kavithai annaa..

சேலம் தேவா சொன்னது…

உங்க கவிதையும் ஒரு ஓவியம் போலதாண்ணே..!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதையும் அதற்கேற்ற ஓவியமும் அருமை நண்பரே.

settaikkaran சொன்னது…

//பிறக்காதக் குழந்தையின்
பிஞ்சுவிரல் பிடித்து
கொஞ்சுவதுபோல் ஒன்று...//

:-)))

கலக்கல்!!!!!!

Riyas சொன்னது…

கவிதை நல்லாயிருக்குங்க..

vanathy சொன்னது…

super kavithai.

sakthi சொன்னது…

அழகு ....

கலா நேசன்....

ரசித்தேன்....

ADHI VENKAT சொன்னது…

அழகாய் இருந்தது.

THOPPITHOPPI சொன்னது…

அருமையான வரிகள்

செல்வா சொன்னது…

//வேடிக்கை பார்ப்பது...
முட்கள் குத்தியது...முகப்பரு வந்ததென
ஒவ்வொரு நிகழ்வையும்
ஓவியமாய் வரைந்தேன்.//


ரொம்ப அருமையா இருக்கு அண்ணா ..!!

Unknown சொன்னது…

@ நிலாமதி : நன்றி
@ Gopi Ramamoorthy : நன்றி. ஆமாங்க, ஓவிய ராஜாவின் (ராஜா ரவி வர்மா) இந்த ஓவியம் எனக்கும் மிகப் பிடிக்கும்.
@ சைவகொத்துப்பரோட்டா : நன்றி
@ வெறும்பய : நன்றி
@ Chitra : நன்றி
@ சேலம் தேவா : நன்றி

Unknown சொன்னது…

@ வெங்கட் நாகராஜ் : நன்றி
@ சேட்டைக்காரன் : நன்றி
@ Riyas : நன்றி
@ vanathy : நன்றி
@ sakthi : நன்றி
@ கோவை2தில்லி : நன்றி
@ THOPPITHOPPI : நன்றி
@ ப.செல்வக்குமார் : நன்றி

சிவகுமாரன் சொன்னது…

அழகு அழகு உங்கள் கவிதை. அந்த ஓவியத்தை விட

Sivatharisan சொன்னது…

கவிதை அழகாய் இருக்கிறது பாராட்டுக்கள்

அன்புடன் மலிக்கா சொன்னது…

கவிதையும் அதை முடித்த விதமும் ஓவியமும் அருமை..

Unknown சொன்னது…

மிக நேர்த்தியான பார்வை கொண்ட வரிகள் .. கொஞ்ச நேரம் வர்ணனைகளில் லயித்திருந்தேன் ...

ஸாதிகா சொன்னது…

ஆஹா..கவிதையுடன் அழகிய படத்தினையும் சேர்ந்து ரசித்தேன்.

suneel krishnan சொன்னது…

அழகாக இருக்கிறது

Quote

Followers