Google+ Followers

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

உங்களுக்குக் கொலைவெறி பிடிச்சிருக்கா?

வலை நட்புகளுக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

வொய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி?  என்ற தனுஷின் பாடல் தான் இப்போது உலகம் முழுவதும் ஹிட். பாடல் யு டியூபில் வெளியான ஒரு மாதத்தில் சுமார் இரண்டரை கோடி ஹிட்ஸ் பெற்றுள்ளது. (இன்று காலை ஏழு மணியளவில்   24531657 ஹிட்ஸ். இதைப் பதிவிடும் நான்கு மணியளவில் 24,722,004 ஹிட்ஸ்). சுமார் எழுபதாயிரத்துக்கும் அதிகமானோர் முகப்புத்தகத்தில் இந்தப் பாடலைப் பகிர்ந்துள்ளனர். BBC செய்திகளில் இப்பாடலைப் பற்றி செய்தி வெளியிட்டதோடு BBC ரேடியோவில் இப்பாடலையும் ஒலிபரப்பினார்கள். அமெரிக்காவின் TIME இதழில் இப்பாடலைப் பற்றி எழுதுகிறார்கள். (Nonsensical, Semi-English Music Video Goes Viral in India. The song's lyrics are practically gibberish, but India can't stop listening.). வட இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு தமிழ் சினிமாப் பாடலை விளம்பரப் படுத்துவதோடு "கொலைவெறிக்கு" அருஞ்சொற்பொருள் சொல்லி அசத்துகிறார்கள். அதெல்லாம் விடுங்க... சுமார் இரண்டு மாதங்களாய் பதிவேதும் எழுதாத நான் கடந்த இரண்டு வாரங்களாய் இப்பாடலைப் பற்றியோர் பதிவெழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது இந்தப்பாட்டில்... 

இணையதளத்தில் வைரஸாய் இப்பாடல் பரவ தனுஷ் சொல்லும் காரணங்கள் என்ன?
  1. அதிஷ்டம்.
  2. பாட்டில் கொலைவெறியைத் தவிர வேறெங்கும் தமிழ் இல்லை. அதனால் வழக்கமான தமிழ்ப் பாடல்களுக்கான மொழித்தடை இதிலில்லை.
  3. Its funny !
  4. எளிமையான பாடல். யார் வேண்டுமானாலும் பாடலாம்.
  5. பாடலின் சூழல். அதாவது பொண்ணுங்களால ஏமாறும் பசங்களின் பாடல். அதாவது ஒவ்வொரு பையனுக்கும் இந்தப் பாட்டோடு தொடர்பிருக்கு. (அப்போ உங்களையும் பொண்ணுங்க ஏமாத்தி இருக்காங்களா என்ற உடனடி கேள்விக்கு, "ஆமாம் ஒருமுறை" என்பது தனுஷின் பதில்.
கேட்டவுடன் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் மெட்டாக இருந்த போதும் இது இந்த அளவுக்கு ஹிட்டாக அதிஷ்டத்தையும் சேர்த்து அமிதாப் பச்சன், சோனி வீடியோ, ரஜினி என இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.

அமிதாப் பச்சன்: பாடல் வெளியான முதல் வாரத்திலேயே அமிதாப் அதைப் பற்றி ட்விட்டரில் எழுதினார். ("Just heard #Kolaveri after much talk on it ... its so original and catchy ..congrats Dhanush and Aishwarya(Rajni's daughter) .. love").("how cool is Kolaveri di!!! slamming it LOUD! well done Dhanush and Aishwarya. big up guys!"). மேலும் அதைப் பற்றியோர் பேட்டியிலும் குறிப்பிட்டார். இது வட இந்தியர்கள் இப்பாடலைக் கவனிக்க உதவியது. (எங்கள் அலுவலகத்தில் சிலர் அமிதாப் பச்சனுக்குப் பிடித்தது என்பதாலேயே கைப்பேசியின் காலர் டியூனாக வைத்திருக்கிறார்கள்.)

தில்லியிலும் நான் செல்லும் இடங்களிலெல்லாம் இப்பாடலைக் கேட்க முடிகிறது. நேற்று எங்கள் அலுவலக பிக்னிக்கிலும்  இசைக்கப்பட்ட முதல் பாடல் இதுதான். இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ள இந்தப் பாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா...

சிறுவன் நவீன் (பாடகர் சோனு நிகத்தின் மகன்) பாடுவதைக் கேளுங்கள் உங்களுக்கு மிகப்பிடிக்கும்.  இது டாப் சாங்கோ, பாப் சாங்கோ இல்லை. ஆனால் சூப் சாங். சூப்பர் சாங்.....வாழ்த்துக்கள் அனிருத்.

8 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கொலைவெறி உங்களையும் ஒரு பதிவிட வைத்திருப்பதில் மகிழ்ச்சி கலாநேசன்... நீண்ட இடைவெளி.... எல்லாம் நலம்தானே?

கலாநேசன் சொன்னது…

எல்லாம் நலம்தான் நண்பரே! தீபாவளிக்காக இரண்டு வாரம் ஊருக்குப் போனதில் ஏகப்பட்ட வேலைகள் சேர்ந்துவிட்டன. மீண்டும் தொடர முயற்சிக்கிறேன்.

ரஹீம் கஸாலி சொன்னது…

vaanga nanbaa. Neengkalum kolaveri patri eluthiyaacha?

G.M Balasubramaniam சொன்னது…

இது இளைஞர்களால் விரும்பப்படுகிறது,பிரபலங்களால் பேசப்படுகிறது,கலாநேசன் போன்றொர்களால் எழுதப் படுகிறது, அப்படி என்னதான் இருக்கிறது என்று என்னைப் போன்றோரால் கேட்கப்படுகிறது.இதுவே கொலவெறியின் மவுசுக்குக் காரணம். வெல்கம் பேக் கலாநேசன். !

கோவை2தில்லி சொன்னது…

ஆமாங்க. இங்க எல்லா இடத்திலும் இந்த பாடல் தான் .

கலாநேசன் சொன்னது…

@ ரஹீம் கஸாலி :நன்றி

கலாநேசன் சொன்னது…

@ G.M Balasubramaniam: நன்றி

கலாநேசன் சொன்னது…

@ கோவை2தில்லி :நன்றி

Quote

Followers