கடமையை செய்வதற்கு
காசு கேட்பவரும் - அடுத்தவர்
உடமையை கொய்வதிலே
உறுதியாய் நிற்பவரும்
பொறுப்புகள் மறந்துவிட்டு
போதையில் மிதப்பவரும்
உறுப்புகள் கொள்ளையிடும்
வெள்ளுடை சாத்தான்களும்
தீர்ப்புக்கு விலைபேசும்
வாய்ப்பேச்சு வீரர்களும்
கர்ப்பை காவுகேட்கும்
காவல்துறை சாமிகளும்
குறைத்துக்கொண்டே வாலாட்டும்
கூட்டத்தை வைத்துக்கொண்டு
அறிக்கைக்கு நடுவே
அரசியல் நடத்துவோரும்
எள்ளளவு கூடயிங்கு
எவருக்கு உதவதோர்
உள்ளம் இலாதோர்
உண்மையில் களர்நிலங்கள்.
இந்த கவிதை
இவருக்கு சமர்ப்பணம். (இல்ல இல்ல அன்பளிப்பு)
யாருன்னு தெரியலையா?
பெயர்: கேதான் தேசாய்
(நீங்க கேட்டான் தேசாய்னும் சொல்லலாம் அவ்வளவு வாங்கி இருக்காரு)
பதவி: இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் (முந்தாநேத்து வரை)
இப்போது: CBI கைதி
குற்றம்: மருத்துவ கல்லூரி அனுமதி வழங்க 2 கோடி வாங்கும் போது கையும் பையுமாய் மாட்டியது.
சமீபத்திய சாதனை: 1800 கோடி ரூபாயும் 1500 கிலோ தங்கமும் (வீட்டில் வைத்திருந்தது மட்டும்)
நீண்ட கால சாதனை: ஒரு மருத்துவ கல்லூரிக்கு 15 கோடி வீதம் தன் பதவிக்காலம் முழுதும் வாங்கினாராம்.
உன் குத்தமா
என் குத்தமா
யாரை நான் குத்தம் சொல்ல?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Quote
Blog Archive
-
►
2011
(58)
- ► செப்டம்பர் (4)
-
▼
2010
(47)
- ► செப்டம்பர் (5)
8 comments:
இவரே இப்படின்னா.. இவரோ அமைச்சகம் எப்படி இருந்திருக்கும்?
please remove word verification
என்ன செய்ய நேசன் சார், சில நாட்களுக்கு முன் ஒரு நாளிதழில் பஸ்ஸில் செயின் திருடியதாக நான்கு பெண்களை அவர்களின் குழந்தைகளோடு படம் பிடித்து போட்டிருந்தனர்.
அந்த குழந்தைகளை எப்படி படத்தில் காட்டலாம்??...
//நீண்ட கால சாதனை: ஒரு மருத்துவ கல்லூரிக்கு 15 கோடி வீதம் தன் பதவிக்காலம் முழுதும் வாங்கினாராம்.//....உண்மையிலேயே சாதனைதான்:)பரவாயில்ல ரொம்ப கம்மியாதான் வாங்கி இருக்காரு!
(நூறாவது follower ஆன உங்களுக்கு எனது ஸ்பெஷல் தேங்க்ஸ். கண்டிப்பா treat உண்டு!)
1 ) cable அண்ணாச்சி,
word verification removed.
நன்றி.
2 ) KRP அண்ணா
அதுதான் என் கோபமும்.
ஊடகம் என்ன செய்கிறது?
வழிப்பறி செய்பவனை பற்றி வாய் கிழிய பேசுகிறார்கள்/எழுதுகிறார்கள்.
எது முக்கிய நிகழ்வென்பதை மீடியா தீர்மானிக்கிறது.
சுமார் 350 கோடி ஊழல் நடந்திருப்பதாக சொல்லப்படும் IPL கடந்த ஒரு மாதமாய் தலைப்புச்செய்தி. அதே சமயம் 2000 கோடிக்கு மேல் ஊழல் செய்தவனை கண்டுகொள்ளவே இல்லை.
நமக்கோ எல்லாமே ஒரு செய்தி அவ்வளவே!
அப்புறம் சார் எல்லாம் வேணாங்க. நான் ரொம்ப சின்ன பையன்.
3 ) பிரியா
நன்றி
சரியா பங்கு வைக்காட்டி இப்படிதான் மாட்டிக்கனும்,
கல்வி வியாபாரமாகிப்போனதால்தான் என்னவோ இன்னும் இதுபோன்ற பெரிச்சலிகளுக்கு இரையாக்கப்படுகிறது நமது சந்ததிகளின் கல்வி !
ஜூன் வந்தால் போதும் கல்வி நிலையத்தில் அறுவடை தொடங்கிவிடும்
ஆமாங்க கல்வி நிறுவனம் நடத்தறது தான் இப்போ லாபகரமான தொழில்.
கருத்துரையிடுக