வியாழன், 12 ஆகஸ்ட், 2010

முரண்

முரண் என்றுமே அழகுதான். விதிவிலக்குகள் போல அவை தனித்து நின்று ரசிக்க வைக்கும். முதலில் பொன்மொழிகளில் சில முரண்களைப் பார்ப்போம்.
  • தயங்கினால் தோற்றுப்போவாய்!
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே!
  • கற்பதற்கு வயதில்லை!
  • கிழட்டு நாய்க்கு புதிய உத்திகள் பிடிபடாது.
  • வாழ்க்கை சுவையாய் இருக்க வெரைட்டி வேண்டும்.
  • பாதி வழியில் குதிரையை மாற்றாதே!
  • வாளை விட வலிமையானது பேனா.
  • வார்த்தையை விட வலிமையானது காரியம்.
  • ஆடைதான் மனிதனை அடையாளம் காட்டுகிறது.
  • அட்டையைக் கொண்டு புத்தகத்தை மதிப்பிடாதே!
இப்படி சொல்லிக்கொண்டே  போகலாம். (அதாவது இது போல உங்களுக்கு ஏதாவது தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்). இதை டைப்பிக் கொண்டிருக்கையில் முரண் என்ற தலைப்பில் என் நினைவுக்கு வரும் சில கவிதைகள் இதோ......

1
உரசின
தீபெட்டியும் தீக்குச்சியும்
எரிந்தது
தீக்குச்சி மட்டும்.

 2
வெட்டிய மரங்களை
ஏற்றிச்செல்லும்
லாரியில் வாசகம்
'மரங்களை  வளர்ப்போம்'.

3
வங்கியில் கடன்வாங்கி
டீக்கடை வைத்தவன்
தன்கடையில் எழுதினான்
'கடன் நட்பை முறிக்கும்'

 4
கண்ணும் கண்ணும்
கலந்து உருவாகும்
காதலுக்கு
கண் இல்லையாம்.

5
ஒரே தட்டில்
சாப்பிட்டு
ஒரே கட்டிலில்
உறங்கி
ஒரே டிசைனில்
உடையணிந்த
இருவரிடையே சண்டையாம்
காரணம்
ஒரே பெண்ணை
காதலிக்கிறார்கள்.

6
மருமகளை
கொடுமைப்படுத்தும்
மாமியார்
தன் மகளுக்கு
மாப்பிள்ளை பார்க்கிறார்
அம்மா இல்லாத
பையனாய்ப் பார்த்து.

7
சினிமா இடைவேளை
ரசிகர்கள் விட்ட
புகையில்
மங்கலாய்த் தெரிந்தது
'புகைப் பிடிக்காதீர்கள்'

8
விதைகளில் கலப்பினம்
வீரியம் வாய்ந்தது
வாங்கத் தயார்.
கால்நடைக் கலப்பினம்
ஆற்றல் வாய்ந்தது
ஏற்கத் தயார்
மனிதசாதியில் கலப்பினம்
மகத்தானது
அரிவாள்கள் தயார்.

20 comments:

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

ஒவ்வொன்றும் மிக அருமையாக இருக்கிறது...

Unknown சொன்னது…

உங்க முரண் கவிதைகள் அருமை ... அதிலும் கடைசிக் கவிதையை வெறுமனே அருமை என்று மட்டும் எழுதிப் போக ஒப்பவில்லை மனது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

”முன்னுக்குப் பின் முரண்” கவிதைகள் பிரமாதம். பகிர்வுக்கு நன்றி நண்பரே.

Mugilan சொன்னது…

அழகான பதிவு கலாநேசன்!

செல்வா சொன்னது…

ரொம்ப அருமையான பதிவு அண்ணா ...௧!
அதிலும்

//வெட்டிய மரங்களை
ஏற்றிச்செல்லும்
லாரியில் வாசகம்
'மரங்களை வளர்ப்போம்'///
இதே போன்றதொரு கவிதை நான் படித்தது
மரங்களை வெட்டாதீர்
போர்டுடன் செல்கிறது லாரி
வெட்டப்பட்ட மரங்களுடன்.!

sakthi சொன்னது…

விதைகளில் கலப்பினம்
வீரியம் வாய்ந்தது
வாங்கத் தயார்.
கால்நடைக் கலப்பினம்
ஆற்றல் வாய்ந்தது
ஏற்கத் தயார்
மனிதசாதியில் கலப்பினம்
மகத்தானது
அரிவாள்கள் தயார்.

அபாரம்

சுஜா செல்லப்பன் சொன்னது…

எல்லாமே அருமையாக இருக்கு..கலப்பினம் கவிதை ரொம்ப அருமை...வாழ்த்துக்கள் !

vanathy சொன்னது…

சூப்பரோ சூப்பர். நல்ல கற்பனை.

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"


இடுகைக்கு

// கலாநேசன் said...

புதிய தகவல். ஆதாரத்துடன் உங்களின் விளக்கமான பதிவுக்காய் காத்திருக்கிறேன்//

பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.

Unknown சொன்னது…

//அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.//

அது எனக்கு மட்டுமல்ல புருனோவுக்கும் புதிய தகவல் தான். அது உண்மையா என்பது தான் விவாதிக்கப்படுகிறது. நேற்று journal abstracts எதுவும் அந்த பதிவில் இல்லை.(இன்று உள்ளது). படித்துவிட்டு இன்னும் பேசுவோம்.

Unknown சொன்னது…

வெறும்பய
கே.ஆர்.பி.செந்தில்
வெங்கட் நாகராஜ்
Mugilan
ப.செல்வக்குமார்
sakthi
சுடர்விழி
vanathy

நன்றி நன்றி.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

kகவிதைகள் அனைத்தும் மிக அருமை.அதுவும் அந்த கலப்பின கவிதை ஏ.ஒன்.

secondpen gallery சொன்னது…

உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

விக்னேஷ்வரி சொன்னது…

ஒவ்வொரு முரணும் நச்ன்னு இருக்குங்க. சூப்பர்.

bogan சொன்னது…

கடைசிக் கவிதை அற்புதம் சார்.தொடருங்கள்.

மங்குனி அமைச்சர் சொன்னது…

சார் எல்லாமே நல்லா இருக்கு சார்

மங்குனி அமைச்சர் சொன்னது…

பஸ்ட்டு நல்ல இருக்கதுக்கு மட்டும் தேர்தெடுத்து கமன்ட் போடலாமுன்னு பாத்தேன் , அப்படி போடனுமின்னா உங்க புல் பத்வா காபி பேஸ்ட் பண்ணி கமன்ட் போடணும் , அவ்வளவு நல்லா இருக்குசார்

சேலம் தேவா சொன்னது…

கலக்கறீங்கண்ணே!!

அருண் சொன்னது…

கடைசி கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.

க.பாலாசி சொன்னது…

எல்லாமே நல்லாயிருக்குங்க கலாநேசன்...

Quote

Followers