ஞாயிறு, 18 ஜூலை, 2010

காலமாற்றம்


அன்றோ நீ
வருவோர் போவோர்க்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.
மருதாணி சிவப்புபார்த்து
மகிழந்தவர் சொல்வர்
"அவருக்கு உன்மேல்
அவ்வளவு பாசமென்று".
இதைக் கேட்கவே நீ
மீண்டும் மீண்டும் 
வருவோர் போவோர்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.

இன்றோ
அயலூர் வந்திந்த
அடர் கட்டிடக்காட்டின் 
அவசர வாழ்கையில்
உனக்கு
மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை.

14 comments:

அன்பரசன் சொன்னது…

//அவசர வாழ்கையில்
உனக்கு
மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை//

பிரமாதமான வரிகள்.
அருமைங்க

அன்புடன் நான் சொன்னது…

இன்றோ
அயலூர் வந்திந்த
அடர் கட்டிடக்காட்டின்
அவசர வாழ்கையில்
உனக்கு
மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை//

மிக யதார்த்தம்....
பாராட்டுக்கள்.

சௌந்தர் சொன்னது…

அவசர வாழ்கையில்
உனக்கு
மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை//
இந்த வரி சூப்பர் தல

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல வரிகள் நண்பரே. கட்டிடக் குவியல்களுக்கிடேயே நாம் இழந்துகொண்டு இருக்கும் விஷயங்கள் பல. வாழ்த்துக்கள்.

ஜெய்லானி சொன்னது…

அருமையா இருக்கு

ரிஷபன் சொன்னது…

இழப்புகளைப் பட்டியலிட்டு மாளாது..

க ரா சொன்னது…

நல்லாருக்குங்க.

சீமான்கனி சொன்னது…

//மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை.//


ஏக்க உணர்வுகளின் வெளிப்பாடாய் வந்த வரிகள் அழகு...

பெயரில்லா சொன்னது…

தமிழ் செய்திகள்,விளையாட்டு,சினிமா,பொழுதுபோக்கு

http://bit.ly/bJHGXf

Unknown சொன்னது…

என்ன செய்வது கிராமம் போலில்லை நகரம்...

விக்னேஷ்வரி சொன்னது…

உண்மையான வரிகள்.

தூயவனின் அடிமை சொன்னது…

அன்றோ நீ
வருவோர் போவோர்க்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.
மருதாணி சிவப்புபார்த்து
மகிழந்தவர் சொல்வர்
"அவருக்கு உன்மேல்
அவ்வளவு பாசமென்று".
இதைக் கேட்கவே நீ
மீண்டும் மீண்டும்
வருவோர் போவோர்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.

நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.

bogan சொன்னது…

அடர் கட்டிடக்காடு!க்ரேட்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நல்லாருக்குங்க

Quote

Followers