ஞாயிறு, 6 ஜூன், 2010

மணசாட்சி

ஆத்தோர மணல்அள்ளி
அழகழகா வீடுகட்டி
கண்ணுக்கு மைபோட்டு
கல்லக்கா தோடுபோட்டு
கூழாங்கல் அடுப்புமேல
கூட்டாஞ்சோறு ஆக்குனதும்
பாட்டெழுதி பாடினதும்
பைங்கிளிக்கு நெனப்பிருக்கா?

மணல குவிச்சி வச்சி
மரக்குச்சி ஒளிச்சி வச்சி
கிச்சு கிச்சு தாம்பூலம்
ஆடுனது நெனப்பிருக்கா?

விளையாடப் போகயில
வேகவச்ச வேர்க்கடல
வீட்டுக்குத் தெரியாம
கொண்டாந்து குடுக்கையில
என்கையில் உள்ள பங்கும்
நீ பிடுங்கித் தின்னாயே
மலர்விழியே மறந்தாயோ!

பரிட்சை நேரத்தில்
பக்கத்தில் நீயமர்ந்து
பார்த்தெழுதி பார்த்தெழுதி
பரிசுமிட்டாய் வாங்கியது
எனக்குள்ளே இனிக்கிறதே
உனக்குள்ளும் இருக்கிறதா?

குத்தாத முள் ஒடச்சி
கத்தால செடியெல்லாம்
அத்தான் என்பேர் எழுதிய
முத்தான பிஞ்சு விரல்
எனக்கின்று எட்டாத தூரத்தில்...

உன்விரல புடிச்சுக்கிட்டு
உலகத்த சுத்தோணும்
உனக்காகத்தான் மாமோய்
உசுரையே கொடுக்கோணும்
என்றெல்லாம் சொன்னவளே

எப்படி நீ சம்மதித்தாய்
என் மனதை எரிதத்தீ
உன் மணத்தில் சாட்சி சொல்ல.....

16 comments:

Unknown சொன்னது…

அண்ணே கலக்கிட்டீங்க... மிக அருமையான கவிதை சந்தத்துடன் படிக்க என்னை எங்கேயோ அழைத்து சென்றுவிட்டது..

சினிமாவிற்கு பயபடுத்தினால் பிரபல பாட்டாக வரும் ..

அத்திரி சொன்னது…

ஒவ்வொரு வரியிலும் ஊர் மணம் கமழ்கிறது

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

பகிர்வுக்கு நன்றி

அருமை.......

Unknown சொன்னது…

செந்தில்
அத்திரி
உலவு
மற்றும் தமிழிஷ்ல் வாக்களித்த அனைவருக்கும் நன்றி

அன்புடன் மலிக்கா சொன்னது…

கவிதையில் ரசனை தெரிகிறது. வாழ்த்துக்கள்.

goma சொன்னது…

அடிமனதில் பீரிட்ட நெருப்பு ,அவளுக்கு மணமேடையில் சாட்சிக் கையெழுத்திடுகிறது.
என்பதை கவிதைத்துவம் கலந்து சொல்லி விட்டீர்கள்.
அருமை

அருண் பிரசாத் சொன்னது…

அருமையாக வந்திருக்கு. உணர முடிகிறது. வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

மல்லிகா
கோமா
அருண் பிரசாத்

அனைவருக்கும் நன்றி

Chitra சொன்னது…

Superb! மிகவும் ரசித்து வாசித்தேன். பாராட்டுக்கள்!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//குத்தாத முள் ஒடச்சி
கத்தால செடியெல்லாம்
அத்தான் என்பேர் எழுதிய
முத்தான பிஞ்சு விரல்
எனக்கின்று எட்டாத தூரத்தில்...//

அடுக்கு மொழி கவிதை வாசிக்க வாசிக்க நா இனிக்கிறது... பாஸ்

Unknown சொன்னது…

சித்ரா
வசந்த்

மிக்க நன்றி. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

பனித்துளி சங்கர் சொன்னது…

////பரிட்சை நேரத்தில்
பக்கத்தில் நீயமர்ந்து
பார்த்தெழுதி பார்த்தெழுதி
பரிசுமிட்டாய் வாங்கியது
எனக்குள்ளே இனிக்கிறதே
உனக்குள்ளும் இருக்கிறதா?
////

கடந்த நினைவுகள் மீண்டும் மலர்கிறது

ஹேமா சொன்னது…

எங்கே போனாலும் அடிமனதில் தேங்கிக் கிடக்கும் சொந்த மண் வாசனை.அழகுக் கவிதை.

Unknown சொன்னது…

சங்கர்
ஹேமா
மிக்க நன்றி. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

அன்புடன் நான் சொன்னது…

கவிதை கலக்கல்...
நெகிழ்ச்சியா இருக்குங்க...
பாராட்டுகள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

///உன்விரல புடிச்சுக்கிட்டு
உலகத்த சுத்தோணும்
உனக்காகத்தான் மாமோய்
உசுரையே கொடுக்கோணும்
என்றெல்லாம் சொன்னவளே

எப்படி நீ சம்மதித்தாய்
என் மனதை எரிதத்தீ
உன் மணத்தில் சாட்சி சொல்ல.....///

ரொம்ப அழகா வருத்தத்தை சொல்லியிருக்கிற கவிதை.. வாழ்த்துக்கள்..!!

Quote

Followers