ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இப்படித்தான் நீயும்

இப்படித்தான் நீயும் ...
வேறோர் குழந்தையுடன்
விளையாடிக் கொஞ்சினால்
ஓடிவந்தெனைக் கட்டிக்கொள்கிறாள்
செல்ல மகள்.
இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு........


இன்னும் கொஞ்சம்...

ஒவ்வொரு தேர்வு
எழுதி முடித்ததும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
நல்லா படிச்சிருக்கலாம்.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்....

19 comments:

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

வரிகள் மிக அருமை... ரொம்ப நல்லாருக்கு..

///இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு........///

ரொம்ப பிடிச்சிருக்கு.

சிவராம்குமார் சொன்னது…

\\ஒவ்வொரு தேர்வு
எழுதி முடித்ததும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
நல்லா படிச்சிருக்கலாம்.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்...\\

சத்தியமான உண்மை!!! கவிதை அருமை!!!

மதுரை சரவணன் சொன்னது…

//இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்...// s true. super.

erodethangadurai சொன்னது…

கவிதை வரிகள் அனைத்தும் அருமை. ! இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

JEGANKUMARSP சொன்னது…

கலக்கு சரவணா... அனைவருக்கும் என் இனிய விஜயதசமி வாழ்த்துகள்.

எஸ்.கே சொன்னது…

இனிமை! அருமை!

சேலம் தேவா சொன்னது…

உங்க கவிதைய படிக்கும்போதெல்லாம் தோன்றுகிறது..!!
இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்..!!

கலக்கல்ண்ணே..!!

அன்புடன் மலிக்கா சொன்னது…

இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு//

நல்லாயிருக்கு கலா வரிகள்..தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதை வரிகள் அருமை. முதல் கவிதையை விட இரண்டாவது எனக்கு அதிகம் பிடித்தது. :)

Chitra சொன்னது…

அருமையான கவிதை வரிகள்.... ரொம்ப நல்லா இருக்குதுங்க....

விக்னேஷ்வரி சொன்னது…

ரெண்டுமே நல்லாருக்கு. உங்க மனைவி வாசிச்சாங்களா ;)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

அருமையான வரிகள்... நல்லாருக்கு.

செல்வா சொன்னது…

இரண்டுமே கலக்கலா இருக்குங்க .,
அந்த இரண்டாவது கவிதை சத்தியமா அருமையா இருக்கு ..!!

கமல் சொன்னது…

அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி தொடர்கிறேன்.

vanathy சொன்னது…

super kavithai!

ஜெயந்தி சொன்னது…

ரெண்டு கவிதையுமே நல்லாயிருக்கு.

Thenammai Lakshmanan சொன்னது…

ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்....
//அருமை கலாநேசன்.. ரொம்ப ரசித்தேன்..

'பரிவை' சே.குமார் சொன்னது…

Wow... Arumaiyana kavithaigal nesan....

mohamedali jinnah சொன்னது…

வேறோர் குழந்தையுடன்
விளையாடிக் கொஞ்சினால்
ஓடிவந்தெனைக் கட்டிக்கொள்கிறாள்
செல்ல மகள்.
உண்மை ,அருமை மனதில் ஆழமாக பதிந்து மகிழ்வினை தருகின்றது

Quote

Followers