புதன், 28 ஜூலை, 2010

கிளிப்பிள்ளை

கண்ணாடியணிந்த வெண்ணிலவே
உன்னைக்
காணாமல் இருந்திருந்தால்
காதலென்பதே எனக்குத்
தெரியாமல் போயிருக்கும்.....

என்னை நீ
பார்க்காமல் இருந்திருந்தால்
நான் கவிஞன் என்பதே
கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கும்.....

உன்
ஸ்பரிசம் இல்லையென்றால்
பூமியில் மிகவும் மென்மையானது
பூக்கள் என்றே நான்
பொய் சொல்லியிருப்பேன்.....

நீ போகும் பாதையில்
கற்களே கிடையாதென்று
கண்டவர்கள் சொன்னார்கள் - காரணம்
அழகியுன் பாதம்பட்டு
அவைகள் எல்லாம்
அகலிகை(கள்) ஆனதென்று
அப்புறம் தானறிந்தேன்.

சோகத்தை
றக்கச் செய்யும்
ன்னி
லாட்டரியாய் - நீ
ஜாக்பாட் அடித்த
சந்தோஷத்தில் நான்.

முதலில் நானுனக்குப்
பொருத்தமில்லையோ என
வருத்தப்பட்டேன் - பின் உன்னால்
திருத்தப்பட்டேன்.

நிலா பார்க்கையிலும்
கலா ஞாபகமே - நெஞ்சில்
உலா வருகிறது....

உன்
கண்ணொளி பட்டுத்தான்
என்
இதய இலையில்
ஒளிச்சேர்க்கை நடக்கிறது....

நீ
சிரிக்கையில் சிதறும்
சில்லரைகளால்
என் ஞாபகஉண்டியல்
நாளுக்குநாள் நிறைகிறது.

உனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடிக்கிறது.
உனக்குப் பிடிக்காததெல்லாம்
எனக்கும் பிடிக்கவில்லை.

சொல்லப்போனால்
சொல்பேச்சு
கேட்கிரவனாகிப்போனேன் நான்....

விட்டுவிடு என்றால்
விடுவதும் 
வேண்டாம் என்பதை
வெறுப்பதும்......

ஒரு வகையில் 
நான் = கிளிப்பிள்ளை.

 (டிஸ்கி: கல்லூரிக் காலத்தில் காதலில் கிறுக்கியது.)

23 comments:

Karthick Chidambaram சொன்னது…

//நிலா பார்க்கையிலும்
கலா ஞாபகமே - நெஞ்சில்
உலா வருகிறது....//

இப்ப புரியுதுங்க உங்க பெயர் காரணம் :-)

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

//நிலா பார்க்கையிலும்
கலா ஞாபகமே - நெஞ்சில்
உலா வருகிறது....//

இப்ப புரியுதுங்க உங்க பெயர் காரணம் :-)

Repeattttttttttttttttt.....

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

என்னை நீ
பார்க்காமல் இருந்திருந்தால்
நான் கவிஞன் என்பதே
கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கும்.....////

உண்மை,, உண்மை... உண்மை...

கவிஞனை கண்டறிந்த இதயத்திற்கு வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

காதல் படுத்திய கவிதை...

Chitra சொன்னது…

என்னை நீ
பார்க்காமல் இருந்திருந்தால்
நான் கவிஞன் என்பதே
கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கும்.....


... Thats very nice! :-)

அருண் பிரசாத் சொன்னது…

அருமை! நல்ல கவிதை

ஜெய்லானி சொன்னது…

@@@Karthick Chidambaram--

//நிலா பார்க்கையிலும்
கலா ஞாபகமே - நெஞ்சில்
உலா வருகிறது....//

இப்ப புரியுதுங்க உங்க பெயர் காரணம் :-)

பெரிய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அழகிய காதல் கவிதை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

sakthi சொன்னது…

உன்
ஸ்பரிசம் இல்லையென்றால்
பூமியில் மிகவும் மென்மையானது
பூக்கள் என்றே நான்
பொய் சொல்லியிருப்பேன்.....


அருமை

VELU.G சொன்னது…

அருமையாக இருக்கிறது
//
விட்டுவிடு என்றால்
விடுவதும்
வேண்டாம் என்பதை
வெறுப்பதும்......

ஒரு வகையில்
நான் = கிளிப்பிள்ளை.
//

இப்பொழுது எப்படிங்க சார்

Riyas சொன்னது…

//உன்
ஸ்பரிசம் இல்லையென்றால்
பூமியில் மிகவும் மென்மையானது
பூக்கள் என்றே நான்
பொய் சொல்லியிருப்பேன்.....//

ம்ம்ம் அழகான வரிகள்

சீமான்கனி சொன்னது…

காதல் கவிதை அழகு...என் யூகம் தப்பவில்லை...வாழ்க வழமுடன்...

vanathy சொன்னது…

கவிதை சூப்பர். அழகான வரிகள்.

ஜானகிராமன் சொன்னது…

என்னுடைய கல்லுரி காலத்தை ஞாபகப்படுத்தியது. அது சரி பிரதர், யாருங்க அது சோமகலா?

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

திருமதி.கலாநேசன் கலாதானே....

Unknown சொன்னது…

//ஜானகிராமன் சொன்னது…
என்னுடைய கல்லுரி காலத்தை ஞாபகப்படுத்தியது. அது சரி பிரதர், யாருங்க அது சோமகலா?//

//மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…
திருமதி.கலாநேசன் கலாதானே....//

சோமகலா
இந்த கவிதை எழுதும் போது என் காதலி
அதை நீங்கள் படிக்கும் போது என் மனைவி

Priya சொன்னது…

கவிதை அழகா இருக்கு!

தூயவனின் அடிமை சொன்னது…

நீ
சிரிக்கையில் சிதறும்
சில்லரைகளால்
என் ஞாபகஉண்டியல்
நாளுக்குநாள் நிறைகிறது

நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

கண்ணாடியணிந்த வெண்ணிலவே
ஹாஹாஹா சூப்பர். கலாவா இது.. நேசன்..

ஹேமா சொன்னது…

காதல்தான் எதையும் கிறுக்கவைக்கிறது.
கிறுக்கல் மனசை லேசாக்குகிறது.

எல் கே சொன்னது…

//டிஸ்கி: கல்லூரிக் காலத்தில் காதலில் கிறுக்கியது//

ithuku copy right enkitta irukku

Unknown சொன்னது…

//டிஸ்கி: கல்லூரிக் காலத்தில் காதலில் கிறுக்கியது//
ithuku copy right enkitta irukku

இந்த நாலு வார்த்தைகளை யார் வேண்டுமானாலும் சொல்லல்லாம் நண்பரே. இதை காப்பி ரைட் வாங்கி என்ன செய்யப்போகிறீர்கள்?வருகைக்கு நன்றி.

r.v.saravanan சொன்னது…

அழகான வரிகள்.

Quote

Followers