ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

குளிர் விட்டுப் போனதே!

ஊசிக்காற்றை ஊதி
உள்ளத்தை வெகுவாய்ச் 
சுடுங்குளிர்.

நாலிரண்டு வாரங்கள்
நகரைப் பனியாக்கும் 
நெடுங்குளிர்.

அடுத்தவர் மூச்சு 
ஆவியாய் நம்மேல் 
படுங்குளிர்.

இடைகாட்டும் விதமாய் 
உடைகட்டும் மங்கையரை 
இழுத்துப் போர்த்தி 
விடுங்குளிர்.

காதல் செடியை 
மனதில் மிகுதியாய் 
நடுங்குளிர்.

கம்பளியின்றித் 
தூக்கம் தாராக் 
கடுங்குளிர்.

வீடில்லா ஏழைகளை 
வீதியில் சாகடிக்கும் 
கொடுங்குளிர்.

கலவையாய்  உணர்வெழுப்பிக்
கலைந்து போனபின்னும் 
எழுதாக் கவிதையை 
என்னுள் விதைத்து 
நெஞ்சைத் 
தொடுங்குளிர்... 

7 comments:

ADHI VENKAT சொன்னது…

நல்லதொரு கவிதை...பாராட்டுகள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களை வலைப்பக்கம் வந்து
கவிதை எழுத வைத்த
இதமான குளிர்!!!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் கவிதை.... மிக்க மகிழ்ச்சி சரவணன்....

ஸாதிகா சொன்னது…

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

பெயரில்லா சொன்னது…

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ரொம்ப குளிருது.

Sathya சொன்னது…

Asathal Kavithai

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* சொன்னது…

மிக அருமையான கவிதை

Quote

Followers