Google+ Followers

புதன், 4 ஆகஸ்ட், 2010

பதிவுப்பேய்

பதிவுப்பேய் பிடித்து - எனைப்
படுத்தி எடுக்குதடி
ஓட்ட இயலாமனம்
ஒட்டிக் கிடக்குதடி.

அலுவலகப் பணிச்சுமையோ
அழுத்தி எடுத்தாலும்
எழுதியே தீர்வேனென்று
என்மனம் துடிக்குதடி.

முப்பதை நெருங்கியும்
மூவிரண்டு வயதுபோல்
கணிப்பொறியில் விளையாண்ட
களிப்புகள் மறந்ததடி.

அதிகாலை என்மனதில்
அலாரம் அடிக்கிறது
புதிதாக எதையெதையோ
புத்திக்குள் தேடுகின்றேன்
எட்டுமணி வேலைசெல்ல
எழுவரை தூங்கியவன்.

பன்னிரண்டு மணிக்கு
பணிமுடிந்து வந்தாலும்
கண்ணிரண்டும் ஓடிப்போய்
பதிவதனைப் பார்க்குதடி.

வெளியூர் போகையிலும்
விமான நிலையத்தில்
கைப்பேசிப் பின்னூட்டம்
கவனமாய் இடுகின்றேன்.

முப்பது இடுகைகூட
முழுதாய் எழுதுமுன்னர்
இப்படி எனக்கிது
இம்சையாய் இருக்கிறதே
எப்படித்தான் எழுதினரோ
முன்னூறு நானூறு.

பதிவுப்பேய் பிடித்து - எனைப்
படுத்தி எடுக்குதடி
இப்படியேத் தொடர்வதற்கே
இச்சையாய் இருக்குதடி.....

34 comments:

vanathy சொன்னது…

கிட்டத்தட்ட எல்லோர் நிலமையும் இது தான். கவிதையில் அழகா சொல்லிட்டீங்க.

சீமான்கனி சொன்னது…

me the 1 st..uuuu......

சீமான்கனி சொன்னது…

//அதிகாலை என்மனதில்
அலாரம் அடிக்கிறது
புதிதாக எதையெதையோ
புத்திக்குள் தேடுகின்றேன்//

ரசித்த வரிகள்... ஐயோ பதிவுப் பேய் பயமா இருக்கா இப்போ கொஞ்சம் அப்டிதான் இருக்கும்......அருமையா வந்திருக்கு நேசன் சார்...வாழ்த்துகள்...

நேசமித்ரன் சொன்னது…

அருமை !!

Jey சொன்னது…

///வெளியூர் போகையிலும்
விமான நிலையத்தில்
கைப்பேசிப் பின்னூட்டம்
கவனமாய் இடுகின்றேன்.///

ஒங்க பதிவுலக ஆர்வத்துக்கு அளவே இல்லீங்களா..... கீப் இட் அப் ,

//பதிவுப்பேய் பிடித்து - எனைப்
படுத்தி எடுக்குதடி
இப்படியேத் தொடர்வதற்கே
இச்சையாய் இருக்குதடி.....///
மேசைக்கும் ஆசை கூலுக்கும் ஆசை....ம்ஹும், அப்பாடி, நாம ஒருத்தந்தா புலம்ப ஆரம்பிசிட்டோமோனு நெனச்சேன். துணைக்கு அள் இருக்கீக..:)

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கலாநேசன்

இன்றைய பதிவர்களின் உண்மை நிலை இதுதான் - அழகாக கவிதையில் உணர்ச்சிகளை வடித்தமை நன்று
நல்வாழ்த்துகள் கலாநேசன்
நட்புடன் சீனா

வெறும்பய சொன்னது…

அண்ணா இந்த நிலை உங்களுக்கு மட்டுமல்ல ஏறக்குறைய புதிதாய் நுழைந்த அனைவருக்கும்..

இதனை கவிதையாய் வடித்த விதம் அருமை..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பதிவுப் பேய் பிடித்து ஆட்டுகிறதோ? அழகிய கவிதையாய் வடித்துவிட்டீர்கள் எல்லா பதிவர்களின் நிலையையும். வாழ்த்துக்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

பதிவுலகில் அடியெடுத்து வைத்தபோது இரவு மூன்று மணிக்கும் என் விழி மூடியதில்லை.
அந்த மன நிலைச் சித்தரிப்பு கவிதையில் நன்றாக வந்துள்ளது.
வாழ்த்துக்கள்.

சேலம் தேவா சொன்னது…

same blood

Chitra சொன்னது…

வாரத்துல, சனி ஞாயிறு - பதிவுலகம் பக்கம் வரதே இல்லை..... லிமிட் போட்டதும் சரியாக போய்க்கிட்டு இருக்குதுங்க.... :-)

உமாபதி சொன்னது…

பாடாய் படுத்திய
பதிவுப் பேயை
பயமின்றி சொன்னாயே

எனக்கும்
பகலென்றும்
இரவென்றும்

படுத்தியது - நீ
இங்கு பதித்து
வைத்ததால்

எனக்கும்
பிடித்ததால்
இந்த பின்னூட்டம்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

பதிவுப்பேய் பிடித்து - எனைப்
படுத்தி எடுக்குதடி
இப்படியேத் தொடர்வதற்கே
இச்சையாய் இருக்குதடி.....


இன்றைய பதிவர்களின் உண்மை நிலை இதுதான்...

ஜெய்லானி சொன்னது…

சரியா சொன்னீங்க கவிதயில..சூப்பர்

எம் அப்துல் காதர் சொன்னது…

அப்படியே எங்கள் மனதில் உள்ளதை கவிதையாய் நூல் பிடித்த மாதிரி சொல்லி இருக்கிறீர்கள் சார். அருமை!!

இளம் தூயவன் சொன்னது…

அதிகாலை என்மனதில்
அலாரம் அடிக்கிறது
புதிதாக எதையெதையோ
புத்திக்குள் தேடுகின்றேன்
எட்டுமணி வேலைசெல்ல
எழுவரை தூங்கியவன்

சரியாய் சொன்னிர்கள்.சரியாய் உறக்கம் இல்லம், எந்த நேரமும் இதே சிந்தனை. இதற்குக்கு மாற்று வழி தேட வேண்டியுள்ளது.

ஸாதிகா சொன்னது…

உங்கள் மனதினில் மட்டுமல்ல எனைய பதிவர்களின் மன ஓட்டத்தினையும் அப்படியே படம் பிடித்து கவிதை வடித்து விட்டீர்கள்.

vasan சொன்னது…

போட்ட‌ ப‌திவை விடுங்க‌.
அதுக்கு 'வ‌ரும் ஆனா வ‌ராத‌'
பின்னோட்ட‌ம் பின்னால் ஓடுற‌ ஓட்ட‌ம் இருக்கே,
அதுதான் ரெம்ப‌ பேஷ‌ரா இருக்கும்.
அப்புற‌ம்...எல்லாம் ஓகேயாயிரும்.
புதுசுல, இந்த‌ குறுகுறுப்பு கூட‌ இல்லையினா?

ராம்ஜி_யாஹூ சொன்னது…

எல்லாம் சரி ஆகிரும், ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்

கலாநேசன் சொன்னது…

வானதி
சீமான்கனி
நேசமித்திரன்
ஜெய்
சீனா ஐயா
வெங்கட் நாகராஜ்
சுசீலா அம்மா
சேலம் தேவா
சித்ரா
உமாபதி
செந்தில்
ஜெய்லானி
அப்துல் காதர்
இளம் தூயவன்
ஸாதிகா
வாசன்
ராம்ஜி

அனைவருக்கும் என் நன்றிகள்.

Sweatha Sanjana சொன்னது…

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

ஹேமா சொன்னது…

கலாநேசன்...அதேதான்.வீட்டுக்கு வீடு அதேதான் !

அன்பரசன் சொன்னது…

:)

V.Radhakrishnan சொன்னது…

:) பதிவு தாய். பதிவு பேய் அல்ல. நல்ல கவிதை. அருமை. தாயை தேடும் கன்றுகுட்டிகளே நாம்.

கலாநேசன் சொன்னது…

ஜீஜிக்ஸ் ஸ்வேதா, நீங்க பதிவ பாதி எதுவுமே பேச மாட்டிங்களா?

அன்பரசன், ஹேமா நன்றி

இராதாக்கிருஷ்ணன், நான் பதிவுப்பேய்னு சொன்னது கோபத்துல இல்ல. அவ்வளவு பிடிச்சிருக்குன்னு சொல்ல வரேன். அழகான ராட்சசின்னு சொல்றமில்ல! அந்த மாதிரி...

abul bazar/அபுல் பசர் சொன்னது…

"பன்னிரண்டு மணிக்கு
பணிமுடிந்து வந்தாலும்
கண்ணிரண்டும் ஓடிப்போய்
பதிவதனைப் பார்க்குதடி."

உண்மை அதுதான்.
அதை அழகான கவித்துவத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.
உங்களின் ஒவ்வொரு கவிதையும் அழகோ,அழகோ.
வாழ்த்துக்கள்.

சசிகுமார் சொன்னது…

நண்பரே உங்கள் தளத்தை முதல் தடவை பார்க்கிறேன் என்று நினைக்கிறேன் நண்பா அனைத்தும் அருமையாக உள்ளது. குறிப்பாக இன்றைய பதிவு தூக்கல். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

பதிவுப்பேய் பிடித்து - எனைப்
படுத்தி எடுக்குதடி
இப்படியேத் தொடர்வதற்கே
இச்சையாய் இருக்குதடி.....//

ஹாஹாஹா கலாநேசன் மனைவி என்ன பதில் சொன்னாங்க..:))

கலாநேசன் சொன்னது…

அபுல் பசர் --- நன்றிங்க.

சசிகுமார் --- வாங்க நண்பா.

கலாநேசன் சொன்னது…

//தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

பதிவுப்பேய் பிடித்து - எனைப்
படுத்தி எடுக்குதடி
இப்படியேத் தொடர்வதற்கே
இச்சையாய் இருக்குதடி.....//

ஹாஹாஹா கலாநேசன் மனைவி என்ன பதில் சொன்னாங்க..:))//

வீட்ல அடிக்கடி வேப்பிலை அடிச்சு பாத்துட்டாங்க. ஆனாலும் ஒன்னும் வேலைக்காகல...

r.v.saravanan சொன்னது…

அதிகாலை என்மனதில்
அலாரம் அடிக்கிறது
புதிதாக எதையெதையோ
புத்திக்குள் தேடுகின்றேன்
எட்டுமணி வேலைசெல்ல
எழுவரை தூங்கியவன்.

பன்னிரண்டு மணிக்கு
பணிமுடிந்து வந்தாலும்
கண்ணிரண்டும் ஓடிப்போய்
பதிவதனைப் பார்க்குதடி.


கரெக்ட் டா சொன்னீங்க கலா நேசன் எனக்கும் இதே நிலை தான்

பதிவர்களின் மன நிலை கவிதையாய் இங்கு நல்லாருக்கு கலாநேசன்

Ananthi சொன்னது…

ஒரு ஒரு வரியும் ரசித்தேன்....
உண்மையிலேயே இப்படித் தான் இருக்குங்க..
அதையே நீங்க கவிதையா எழுதி கலக்கிட்டீங்க..
வாழ்த்துக்கள்..

துளசி கோபால் சொன்னது…

அதே அதே.

எதைப் பார்த்தாலும் மேட்டர் சிக்குதான்னு கவனிக்கறேன்.

நல்லாத்தான் பிடிச்சு ஆட்டுது!!

ப.செல்வக்குமார் சொன்னது…

//அலுவலகப் பணிச்சுமையோ
அழுத்தி எடுத்தாலும்
எழுதியே தீர்வேனென்று
என்மனம் துடிக்குதடி.///
என்மனமும் அப்படித்தாங்க துடிக்குது ..!!
//முப்பது இடுகைகூட
முழுதாய் எழுதுமுன்னர்
இப்படி எனக்கிது
இம்சையாய் இருக்கிறதே
எப்படித்தான் எழுதினரோ
முன்னூறு நானூறு.//
ரொம்ப அருமையா இருக்குங்க..!!
என்னையும் இந்த பதிவுப் பேய் இப்படித்தான் செய்கிறது ..

Quote

Followers